நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 9, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 9, 2019

தரவரிசைகள்:

ஐஐடி-சென்னை NIRF உயர் கல்வி தரவரிசையில் முதலிடம் வகிக்கிறது

  • ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், NIRF உயர் கல்வி தரவரிசைகளை அறிவித்தார் அதில் இந்திய தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை (ஐஐடி-சென்னை) மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் முதலிடம் வகிக்கிறது, இரண்டாம், மூன்றாம் இடத்தை இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு, மற்றும் ஐஐடி-தில்லி ஆகிய கல்வி நிறுவனங்கள் பெற்றுள்ளது.

நியமனங்கள்:

கிரஹாம் ரீட் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்

  • ஹாக்கி இந்தியா, இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் நியமனத்தை உறுதிசெய்துள்ளது. முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் ஹாக்கி வீரரான இவர் ஆஸ்திரேலிய மற்றும் நெதர்லாந்தின் தேசிய அணிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார்.

மாநாடுகள்:

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 க்கான தரவு பயன்பாட்டார்களின்  மாநாடு

  • 140 ஆண்டு கால மக்கள்தொகை கணக்கெடுப்பு வரலாற்றில் முதன்முறையாக, மொபைல் பயன்பாடு செயலி மூலம் தகவல்கள் சேகரிக்க முயற்சி என இந்திய பதிவாளர் ஜெனரல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர், மற்றும் தகவல் சேர்க்க பயன்படும் முயற்சி வியூகங்கள் மற்றும் பெறவேண்டிய தகவல் சம்மந்தமான கேள்விகள் குறித்த தரவு பயன்பாட்டார்களின் மாநாடு நடைபெற்றது.

 வணிகம் & பொருளாதார நிகழ்வுகள்:

உலக வங்கி அறிக்கை மூலம் 2018 ஆம் ஆண்டில் பணம் அனுப்புவதில் இந்தியா முதலிடம்

  • 2018 ஆம் ஆண்டில் தன் சொந்த நாட்டிற்கு புலம்பெயர்ந்தோர் பணம் அனுப்புவதில் உலகின் மிகப்பெரிய பெறுநராக இந்தியா தனது முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. கேரளாவில் வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ள குடும்பங்களுக்கு 14% க்கும் அதிகமான பணம் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

OYO நிறுவனம் ஒன்பது மாதங்களில் 1 மில்லியன் உறுப்பினர்களை அடைந்துள்ளது

  • ஓயோ ஹோட்டல் அண்ட் ஹோம்ஸ், தெற்காசியாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் குத்தகைக்கு விடப்பட்ட மற்றும் உரிமையாக்கப்பட்ட ஹோட்டல்கள், வீடுகள் மற்றும் வாழ்விடங்கள் அமைதி தரும் நிறுவனம், OYO இந்தியாவின் மிகப்பெரிய விருந்தோம்பல் வாய்மை திட்டம்,ஒன்பது மாதங்களில் 1 மில்லியன் உறுப்பினர்களை அடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது

அறிவியல் கண்டுபிடிப்புகள்:

ஒளிச்சேர்க்கையில் ஈடுபடாமல் குளோரோபிளை உற்பத்தி செய்யும் புதிய உயிரினத்தை கண்டுபிடித்துள்ளனர்

  • ஒரு சமீபத்திய ஆய்வில் முதன்முறையாக ஆராய்ச்சியாளர்கள், 70% பவளப்பாறைகளைக் கொண்ட “corallicolid” என்ற ஒளிச்சேர்க்கையில் ஈடுபடாமல் குளோரோபிளை உற்பத்தி செய்யும் உயிரினத்தை கண்டுபிடித்துள்ளனர்.

சர்வதேச நிகழ்வுகள்:

இஸ்தான்புல் உலகின் மிகப்பெரிய விமான நிலையத்தை திறந்துள்ளது

  • புதிய இஸ்தான்புல் விமான நிலையம்,உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக பதிவாகியுள்ளது. இந்த விமான நிலையத்தால் வருடத்திற்கு 90 மில்லியன் பயணிகளை கையாள முடியும் என்று கூறப்படுகிறது.

  லண்டன் 24×7 மாசு கட்டுப்பாட்டு கட்டணம் வசூலிக்கும் முதல் நகரம் ஆனது

  • சிறப்பு அல்ட்ரா குறைந்த உமிழ்வு மண்டலம் (ULEZ) என்னும் திட்டத்தை செயல்படுத்தும் முதல் நகரம் லண்டன் ஆகும், இங்கு உமிழ்வு தரங்களை பூர்த்தி செய்யாத பழைய வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை செயல் படுத்தியுள்ளது.

பாதுகாப்பு நிகழ்வுகள்:

இந்திய இராணுவத்தின் Bofors பீரங்கி துப்பாக்கிகளின் (தனுஷ்) முதல் தொகுதி OFB இலிருந்து பெறப்பட்டது

  • தி ஆர்டின்ஸ் தொழிற்சாலை வாரியம் (OFB) ஆறு Bofors பீரங்கித் துப்பாக்கிகளின் முதல் தொகுதி இராணுவத்திற்கு அளித்தது. 1980 களில் சேகரிக்கப்பட்ட ஸ்வீடிஷ் போஃபர்ஸ் துப்பாக்கியின் தனித்தன்மையான துப்பாக்கியே தனுஷ் ஆகும்.

விளையாட்டு நிகழ்வுகள்:

கிங் கோப்பை ஜூன் 2019

  • இந்திய கால்பந்து அணி ஜூன் மாதத்தில் தாய்லாந்தில் நடைபெறும் கிங்ஸ் கோப்பை போட்டியில் விளையாட உள்ளது.
ஏப்ரல் 9 நடப்பு நிகழ்வுகள்  வீடியோ – கிளிக் செய்யவும்

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here