நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 21 2019

0

நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 21 2019

முக்கியமான நாட்கள்

பிப்ரவரி 21 – சர்வதேச தாய் மொழி தினம்

  • 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையும் பன்மொழி அறிவையும் ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச தாய் மொழி தினம் கொண்டாடப்படுகிறது.
  • தீம்வளர்ச்சி, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தில் ஒரு காரணியாக உள்நாட்டு மொழி இருக்கும். 

தேசிய செய்திகள்

ஆந்திரப் பிரதேசம்

அகில இந்திய வானொலி FM நிலையம்

  • ஆந்திர மாநிலம் நெல்லூரில் அகில இந்திய வானொலி FM நிலையத்தை துணைக் குடியரசுத் தலைவர் எம். வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

ஹிமாச்சல பிரதேசம்

காங்ரா மாவட்டத்தில் மத்திய பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

  • மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய் ராம் தாகூர் காங்க்ரா மாவட்டம் டெஹராவில் மத்திய பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டினர்.

புது தில்லி

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நான்கு அவசரச் சட்டத்தை பிரகடனம் செய்தார்

  • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நான்கு அவசரச் சட்டத்தை பிரகடனம் செய்தார். முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) இரண்டாவது அவசரச் சட்டம், இந்திய மருத்துவ கவுன்சில் (சட்டதிருத்தம்) இரண்டாம் அவசரச் சட்டம், நிறுவனங்கள் (சட்டதிருத்தம்) இரண்டாம் அவசரச் சட்டம் மற்றும் கட்டுப்பாடற்ற வைப்புத் திட்டங்களை தடை செய்யும் சட்டத்திருத்தம், 2019.

டிஜிட்டல் பாரத், சாக்ஷம் பாரத்

  • டிஜிட்டல் பாரத், சாக்ஷம் பாரத்-ன் டிஜிட்டல் இந்தியா காம்பெண்டியத்தை, மின்னணு, தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத்தால் இந்திய வசிப்பிட மையம், புது தில்லியில் ஸ்டெய்ன் அரங்கத்தில் வெளியிடப்பட்டது.

வேஸ்ட் டு வொண்டர்பூங்கா

  • கழிவு அகற்றுதல் சரியாக செய்யப்பட வேண்டும் இதில் மாநகராட்சி நிறுவனங்கள் முன்னணி பாத்திரத்தை வகிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். தெற்கு டெல்லி மாநகராட்சி மாநகராட்சி (SDMC)-ன் கீழ் “வேஸ்ட் டு வொண்டர்” பூங்காவின் திறப்பு விழாவில் அவர் பேசினார்.

தமிழ்நாடு

தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

  • தேசிய மனித உரிமைகள் ஆணையம், NHRC, மாநிலத்தில் ஆடை தொழிற்துறை தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் மறுப்பு தெரிவிப்பது குறித்து தமிழ்நாட்டின் அரசாங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குடியரசுத் தலைவர் காந்திஜி சிலையை சென்னையில் திறந்து வைத்தார்

  • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்2 அடி உயரத்தில் மகாத்மா காந்தி சிலையை சென்னையில் உள்ள தக்ஷிணா பரத் ஹிந்தி பிரசார சபை வளாகத்தில் திறந்து வைத்தார். இந்த நிகழ்வானது, காந்திஜியின் 150வது பிறந்த தினம் மற்றும் சபாவின் நூற்றாண்டு தினத்திற்காக அமைக்கப்பட்டது. மகாத்மா காந்தியால் 1918ல் மெட்ராஸ் [தற்பொழுது சென்னை] மாகாணத்தில் இந்த சபை நிறுவப்பட்டது.

உத்தராகண்ட்

ஹரித்வாரில் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

  • ஹரித்வாரில் 5894 கோடி ரூபாய் செலவில் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய நிதி அமைச்சர் நிதின் கட்காரி அடிக்கல் நாட்டினார். கங்கையை மாசுபடுத்தும் வடிகால் நிலையத்தை நிறுத்தும் வகையில் சந்தி காட் பகுதியில் ஸ்நான் காட் மற்றும் வடிகால் நிலையத்தை திறந்துவைத்தார்.

