நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 13, 2019

0

நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 13, 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019

தேசிய செய்திகள்

நீர் பாதுகாப்பு கட்டமைப்புகளை CPWD அமைக்கவுள்ளது 
 • மத்திய பொதுப்பணித் துறை நாடு முழுவதும் 136 குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு முறைகள் உள்ளிட்ட நீர் பாதுகாப்பு கட்டமைப்புகளை அமைக்க உள்ளது .சிபிடபிள்யூடியின் 165 வது தொடக்க தினத்தை குறிக்கும் விழாவில் பேசிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார செயலாளர் துர்கா ஷங்கர் மிஸ்ரா, 100 நாள் நிகழ்ச்சி நிரலின் கீழ் 100 காலனிகளில் நீர் பாதுகாப்பு கட்டமைப்புகளை அமைப்பதை சிபிடபிள்யூடி நிறுவனம்  இலக்காகக் கொண்டுள்ளது என்றார் .

மேற்கு வங்காளம்

மேற்கு வங்க அரசு, நீர் சேமிப்பு தினத்தை அனுசரித்து.
 • மேற்கு வங்க அரசு ஜூலை 12,2019 யை நீர் சேமிப்பு தினமாக அனுசரித்து . மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது அரசாங்கம் 2011 ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மாநிலம் முழுவதும் குளங்களை தோண்டுவதற்கான ஒரு திட்டத்தைத் தொடங்கியதாக  கூறியுள்ளார். மேலும் நீர் பற்றாக்குறையை சமாளிக்க இதுவரை சுமார் 3 லட்சம் குளங்கள்  தோண்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

குஜராத்

குஜராத்தில் விமானத் தொழில் திறன் மேம்பாட்டுக்காக  சிறந்த மையங்கள்  உருவாக்கம்.
 • குஜராத் அரசு விமானத் துறையில் திறன் மேம்பாட்டுக்காக சிறந்த மையங்களை உருவாக்க உள்ளதாக அகமதாபாத்தில் நடைபெற்ற விமானத் துறையின்  வணிக வாய்ப்புகள் குறித்த 2 வது குஜராத் ஏவியேஷன் கான்க்ளேவ் மாநாட்டில் குஜராத் அரசின் சிவில் ஏவியேஷன் இயக்குநர் கேப்டன் அஜய் சவுகான் தெரிவித்து உள்ளார் .

அறிவியல்

விண்கல்லில் தரையிறங்கியது ஜப்பானின் ஹயாபூசா 2 ஆய்வு விண்கலம்
 • ஜப்பானின் ஹயாபூசா 2 ஆய்வு விண்கலம் “ரியுகு” என்றழைக்கப்படும் விண்கல்லில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சூரிய குடும்பத்தின் தோற்றம் குறித்து கண்டறிய இந்த ஆய்வு உதவும் என்று நம்பப்படுகிறது. ரியுகு விண்கல்லை குறித்த விவரங்களை பூமிக்கு அனுப்புவதுடன் அதன் மாதிரிகளையும் இந்த விண்கலம் சேகரிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 • ஜப்பானிய மொழியில் “ரியுகு” என்பதற்கு “டிராகன் அரண்மனை” என்று பொருள். ரியுகு, ஒரு பண்டைய ஜப்பானிய கதையில் கடலின் அடிப்பகுதியில் உள்ள ஒரு கோட்டையைக் குறிக்கிறது.

