நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 28 2018

0

நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 28 2018

தேசிய செய்திகள்

ஹிமாச்சல பிரதேசம்

  • மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மண்டியில் இமாச்சல பிரதேசத்திற்கான அவசரநிலை பதில் ஆதரவு அமைப்பை (ERSS) தொடங்கி வைத்தார்.
  • இ.ஆர்.எஸ்.எஸ்-ன் கீழ் ‘112’ என்ற பான்-இந்தியா ஒற்றை அவசர எண்ணை அறிவித்த முதல் மாநிலமாக ஹிமாச்சல பிரதேசம் திகழ்கிறது.

மகாராஷ்டிரா

நீண்ட இடைவெளிக்குப் பிறகு துணை சபாநாயகர் பெறும் சட்டமன்றம்

  • நவம்பர் 30ம் தேதி மகாராஷ்டிர சட்டமன்றம் நான்கு ஆண்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு துணை சபாநாயகருக்கான தேர்தல் நடத்தி தேர்வு செய்யவுள்ளது.

மகாராஷ்டிரா விவசாய உற்பத்தியாளர்களுக்கான சந்தைப்படுத்தல் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்தை அரசு திரும்பப் பெறுகிறது

  • மகாராஷ்டிரா அரசாங்கம் கீழவையில் அறிமுகப்படுத்திய மகாராஷ்டிரா விவசாய உற்பத்தியாளர்களுக்கான சந்தைப்படுத்தல் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்தை திரும்பப் பெற்றது.

வட கிழக்கு மாநிலங்கள்

நகர்ப்புற திட்டங்களின் முன்னேற்றத்தின் விரிவான ஆய்வு

  • 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி வட கிழக்கு மாநிலத்தின் எட்டு மாநிலங்களில் நகர்ப்புற திட்டங்களின் முன்னேற்றத்தின் விரிவான ஆய்வை மாநில வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் (I / C) ஹர்தீப் சிங் பூரி மேற்கொள்வார்.

தமிழ்நாடு

புயல் நிவாரண பொருள்களை இலவசமாக கொண்டுசெல்ல இரயில்வே அனுமதி

  • டிசம்பர் 10 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் புயலால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் இலவசமாக கொண்டு செல்லப்படும் என்று இந்திய இரயில்வே அறிவித்தது.

அறிவியல் செய்திகள்

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி சி-43 கவுண்டவுன் தொடங்கியது

  • 31 செயற்கைக்கோள்களை சுமந்து செல்வதற்காக பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் உருவாக்கப்பட்டது. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் தொடங்கியது.
  • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் “ஹைசிஸ்” (ஹைபர் ஸ்பெக்ரல் இமேஜிங் சாட்டிலைட்) எனும் அதிநவீன செயற்கைகோளை இது சுமந்து செல்லும். 

வணிகம் & பொருளாதாரம்

ஆர்.பி.. சர்வேயை துவக்கியுள்ளது

  • இந்தியாவின் ஸ்டார்ட் அப் துறையின் ஒரு சுயவிவரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் வருவாய், இலாபங்கள் மற்றும் பணியாளர்கள் பொறுத்து அளவிடும் ஒரு ஆய்வை ரிசர்வ் வங்கி துவக்கியுள்ளது. 

தரவரிசை & குறியீடு

ஐசிசி மகளிர் டி20 தரவரிசை

  • ஐசிசி பெண்கள் டி20 சர்வதேச டாப் 5 தரவரிசைப் பட்டியலில் நுழைந்து மூன்றாம் இடம் பிடித்தார் இந்திய அணியின் ஹர்மன் பிரீத் கவுர்.

மாநாடுகள்

ஜி -20 உச்சிமாநாடு

  • பிரதமர் நரேந்திர மோடி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஏர்ஸில் நடைபெறும்13 வது ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க தனது பயணத்தை தொடங்கினார்.
  • 2018 தீம் – Building Consensus for a Fair and Sustainable Development.

கடல்சார் பொருளாதார மாநாடு

  • நைரோபியில் நடைபெறும் கடல்சார் பொருளாதார மாநாட்டில் உரையாற்ற உள்ளார் மத்திய அமைச்சர் திரு. நிதின் காட்காரி.
  • இந்த மாநாட்டிற்கு கனடா மற்றும் ஜப்பானுடன் இணைந்து கென்யா ஏற்பாடு செய்துள்ளது.

சவுதிஇந்தியா வணிகக் கூட்டம்

  • சவுதி அரேபியா இராச்சியத்திற்கு இந்திய உள்கட்டமைப்பு மற்றும் வீட்டுத் தூதுக்குழுவின் வருகையின் போது சவுதி அரேபியாவின் சபை சேம்பர்ஸ் குழுவுடன் சவுதி-இந்தியா வணிக கூட்டம் நடைபெற்றது.

புலனாய்வு முகமைகள் தலைவர்களின் இரண்டாவது தேசிய மாநாடு

  • காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், டாக்டர் ஆனந்த்ஸ்வரூப் குப்தா நினைவு சொற்பொழிவு மற்றும் புலனாய்வு முகமைகளின் தலைவர்கள் பங்கேற்கும் இரண்டாவது தேசிய மாநாடு புதுதில்லியில் தொடங்குகிறது.
  • மாநாட்டின் கருப்பொருள் – “புதுயுகக் குற்றங்களில் காவல்துறையின் நடவடிக்கை”. 

நியமனங்கள்

  • சுனில் அரோரா – தலைமை தேர்தல் ஆணையர்
  • ஏ.எம். நாயக் – தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தலைவர்

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஏடிபி மற்றும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் ஒப்பந்தம்

  • கர்நாடகாவின் நான்கு கரையோர நகரங்களில் நீர் விநியோக திட்டத்திற்காக ஆசிய வளர்ச்சி வங்கி ஏடிபி 75 மில்லியன் டாலர் கடன் வழங்கும். புது டில்லியில் இது தொடர்பான கடன் குறித்த ஒப்பந்தம் புது டெல்லியில் கையெழுத்திடப்பட்டது.

ஏழைகளுக்கு 2 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளை கட்டித்தர அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது

  • நகர்ப்புற ஏழைகளின் நன்மைக்காக இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மலிவு வீடுகளை கட்டித்தர வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் ஒப்புதல் அளித்துள்ளது.

விளையாட்டு செய்திகள்

செஸ் உலக சாம்பியன்ஷிப்

  • செஸ் உலக சாம்பியன்ஷிப் பட்டம் லண்டனில் வேகமான டைபிரேக்கர் விளையாட்டு மூலம் முடிவு செய்யப்படும், உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் அமெரிக்க போட்டியாளர் பேபியானோ கருவானா இடையே இந்த போட்டி நடைபெறும்.

பிசிசிஐ வயது மோசடிகளுக்கு தடையை இரட்டிப்பு ஆக்கியது

  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) வயது மோசடிகளுக்கு தடையை இரட்டிப்பு ஆக்கியது.
  • இதற்கு முன்னதாக, கிரிக்கெட் வீரர் ஒரு ஆண்டு காலம் தடை விதிக்கப்படுவர்.

ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை

  • பூபனேஸ்வரில் நடைபெறும் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் இந்தியா மோதுகிறது.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!