நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 17 2018

0

நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 17 2018

தேசிய செய்திகள்

ஜம்மு மற்றும் காஷ்மீர்

மத்திய மின்சாரத் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்கான பேனல்கள்

 • ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு மாநிலத்தில் மத்திய மின் திட்டங்களை திறம்பட செயல்படுத்த பேனல்களை அமைத்துள்ளது.

கர்நாடகம்

டெலிகாம் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் சோதனைக்கான வசதி

 • தேசிய அளவில் டிஜிட்டல் தகவல்தொடர்புகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் உபகரணங்களை பரிசோதிப்பதற்காக பெங்களூரில் ஒரு வசதி துவங்கப்பட்டுள்ளது.
 • தொலைத் தொடர்புத் துறை, மொபைல் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்கள் உட்பட சில தொலைத் தொடர்பு தயாரிப்புகளை ஏப்ரல் 2019 க்குள் கட்டாயமாக சோதனை செய்யப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

மேகாலயா

ஏகலைவா மாதிரி குடியிருப்பு பள்ளிகள் அமைக்க திட்டம்

 • மேகாலயாவில் மூன்று வருட காலத்திற்குள் 20 கோடி ரூபாய் செலவில் 36 ஏகலைவா மாதிரி குடியிருப்பு பள்ளிகளை அமைக்கத் (EMRS) திட்டம்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் ஸ்வச்ச பாரத் மிஷன் மூலம் 60 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டன

 • ஒவ்வொரு குடிமகனும் சுத்தமான கழிப்பறையை எளிதாக அணுகுவதை உறுதி செய்வதற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் 60 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டன. மகாராஷ்டிராவைச் சேர்த்து தற்போது மொத்தம் 25 இந்திய மாநிலங்கள் திறந்த வெளிக்கழிப்பிடம் இல்லாத மாநிலங்களாக உள்ளன.

சர்வதேச செய்திகள்

புதிய அரசாங்கத்திற்கு எதிராக மற்றொரு நம்பிக்கையில்லா தீர்மானம்

 • மஹிந்த ராஜபக்ஷவின் புதிய அரசாங்கத்திற்கு எதிராக இலங்கை பாராளுமன்றத்தில் மற்றொரு நம்பிக்கையற்ற தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

ஈரான் இரசாயன ஆயுத ஒப்பந்தத்தை மீறுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது

 • இரசாயன ஆயுதங்களை தடை செய்யும் ஒரு சர்வதேச ஒப்பந்தத்தை மீறுவதாக ஈரானை குற்றம் சாட்டுவதற்கு ட்ரம்ப் நிர்வாகம் தயாராக உள்ளது. 1997 ஆம் ஆண்டு போடப்பட்ட இரசாயன ஆயுதங்கள் ஒப்பந்தத்தை ஈரான் கடைப்பிடிக்கவில்லை, இது இரசாயன ஆயுதங்களை உற்பத்தி, கையிருப்பு மற்றும் பயன்பாடு ஆகியவற்றை சட்டவிரோதமாக்குகிறது.

ரோஹிங்கியாவிற்கு எதிரான உரிமை மீறலுக்கு .நா. குழு கண்டனம் தெரிவித்தது

 • மியன்மாரில் வெளிநாட்டினராக நடத்தப்படும் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எதிரான “மனித உரிமை மீறல்கள் மற்றும் தவறான நடவடிக்கைகளுக்கு” ஐ.நா. குழு கண்டனம் தெரிவித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

அறிவியல் செய்திகள்

விலங்கு உயிரணுக்களிலிருந்து வளர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை ஒழுங்குபடுத்துதல்

 • அமெரிக்காவில் “ஆய்வக இறைச்சி” என்று அழைக்கப்படும் விலங்கு உயிரணுக்களிலிருந்து வளர்க்கப்படும் உணவுப் பொருட்களை ஒழுங்குபடுத்தி அதை உண்பதற்கான வழியை ஏற்படடுத்த ஒப்புக் கொண்டது.

நியமனங்கள்

 • நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் சாஹி – பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

திட்டங்கள்

பிரதான் மந்திரி கிருஷி சின்சாயி யோஜனா (PMKSY)

 • பிரதான் மந்திரி கிருஷி சின்சாயி யோஜனாவின் (PMKSY) கீழ் உத்திரபிரதேச விவசாயிகள் புதிய பாசன நுட்பங்களை பயன்படுத்துகின்றனர்.
 • இந்தியாவின் எல்லாப் பகுதியிலும் உள்ள விவசாய நிலங்கள் அனைத்திற்கும் ஏதேனும் ஒரு உத்திரவாதமான பாசன வசதியை ஏற்படுத்தி நீர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை அவர்களுக்குத் தருவதே பிரதமரின் வேளாண் பாசனத் திட்டத்தின் நோக்கமாகும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கற்பழிப்பு மற்றும் POCSO வழக்குகளை முடிக்க 1000 ஃபாஸ்ட் டிராக் நீதிமன்றங்கள் அகற்றும்

 • நாடு முழுவதும் பாலியல் மற்றும் POCSO சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க ஆயிரம் ஃபாஸ்ட் ட்ராக் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

சுற்றுச்சூழல் அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு உள்ளூர் சபைகளுக்கு அரசு அனுமதி

 • 20,000 முதல் 50,000 சதுர மீட்டர் வரை இருக்கும் கட்டிடங்கள், கட்டுமானம் மற்றும் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றிற்கான சுற்றுச்சூழல் நிலைமைகளை நிறைவேற்றுவதற்கு அரசு உள்ளூர் சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கியுள்ளது.

அரசியலமைப்பின் 6 வது அட்டவணையில் சட்டதிருத்தம்

 • அரசியலமைப்பின் 6 வது அட்டவணையில் சட்டதிருத்தத்தின்படி, தன்னாட்சி மாவட்ட கவுன்சில்களுக்கு நேரடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

விளையாட்டு செய்திகள்

U-23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்

 • ருமேனியாவின் புச்சாரெஸ்டில் நடைபெறும் சீனியர் U-23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய மல்யுத்த வீரர் ரவி குமார் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!