மாநாடுகள்

புதுதில்லியில்  இந்தியா யு.எஸ்.டி.ஆர் பேச்சுவார்த்தை.
 • இந்தியாவின் புதிய அரசாங்கத்தின் கீழ் இந்தியாவுடன் மேம்பட்ட இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஈடுபாட்டிற்கான சாத்தியங்களை ஆராய அமெரிக்க வர்த்தக பிரதிநிதி (யு.எஸ்.டி.ஆர்) இந்திய பிரதிநிதியடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்பு பேச்சு 12 ஜூலை 2019 அன்று இந்திய தூதுக்குழுவுடன் நடைபெற்றது. இரு தரப்பினரும் இருதரப்பு வர்த்தகம் மற்றும் வணிக உறவுகளின் பரந்த வரையறைகளைப் பற்றி விவாதித்தனர் மற்றும் பொருளாதார உறவை மேலும் வளர்ப்பது மற்றும் பரஸ்பர வர்த்தக பிரச்சனைகளை  நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட  நன்மை தரக்கூடிய  விளைவுகளை அடைவதற்கான விவாதங்களைத் தொடர ஒப்புக்கொண்டனர்.
விண்வெளி ஒத்துழைப்பு குறித்து இந்தியா, ரஷ்யா சந்திப்பு
 • இந்தியாவின் முதல் மனித விண்வெளி விமானப் பயணமான ‘ககன்யான்’ திட்டத்திற்கு உதவி உட்பட விண்வெளித் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்துவதற்காக இந்தியாவும் ரஷ்யாவும் புதுதில்லியில் உயர் மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. புதிய விண்வெளி அமைப்புகள், ராக்கெட் என்ஜின்கள், உந்துசக்திகள் மற்றும் உந்துவிசை அமைப்புகள், விண்கலங்கள் மற்றும் ஏவுகணை வாகன தொழில்நுட்பம் உள்ளிட்ட எதிர்கால தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
கர்தார்பூர் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் வாகாவில் சந்திக்க உள்ளனர்
 • நவம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் சிக்கிய குரு குருநானக்கின் 550 வது பிறந்த நாள் விழாவையொட்டி நவம்பர் மாதத்திற்குள் செயல்பட உள்ள கர்தார்பூர் நடைபாதையின்  இடைவெளி  குறைப்பு  உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இந்திய மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் அத்தாரி-வாகா எல்லையில் சந்திக்கவுள்ளனர். மேலும்  பாகிஸ்தானின் வாகாவில் இருநாட்டு பிரதிநிதிகள் கூடி ஜீரோ பாயிண்டில் இணைப்பு, யாத்ரீகர்களின் எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட வேண்டிய பயண ஆவணங்கள் குறித்தும்  விவாதிக்க உள்ளனர்.

நியமனங்கள்

உலக வங்கி MD மற்றும் CFO.
 • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குநரான அன்ஷுலா காந்த் உலக வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வமைப்பின் நிதி மற்றும் இடர் நிர்வாகத்திற்கும் அன்ஷுலா காந்த் பொறுப்பேற்கவுள்ளார்.
 • மேலும் அவரது பணியானது நிதி அறிக்கையின் மேற்பார்வை  , இடர் மேலாண்மை மற்றும் சர்வதேச அபிவிருத்தி சங்கம் (ஐடிஏ) மற்றும் பிற நிதி ஆதாரங்களை அணிதிரட்டுவது குறித்து உலக வங்கி தலைமை நிர்வாக அதிகாரியுடன் பணியாற்றுவது ஆகியவை அடங்கும். ஐடிஏ என்பது உலகின் மிக ஏழ்மையான  நாடுகளுக்கு உதவும் உலக வங்கியின் ஒரு பகுதியாகும்.

விருதுகள்

பத்திரிகைத் துறையில் சிறந்த பங்களிப்பிர்க்கான  தேசிய விருதுகள்,  2019 க்கு பிசிஐ  அழைப்பு விடுத்துள்ளது
 • இந்திய பத்திரிகை கவுன்சில், பத்திரிகைத் துறையில் சிறந்த பங்களிப்பிர்க்கான தேசிய விருதுகள் 2019 க்கு அழைப்பு விடுத்துள்ளது.ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் கொண்ட விருதுகள் எட்டு பிரிவுகளில் தரப்படவுள்ளன . அச்சு பத்திரிகையில் இந்திய தேசத்தின் ஊடகவியலாளர்கள்/புகைப்பட பத்திரிகையாளர்களின் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. நவம்பர் 16 அன்று தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு விருதுகள்  வழங்கப்பட இருக்கின்றன .

விளையாட்டு செய்திகள்

காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் லிஃப்டர் அஜய் சிங் தங்கம் வென்றார்
 • சமோவாவில் உள்ள அபியா நகரில் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய லிஃப்டர் அஜய் சிங் 81 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார். மேலும் 81 கிலோ பிரிவில் உள்ள மற்ற வீரரான பப்புல் சாங்மாய் மொத்தம் 313 கிலோ எடையை தூக்கி  வெள்ளிப் பதக்கம் வென்றார்.
உலக டூர் பிளாட்டினம் ஆஸ்திரேலிய ஓபன்
 • டேபிள் டென்னிஸில், உலக டூர் பிளாட்டினம் ஆஸ்திரேலிய ஓபனில் இந்திய ஜோடி ஜி.சத்யன் மற்றும் அந்தோணி அமல்ராஜ் ஜோடி வெண்கல பதக்கத்தை வென்றது.ஆஸ்திரேலிய ஓபனில் இந்தியாவின் முதல் பதக்கம் இதுவாகும்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 13 , 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!