நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 01, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 01, 2019

தேசிய நிகழ்வுகள்

ஆதாருடன் பான் (PAN) எண்ணை இணைக்க கடைசி தேதி செப்டம்பர் 30, 2019

  • மத்திய அரசு ஆதாருடன் எண்ணுடன் நிரந்தர கணக்கு எண் (PAN) ஐ இணைக்கம் கடைசி தேதியை செப்டம்பர் 30 வரை ஆறு மாதங்கள் நீட்டித்துள்ளது.

ஏப்ரல் 1 ம் தேதி முதல் MGNREGA ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல்

  • தேர்தல் ஆணையம் ஏப்ரல் 1 ல் இருந்து 100 நாள் (MGNREGA) வேலை திட்டத்தின் கீழ் ஊதியங்களை மீளமைக்க கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்றுள்ளது.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் (MGNREGA) கீழ் வழங்கப்பட்ட ஊதியங்கள் விவசாயத் தொழிலாளர்களுக்கு (CPI-AL) நுகர்வோர் விலை குறியீட்டுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன மற்றும் புதிய ஊதிய விகிதங்கள் புதிய நிதி ஆண்டின் தொடக்கத்தில் ஏப்ரல் 1 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா

ஒடிசா 84 வது ‘உக்கல் திவாஸ்’

  • ஒடிசா அதன் உருவாக்க தினத்தின் 84வது ஆண்டு நிறைவை கொண்டாடியது. 1936 ல் ஒடிசா மாகாணத்தை உருவாக்குவதற்காக மக்கள் செய்த தியாகங்களை நினைவுகூறும் நாள் எனப்படும் ‘உக்கல் திவாஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது.
  • இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன், மொழியியல் அடிப்படையில் உருவான முதல் மாநிலம் ஒடிசா என்பது குறிப்பிடத்தக்கது . 1936 ஆம் ஆண்டுக்கு முன்னதாக ஒடிசா பீகாரில் ஒரு பகுதியாக இருந்தது.

தெலுங்கானா

உலக பாரம்பரிய தளமாக ராமப்பா கோயில் அமையவுள்ளது

  • தெலுங்கானா தனது முதல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தை பெறவுள்ளது, வாரங்கல் அருகே உள்ள பாலம்பேட்டிலுள்ள ராமப்பா கோவில் ஆகும்

 சர்வதேச நிகழ்வுகள்:

மொசாம்பிக் முதல் காலரா நோய் மரணத்தை உறுதிப்படுத்துயுள்ளது

  • மொசாம்பிக் நாட்டின் சூறாவளியால் பாதிக்கப்பட்ட நகரமான பைராவில் காலரா நோய் தாக்கத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதை உறுதி செய்துள்ளது, இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 517 ஆக உயர்ந்துள்ளது.
  • கலரா நீர் மற்றும் உணவுகளால் பரவுகிறது.

நருஹியோவின் புதிய சகாப்தம் ‘ரெய்வா’

  • ஜப்பானின் வரவிருக்கும் நருஹியோவின் புதிய சகாப்தத்தின் பெயர் “ரெய்வா” என அரசாங்கம் அறிவித்துள்ளது.
  • 200 ஆண்டுகளில் ஏசிட்டோ பேரரசர் ஏப்ரல் 30 அன்று பதவியில் இருந்து இறங்கவுள்ளார் இதுவே “Heisei” சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வரவுள்ளது. புதிய சகாப்தம் மே 1 முதல் அமலுக்கு வருகிறது.

கோலன் மீதுதான அமெரிக்க நடவடிக்கைகளுக்கு அரபு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்

  • கோலான் உயரங்களள் மீது இஸ்ரேலின் இறையாண்மையை அங்கீகரிப்பதற்கான யு.எஸ் முடிவு குறித்து அரபு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர் மற்றும் மேற்கு ஆசியத்தின் உறுதிப்பாடு ஒரு பாலஸ்தீனிய அரசை உருவாக்கியது எனவும் கூறியுள்ளனர்.

அறிவியல் & விஞ்ஞானம்

இஸ்ரோ வெற்றிகரமாக EMISAT ஐ விண்ணில் செலுத்தியது

  • ஆயுதப்படைகளுக்கு உளவுத்துறை விவரங்களை வழங்கம் செயற்கைகோள் EMISATஐ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (ISRO) ஸ்ரீஹரிகோட்டை விண்வெளி நிலையத்திலிருந்து விண்ணில் செலுத்தியது.
  • PSLV-C45 EMISAT ஐ 748 கி.மீ. சுற்றுப்பாதையிலும் மற்றும் 28 பிற செயற்கைக்கோள்களை 504 கிமீ சுற்றுப்பாதையிலும் வெற்றிகரமாக செலுத்தியது.

 நாசாவின் செவ்வாய் வானூர்தி (ஹெலிகாப்டர்) விமான சோதனைகளை முடித்துவிட்டது

  • நாசாவின் செவ்வாய் ஹெலிகாப்டர், மெல்லிய வளிமண்டலத்தில் குறைந்த புவியீர்ப்புடன் பறக்க வடிவமைக்கப்பட்டுள்ளது, இது தனது விமான சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து.
  • 2020 ஆம் ஆண்டில் சிவப்பு கோல் (Red Planet) பயணத்திற்கு பயணிக்க தயாராக உள்ளது. ஹெலிகாப்டர் 2021 பிப்ரவரி மாதம் சிவப்பு கோல் (Red Planet) மேற்பரப்பில் அடைய திட்டமிடப்பட்டுள்ளது.

வணிகம் & பொருளாதாரம்:

விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி பேங்க் ஆப் பரோடாவுடன் இணையவுள்ளது

  • விஜயா வங்கி மற்றும் தேனா வங்கிகளை பேங்க் ஆப் பரோடா (BoB) உடன் இணைத்து , ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) மற்றும் ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கி ஆகியவற்றிற்கு பின்னர் நாட்டின் மூன்றாவது பெரிய கடன் வழங்கும் வங்கியாக உருவாக்கப்பட உள்ளது

நியமனங்கள்

  • சோஹைல் மஹ்மூத் – இஸ்லாமாபாத்தில் வெளியுறவு செயலாளர் (இவர் பாக்கிஸ்தானின் தற்போதைய உயர் ஆணையர் ஆவர்)

விளையாட்டு நிகழ்வுகள்:

ஆசிய ஏர்கன் (AirGun) சாம்பியன்ஷிப்

  • இதுவரை 14 தங்கப் பதக்கங்களில் 12 தங்கப்பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது, மற்றும் நான்கு வெள்ளி, இரண்டு வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ளது. திவ்யாஞ் சிங் பன்வார் மற்றும் இளவெனில் வளறிவன் 10 மீ ஏர் துப்பாக்கி சுடுதல் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா ஒரு தங்கம் பதக்கம் வென்றுள்ளனர்.

பஹ்ரைன் கிராண்ட் பிக்ஸ்

  • ஐந்து முறை உலக சாம்பியன் லூயிஸ் ஹாமில்டன் மெர்சிடஸ் அணிக்காக பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் வென்றார். வால்டெரி போடாஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

ஆஸ்திரேலியா பாக்கிஸ்தான் ஒருநாள் தொடர்

  • இறுதி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடர் 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது.

ஏப்ரல் 1 நடப்பு நிகழ்வுகள் video – கிளிக் செய்யவும்

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!