நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் – 23, 2019

0

நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் – 23, 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019 

முக்கியமான நாட்கள்

ஆகஸ்ட் 23 – அடிமைகள் வர்த்தக ஒழிப்பு நினைவு தினம்  
  • அடிமைகள் வர்த்தக ஒழிப்பு நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 23 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது அட்லாண்டிக் அடிமை வர்த்தகத்தை நினைவுகூருவதற்காக யுனெஸ்கோவால் நியமிக்கப்பட்ட நாள் . அடிமைகள் வர்த்தக ஒழிப்பு நினைவு தினம் முதன்முதலில் பல நாடுகளில் கொண்டாடப்பட்டது, குறிப்பாக ஹைட்டியில் (23 ஆகஸ்ட் 1998) மற்றும் செனகலில் கோரி (23 ஆகஸ்ட் 1999) கொண்டாடப்பட்டது.

தேசிய செய்திகள்

சான்-சாதன் ஹாகாதான் என அழைக்கப்படும் ஸ்வச் பாரத் மிஷனின் முயற்சி
  • ‘சான்-சாதன்’ ஹாகாதான் என அழைக்கப்படும் ஸ்வச் பாரத் மிஷனின் கீழ் அதன் சமீபத்திய முயற்சிக்கு அரசாங்கம் விண்ணப்பங்களை கோருகிறது,இது மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை (திவ்யாங்ஜன்) எளிதாக்குவதற்கான ஒரு முயற்சியாகும்.
  • அடல் புதுமை மிஷன், நிதி ஆயோக், பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, மற்றும் 91 ஸ்ப்ரிங் போர்டு ஆகியவற்றுடன் இணைந்து ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் அதிகாரமளித்தல் துறை இந்த முயற்சியை ஏற்பாடு செய்துள்ளது.

‘ஃபிட் இந்தியா இயக்கம்

  • பிரதமர் நரேந்திர மோடி ‘ஃபிட் இந்தியா இயக்கம்’ என்ற பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். இந்த நாடு தழுவிய பிரச்சாரம், அன்றாட வாழ்க்கையில் உடல் பயிற்சி மற்றும் விளையாட்டுகளை மக்களிடையில் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இயக்கம் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜு தலைமையில் 28 உறுப்பினர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம்

கான்பூரில் “புதுப்பிக்கப்பட்ட நவீன அலிம்கோ புரோஸ்டெடிக் & ஆர்த்தோடிக் மையம்”
  • உத்தரபிரதேசத்தின் கான்பூரில் உள்ள அலிம்கோ தலைமையகத்தின் ‘புதுப்பிக்கப்பட்ட அலிம்கோ ஆர்த்தோடிக்ஸ் மற்றும் புரோஸ்டெடிக் சென்டரை (ஏஓபிசி)  மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ஸ்ரீ தாவர்சந்த் கெஹ்லோட் திறந்து வைத்தார்.

அசாம்

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அசாமின்  தீப்பர் பீலுக்கான சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலக் குறியீட்டை நாடியுள்ளது
  • குவஹாத்தியின் மேற்கு விளிம்பில் உள்ள தீப்பர் பீலைச் சுற்றியுள்ள பகுதியை ஒரு முக்கிய ஈரநிலமாகவும் , சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாகவும் அறிவிக்குமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) அசாம் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. தீப்பர் பீல் ஒரு ‘முக்கியமான பறவை பகுதி’ மற்றும் ராம்சார் தளமாகும் மேலும் அதன் அருகில்  ரிசர்வ் காடுகளையும்  கொண்டுள்ளது.சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் என்பது ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியை சுற்றி 10 கி.மீ வரை இடையக மண்டலமாக அறிவித்து தொழில்துறை மற்றும் பிற மனித நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகிறது.