சர்வதேச செய்திகள்

ஆஸ்திரேலியா தனது குடிமக்களுக்கு இரண்டு ஆண்டு தடை

  • ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ்-ற்கு ஆதரவாக போரிட்ட ஆஸ்திரேலிய குடிமக்கள் ஆஸ்திரேலிய நாட்டிற்குள் நுழைவதற்கு இரண்டு ஆண்டு தடை விதிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது; இப்போது பயங்கரவாத குழுவினரின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய நாட்டிற்கு திரும்ப விரும்புகின்றனர். இது தொடர்பாக ஆஸ்திரேலிய அரசாங்கம் கூட்டாட்சி பாராளுமன்றத்தில் சட்டதிருத்தம் செய்வதற்கான ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் திருவிழா

  • நேபாளத்தில் ஒரு மாத காலம் நடைபெறும் ‘இந்தியாவின் திருவிழா’ காத்மாண்டுவில் தொடங்கியது, இது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒற்றுமை பற்றி நாட்டின் புதிய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும். நேபாளத்தில் இந்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ரவீந்திர அதிகாரியும் நேபாளத்திற்கான இந்திய தூதர் மஞ்ஜீவ் சிங் பூரியும் இணைந்து இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

ட்ரம்ப் அமெரிக்க விண்வெளிப் படையை நிறுவ கையெழுத்து

  • அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விமானப்படைத் துறையிடம் ஒரு புதிய ஆயுதப் படையாக விண்வெளிப் படை ஒன்றை நிறுவுவதற்கான செயற்குழு ஆணையில் கையெழுத்திட்டார். ஸ்பேஸ் ஃபோர்ஸ் அனைத்து களங்களிலும் விரைவான மற்றும் தடையற்ற தாக்குதல் மற்றும் தற்காப்பு விண்வெளி செயல்பாடுகளை செயல்படுத்த போர் மற்றும் போர் ஆதரவு செயல்பாடுகளை உள்ளடக்கியது.

சவூதி அரேபியா 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய திட்டம்

  • இந்தியாவில் ஆற்றல், சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல்ஸ், உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளில் சவூதி அரேபியா 100 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

சியோலில் இந்தியா கொரியா ஸ்டார்ட் அப் மையம்

  • பிரதமர் நரேந்திர மோடி சியோலில் இந்தியா கொரியா ஸ்டார்ட் அப் மையத்தை தொடங்கி வைத்தார். இந்தியா தனது தொடக்கத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்காக நான்கு ஆண்டுகளுக்கு4 பில்லியன் டாலர்கள் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார். 

வணிகம் & பொருளாதாரம்

EPFO வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை உயர்த்தியது

  • ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO), 2018-19 ஆம் ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தை கடந்து ஆண்டு வழங்கிய 8.55 சதவீதத்திலிருந்து 8.65 சதவிகிதமாக உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளது. தொழிலாளர் துறை மந்திரி தலைமையிலான மத்திய அறங்காவலர்கள் வாரியம்(CBT) என்பது EPFO ​​இன் தலைமை முடிவு எடுக்கும் அமைப்பு ஆகும், இது ஒரு நிதியாண்டின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை முடிவு செய்யும்.

தரவரிசை & குறியீடு

அனைத்து இந்திய குடிமக்கள் போலிஸ் சர்வீசஸ் கணக்கெடுப்பு

  • அனைத்து இந்திய குடிமக்கள் போலிஸ் சர்வீசஸ் கணக்கெடுப்பு என்று அழைக்கப்படும் பான்-இந்தியா கணக்கெடுப்பை எடுக்க உள்துறை அமைச்சகம் போலிஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணியகத்தை நியமித்துள்ளது. புது தில்லியிலுள்ள பொருளாதார ஆரய்ச்சிக்கான தேசிய கவுன்சிலின் மூலம் இந்த ஆய்வு நடத்தப்படும்.
  • போலிஸைப் பற்றி பொதுமக்கள் கருத்துக்களை புரிந்து கொள்வது, போலிஸிடம் குற்றங்கள் அல்லது சம்பவங்கள் பற்றி தெரிவிக்காதவற்றை அளவிடுவது, காவல்துறையின் நேரம் தவறாமை, பதில் மற்றும் செயல்திறன் ஆகியவற்றை அளவிடுவது குற்றங்கள் அல்லது சம்பவங்கள் தொடர்பாகத் தெரியாத அளவை அளவிடுவது, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிய குடிமக்களின் கருத்து மற்றும் அனுபவத்தை மதிப்பிடுவது இதன் நோக்கமாகும்.

மாநாடுகள்

4வது இந்தியா-ஆசியான் எக்ஸ்போ மற்றும் உச்சி மாநாடு

  • வர்த்தகம், தொழிற்துறை மற்றும் சிவில் விமானத்துறைக்கான அமைச்சர் சுரேஷ் பிரபு புது தில்லியில் இந்தியா-ஆசியான் எக்ஸ்போ மற்றும் உச்சி மாநாட்டு 2019-ஐ துவக்கி வைத்தார்.

சியோலில் கூட்டு கருத்தரங்கு

  • இந்தியா – கொரியா இடையே பொருளாதார உறவை வலுப்படுத்த கொரியாவில் உள்ள இந்திய வர்த்தக சம்மேளனம் (ஐ.சி.சி.கே) மற்றும் இந்தியா மன்றம் இணைந்து சியோலில் கூட்டுறவு கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்தது. முதல் முறையாக தென் கொரியா இந்தியாவிற்கான வெளிநாட்டு கொள்கை முன்முயற்சியை வடிவமைத்து, ஆவணப்படுத்தியுள்ளது.

