நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 02, 2019

0

நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 02, 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019

முக்கியமான நாட்கள்

ஜூலை 2 – உலக யுஎஃப்ஒ தினம்
 • அடையாளம் தெரியாத பறக்கும் பொருளுக்கு ‘யுஎஃப்ஒ’ என்ற சொல் அமெரிக்க விமானப்படை அதிகாரி எட்வர்ட் ரூப்பெல்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. உலக யுஎஃப்ஒ தினத்தை 2001 ஆம் ஆண்டில் வேர்ல்டு யுஎஃப்ஒடே.காம் ஏற்பாடு செய்தது, மேலும் யுஎஃப்ஒவின் ஆர்வலர்களை ஒன்றிணைக்க மற்றும் யுஎஃப்ஒ யின் இருப்பை ஆதரிக்க அவர்கள் அனைவரும் சேகரித்த சான்றுகளை அங்கீகரிக்க இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

தேசிய செய்திகள்

வேளாண் சீர்திருத்தங்களுக்கான முதலமைச்சர்களின் குழுவை மத்திய அரசு அமைத்தது
 • இந்திய வேளாண்மையை மாற்றுவதற்காக பல மாநிலங்களின் முதலமைச்சர்களின் உயர் அதிகாரக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவிற்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமை தாங்க உள்ளார், கர்நாடகா, ஹரியானா, அருணாச்சல பிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேச முதல்வர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச செய்திகள்

ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகளை நியூசிலாந்து தடை செய்தது
 • ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகளை நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக தடை செய்துள்ளது. தடையை மீறும் நிறுவனங்களுக்கு கடுமையான தண்டனையாக 100,000 நியூசிலாந்து டாலர்கள் (67,000 அமெரிக்க டாலர்) அபராதம் விதிக்கப்படும். புதிய விதிகளின் கீழ், மெல்லிய பிளாஸ்டிக் ஒற்றை பயன்பாட்டு ஷாப்பிங் பைகளை இனி வழங்க தடை விதிக்கப்படுள்ளது, ஆனால் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிவிக்கப்பட்ட இந்த பிளாஸ்டிக் தடை சட்டம் இப்போழுது நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அணுசக்தி ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட யுரேனியம் வரம்பை ஈரான் மீறுகிறது
 • 2015 அணுசக்தி ஒப்பந்தத்தால் நிர்ணயிக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பான 300 கிலோகிராம் வரம்பை மீறிவிட்டது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஜரீஃப் கூறியுள்ளார்.

வணிகம் & பொருளாதாரம்

சோதனை அடிப்படையில் ஜிஎஸ்டியில் புதிய ரிட்டர்ன் முறை அறிமுகம்
 • சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) இரண்டாம் ஆண்டு விழாவில் அரசு புதிய ரிட்டர்ன் முறையை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த உள்ளது. இது இந்த ஆண்டு அக்டோபர் 1 முதல் நடைமுறை படுத்தப்படவுள்ளது. நடப்பு நிதியாண்டில் சிறு வரி செலுத்துவோருக்கான சஹாஜ் மற்றும் சுகம் ரிட்டர்ன் திட்டத்தை நிதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

திட்டங்கள்

ஜல்சக்தி அபியான் திட்டம்
 • மத்திய அரசு நீர் பாதுகாப்பு மற்றும் குறைந்து வரும் நீர் ஆதாரங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஜல் சக்தி அபியான் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜல் சக்தி அபியான் திட்டம் இரண்டு கட்டங்களாக தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டம் ஜூலை 1 முதல் செப்டம்பர் 15 வரை நடைபெறும், இதில் அனைத்து மாநிலங்களும் பங்குபெறும். இரண்டாம் கட்டம் அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரை நடைபெறும். இதில்பருவமழை பெய்யும் மாநிலங்கள் பங்கு பெறும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிப்பதற்கான தீர்மானத்திற்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது
 • மாநிலங்களவையிலும் ஒப்புதல் அளிக்கப்படத்தைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கக் கோரும் தீர்மானத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இது ஜூலை 3, 2019 முதல் நடைமுறைக்கு வரும். ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்த) மசோதா, 2019 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே இந்த இரண்டு மசோதாக்களும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆயுஷ் துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் ஒப்பந்தம்
 • ஆயுஷ் துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்காக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகங்கள் இடையே புதுதில்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் சுகாதாரத்துறையில் அதிக அளவில் ஆராய்ச்சி, கல்வி, பல்வேறு சுகாதார திட்டங்களை வழங்குதல் மற்றும் சிறந்த மருந்து விதிமுறைகளுடன், அனைத்து மட்டங்களிலும் சுகாதார பராமரிப்பு மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.
STRIDE-ன் புதிய முயற்சிக்கு யுஜிசி  ஒப்புதல்
 • இந்திய நாட்டின் வளரும் பொருளாதாரத்திற்கான டிரான்ஸ்-ஒழுங்கு ஆராய்ச்சிக்கான புதிய திட்டமான STRIDE-க்கு பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி) ஒப்புதல் அளித்துள்ளது, இத்திட்டத்தின் மூலம் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கலாச்சாரம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சியை  பலப்படுத்தும்.

பாதுகாப்பு செய்திகள்

15,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கப்பல்கள் மற்றும் படகுகள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் கோரிக்கை
 • 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடற்படை மற்றும் கடலோர காவல்படையினருக்கான 4 கப்பல்களை கட்டமைக்க, பல்வேறு கப்பல்கள் மற்றும் படகுகள் வாங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சகம் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

விளையாட்டு செய்திகள்

வைபவ் யாதவ் WBC ஆசிய பட்டத்தை வென்றார்
 • இந்திய ப்ரோ குத்துச்சண்டை வீரர் வைபவ் யாதவ் தாய்லாந்தின் பட்டாயாவில் நடைபெற்ற இறுதி போட்டியில் தாய்லாந்தின் ஃபாபெட்ச் சிங்மனாசக்கை தோற்கடித்து உலக குத்துச்சண்டை கவுன்சில் (WBC) ஆசியா வெள்ளி வெல்டர்வெயிட் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 01,02 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!