சர்வதேச செய்திகள்

ஈரானின் Bavar பவர் -373 ஏவுகணை
  • ஈரான் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நீண்ட தூர, தரையிலிருந்து விண்ணைத்தாக்கும்  அமைப்பான Bavar  பவர் -373 ஏவுகணையை வெளியிட்டது. ஆயுதங்களை இறக்குமதி செய்வதற்கு சர்வதேச தடைகளை எதிர்கொண் ஈரான் ஒரு பெரிய உள்நாட்டு ஆயுதத் தொழிலை உருவாக்கியுள்ளது.
  • இந்த நீண்ட தூர வான் பாதுகாப்பு அமைப்பால் 300 கிமீ (190 மைல்) க்கு மேல் உள்ள   இலக்குகள்  அல்லது விமானங்களைக் கண்டறிந்து, அதை 250 கிமீ தொலைவில் லாக் செய்து ,200 கிமீ தொலைவில் அழிக்க  முடியும்.
அமெரிக்கா-இந்தியா 2 + 2 உரையாடல் 
  • இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் அதிகரித்த நிலையில், “முக்கியமான பாதுகாப்பு முன்னுரிமைகள் மீதான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க “அமெரிக்கா-இந்தியா 2 + 2 உரையாடலின் ஒரு சந்திப்புக் கூட்டத்தை, அமெரிக்கா கலிபோர்னியாவில்  நடத்துகிறது. மூலோபாய கூட்டாட்சியை வலுப்படுத்துதே  இந்த கூட்டத்தின்  நோக்கமாகும்.
எவரெஸ்ட் பிராந்தியத்தில் நேபாளம் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளை தடை செய்கிறது
  • ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளை தடை செய்வதன் மூலம் நேபாளம் 2020 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் பிராந்தியத்தை பிளாஸ்டிக் இல்லாத மண்டலமாக மாற்றும், இந்த பிளாஸ்டிகை தடை செய்வதன் மூலம் பூமியின் மேற்பரப்பின் மிக உயர்ந்த இடத்தில் அதிகப்படியான மாசுபாட்டைக் கட்டுப்படுத்தலாம். இந்த புதிய விதி 2020 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று நேபால் அரசு அறிவித்துள்ளது.

விண்வெளி அறிவியல்

ரஷ்யா தனது முதல் மனித ரோபோவான  ஃபெடரை விண்வெளிக்கு அனுப்புகிறது
  • சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்களுக்கு உதவ விண்வெளியில் 10 நாட்கள் பயிற்சி பெற உள்ள  மனித ரோபோவை சுமந்து செல்லும் ஆளில்லா ராக்கெட்டை ரஷ்யா ஏவியது. அந்த மனித ரோபோட்டிற்கு ஃபெடோர் என்று பெயரிடப்பட்டது, இந்த ரோபோ ரஷ்யாவால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் ரோபாவாகும்

புரிந்துணர்வு ஒப்பந்தம் & அமைச்சரவை ஒப்புதல்

AWHO மற்றும் டாடா ரியால்டி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
  • 22 ஆகஸ்ட் 2019 அன்று இந்திய இராணுவத்தின் இராணுவ நல வீட்டுவசதி அமைப்பு (AWHO) மற்றும் டாடா ரியால்டி & ஹவுசிங் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.டாடா ரியால்டியின் 1313 ‘Ready to Move in’’ திட்டங்களில் உள்ள வசிக்கக்கூடிய பகுதிகளை உடனடியாக இந்திய ராணுவ வீரர்களுக்கு கையகப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவுகிறது.

நியமனங்கள்

இந்தியாவின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பங்கருக்கு பதிலாக விக்ரம் ரத்தூர் நியமிக்கப்பட்டுள்ளார்
  • முன்னாள் தொடக்க வீரர் விக்ரம் ரத்தோர் சஞ்சய் பங்கருக்கு பதிலாக இந்தியாவின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படுள்ளார், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்களாக பரத் அருண் மற்றும் ஆர். ஸ்ரீதர் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். 50 வயதான ரத்தூர் 1996 இல் ஆறு டெஸ்ட் மற்றும் ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

விளையாட்டு  செய்திகள்

WADA இந்தியாவின் தேசிய டோப் சோதனை ஆய்வகத்தை இடை நீக்கம்செய்துள்ளது
  • டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு ஒரு வருடத்திற்கும் குறைவான கால அவகாசம் உள்ள நிலையில், இந்திய ஊக்கமருந்து தடுப்பு ஆய்வகத்தின் (என்.டி.டி.எல்) அங்கீகாரத்தை உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் (வாடா) ஆறு மாதங்களுக்கு இடை நீக்கம் செய்துள்ளது. இது ஊக்கமருந்து எதிர்ப்பு இயக்கத்திற்கு பெரிய அடியாக இருக்கும்.

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!