SME களின் இந்தியாரஷ்யா மன்றம்

  • வர்த்தகம், தொழில்துறை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு, பெங்களூரில் நடைபெற்ற இந்தியா மற்றும் ரஷ்யாவின் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைந்த கருத்துக்களத்தில் உரையாற்றினார்.

தேசிய சுற்றுலா ஆலோசனைக் குழுவின் 2 வது கூட்டம் (NTAC)

  • ஸ்ரீ கே.ஜே. அல்போன்ஸ், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர், குஜராத்தின் கெவடியாவில் உள்ள, ‘ஒற்றுமை சிலை’யில் மறுசீரமைக்கப்பட்ட தேசிய சுற்றுலா ஆலோசனை கவுன்சில் (NTAC) 2 வது கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். என்.டி.ஏ.சி சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் சிந்தனை அமைப்பாக செயல்படுகிறது மற்றும் பல்வேறு சுற்றுலா தொடர்பான கொள்கை விஷயங்களில் அரசாங்கத்தை அறிவுறுத்துகிறது.

திட்டங்கள்

இளம்பருவ பெண்களுக்கான திட்டம்

  • உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இளம்பெண்களுக்கான திட்டம் ஒன்றை தொடங்கினார். இந்த திட்டம் 11 முதல் 14 வயதிற்குட்பட்ட படிப்புகளை விட்டுவிட்ட பெண்கள் மீது கவனம் செலுத்துகிறது. அவர்களுக்கு சரியான ஊட்டச்சத்து மற்றும் சிறப்புப் பராமரிப்புக்கான நடவடிக்கைகளை எடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
  • மாநில அரசு, இளம்பருவ பெண்கள் தினத்தை ஒவ்வொரு மாதமும் 8ம் தேதியில் அனைத்து அங்கன்வாடி மையங்களில் அனுசரிக்க முடிவு செய்துள்ளது. மாநில அரசு மார்ச் மாதம் 8ம் தேதி இளம் பெண்களுக்கான  ஊட்டச்சத்து பிரச்சாரத்தை தொடங்கும்.

வளிமண்டல நீர் ஜெனரேட்டர் (AWG)

  • நவரத்னா பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனம் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) அதன் புதிய தயாரிப்பான, வளிமண்டல நீர் ஜெனரேட்டர் (AWG)-ஐ, ஏரோ இந்தியா 2019ல் உலகளாவிய குடிநீர் தேவை அதிகரிப்பை பூர்த்தி செய்யும் ஒரு புதுமையான தீர்வாக இதை அறிமுகப்படுத்தியது. 

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஸ்டாம்ப் சட்ட மாற்றத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

  • 1899 ஆம் ஆண்டின் இந்திய ஸ்டாம்ப் சட்டத்தில் திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார், இது ஸ்டாம்ப் டியூட்டி அமைப்பில் உள்ள குறைகளை நீக்க, வரி ஏய்ப்புகளைத் தடுக்க உதவும்.
  • 1899 ஆம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டத்திற்கான திருத்தங்கள், நிதி சட்டம் 2019ன் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டன, மேலும் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

இந்தியாஇலங்கை இடையே ஒப்பந்தம்

  • இந்தியா நிதி உதவியுடன் 25 கோடி இலங்கை ரூபாய் செலவில் ஜாப்னாவில் ICT இன்குபேட்டருக்கான ஒரு வணிக மையத்தை நிறுவ இந்தியா-இலங்கை இடையே புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. 

பாதுகாப்பு செய்திகள்

முதல் ட்ரோன் ஒலிம்பிக்ஸ் போட்டி

  • யேலாஹங்கா, பெங்களூருவில் நடைபெற்ற ஏரோ-இந்தியா 2019ல் முதல் ட்ரோன் ஒலிம்பிக் போட்டியில் ஆளில்லா பறக்கும் விமானங்களுடன் சிறப்பாக நடைபெற்றது.
  • தீம் – ‘ஒரு பில்லியன் வாய்ப்புகளுக்கான ஓடுதளம்‘.

விளையாட்டு செய்திகள்

ISSF உலக கோப்பை துப்பாக்கிச்சூடு

  • புதுடில்லி சர்வதேச துப்பாக்கிச்சூடு விளையாட்டு சம்மேளனத்தின் (ஐ.எஸ்.எஸ்.எஃப்) உலகக் கோப்பையை விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் திறந்துவைப்பார். உலகக் கோப்பையில் பல்வேறு போட்டிகள் பிப்ரவரி 23 முதல் தொடங்கி 27 ஆம் தேதி முடிவடையும்.

PDF Download

ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!