நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 21,22 2019

0

நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 21,22 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019

தேசிய செய்திகள்

ஆந்திர பிரதேசம்

விழியநகரத்தில் புதிய பட்டாம்பூச்சி பூங்கா திறப்பு

  • ஆந்திராவின் விழியநகரத்தில் வனத்துறை அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்ட பட்டாம்பூச்சி பூங்கா மற்றும் ஆமை விளக்க மையம் [Turtle Interpretation Centre] திறக்கப்பட்டது.

ஜம்மு & காஷ்மீர்

ஜம்மு & காஷ்மீரில் இரண்டு பாலங்களை திறந்து வைத்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர்

  • கத்துவா மாவட்டத்தில் 1000 மீட்டர் நீளமுள்ள உஜ் பாலம் மற்றும் சம்பா மாவட்டத்தில் 617.40 மீட்டர் நீளமுள்ள பசந்தர் பாலம் ஆகியவற்றை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.

கர்நாடகம்

நீர் பாதுகாப்பின் மிகவும் பொதுவான பாரம்பரிய அமைப்புகள்

  • கடலோர கர்நாடகாவில் பின்பற்றப்படும் மிகவும் பொதுவான நீர் பாதுகாப்புக்கான பாரம்பரிய பாதுகாப்பு முறைகளில் ஒன்று மதகா ஆகும். இது ஒரு தனித்துவமான பாரம்பரிய நீர் பாதுகாப்பு நடைமுறையாக இருந்தது. பெரிய நீர்ப்பிடிப்பு பகுதியில் ஒரு பக்கத்தில் வரப்பு போன்ற இயற்கை தடுப்புகள் அமைப்பதன் மூலம் சேறும் சகதியுமான நிலப்பரப்பில் பெரிய அளவிலான நீர் சேகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கானா

சி.சி.எம்.பி.யில் என்.எஸ்.ஜி வசதி

  • ஹைதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தில் அடுத்த தலைமுறைக்கான வரிசைமுறை (என்.எஸ்.ஜி) வசதியை சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் திறந்து வைத்தார். இந்த வசதியில் உயர் மரபணு வரிசைப்படுத்துதலுக்கான தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ மாதிரிகளைக் கண்டறியும் வரிசைமுறை ஆகியவை அடங்கும்.

உத்தரபிரதேசம்

இரண்டு புதிய திறன் மையங்கள் (CoE)

  • உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஸ்ரீ யோகி ஆதித்யநாத் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே ஆகியோருக்கு இடையில் லக்னோவில் நடைபெற்ற சந்திப்பில், இரண்டு சிறந்த திறமை மையத்தை (CoEs) அமைக்க கூட்டு முடிவு எடுக்கப்பட்டது – பிளம்பிங்கிற்கான சிறந்த திறமை மையம் கிரேட்டர் நொய்டாவிலும்; சேவைத் துறைக்கு வாரணாசியிலும் அமைக்கப்படவுள்ளது.

மேற்கு வங்கம்

பர்தாமன் ரயில் நிலையத்திற்கு பதுகேஷ்வர் தத்தின் பெயர் சூட்டப்பட உள்ளது

  • மேற்கு வங்காளத்தின் பர்தாமன் ரயில் நிலையத்திற்கு புரட்சிகர சுதந்திர போராட்ட வீரர் பதுகேஷ்வர் தத்தின் பெயர் சூட்டப்பட உள்ளது. பர்தாமன் மாவட்டத்தில் பிறந்த சுதந்திரப் போராளியான பதுகேஷ்வர் தத், டெல்லியில் உள்ள தேசிய சட்டமன்றத்தில் குண்டுகளை வீசியதற்காக பகத்சிங்குடன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியமனங்கள்

இந்திய ஜனாதிபதியின் இணை செயலாளராக ஸ்ரீ அஜய் படூ நியமனம்

  • ஐ.ஏ.எஸ். ஸ்ரீ அஜய் படூவை ஜனாதிபதியின் இணை செயலாளராக நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு (ஏ.சி.சி) ஒப்புதல் அளித்துள்ளது.

ஆறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்

  • ஆறு மாநிலங்களுக்கு ஆளுநர்களை ஜனாதிபதி நியமித்துள்ளார். மத்திய பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல் இப்போது உத்தரப்பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம், பீகார் ஆளுநராக இருக்கும் லால் ஜி டாண்டன் மத்திய பிரதேசத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
  • லால் ஜி டாண்டனுக்கு பதிலாக பீகார் ஆளுநராக பாகு சவுகான் நியமனம். மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக ஜகதீப் தங்கர், திரிபுராவின் ஆளுநராக ரமேஷ் பைஸ், நாகாலாந்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு செய்திகள்

டெஃப்எக்ஸ்போ இந்தியா -2020

  • இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பதினொன்றாவது பதிப்பு டெஃப்எக்ஸ்போ இந்தியா – 2020 முதல் முறையாக உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் பிப்ரவரி 2020 இல் நடைபெற உள்ளது. டெஃப்எக்ஸ்போ இந்தியா- 2020 இன் முக்கிய கருப்பொருள் – இந்தியா – வளர்ந்து வரும் பாதுகாப்பு உற்பத்தி மையம் மற்றும் பாதுகாப்புத்துறையின் டிஜிட்டல் உருமாற்றத்தில் கவனம் செலுத்தப்படும்.

விளையாட்டு செய்திகள்

400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹிமா தாஸ் தங்கம் வென்றார்

  • செக் குடியரசின் நோவ் மெஸ்டோவில் நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய ஸ்ப்ரிண்டர் ஹிமா தாஸ் 52.09 வினாடிகளில் பந்தய தூரத்தைக்கடந்து தங்கப்பதக்கம் வென்றார். கடந்த இருபது நாட்களில் ஹிமா தாஸ் வெல்லும் ஐந்தாவது தங்கப் பதக்கம் இதுவாகும். இந்த மாத தொடக்கத்தில் போலந்தில் நடந்த போஸ்னன் தடகள கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் குட்னோ தடகள சந்திப்பின் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹிமா ஏற்கனவே தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியா ஓபன் பைனல் பேட்மிண்டன்

  • ஜகார்த்தாவில் நடைபெற்ற இந்தோனேசியா ஓபன் BWF டூர் சூப்பர் 1000 பேட்மிண்டன் போட்டியின் இறுதிப் போட்டியில் பி வி சிந்து அகானே யமகுச்சியிடம் தோல்வி அடைந்தார்.

மிஸ்டர் தெற்காசியா பட்டத்தை வென்றார் இந்தியாவின் பாடிபில்டர் ரவீந்தர் மாலிக்

  • இந்திய பாடிபில்டர் ரவீந்தர் குமார் மாலிக் மிஸ்டர் தெற்காசியா பட்டத்தை வென்றார். காத்மாண்டுவில் நடைபெற்ற 12 வது தெற்காசிய உடற்கட்டமைப்பு மற்றும் உடலமைப்பு விளையாட்டு சாம்பியன்ஷிப்பில் ஒட்டுமொத்த சாம்பியனாக முடி சூட்டப்பட்டார் ரவீந்தர் மாலிக். அணிகளுக்கான பிரிவில் சாம்பியன்ஷிப்பை ஆப்கானிஸ்தான் வென்றது. இந்தியா நான்கு தங்கம், ஐந்து வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் Quiz – ஜூலை 21,22 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!