நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019

0

நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019

தேசிய செய்திகள்

புது தில்லி

இந்தியாவுக்கு அதிக ஆதரவளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் நீக்கம்

  • ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடைபெற்ற புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட மிகுந்த ஆதரவளிக்கும் தேசம் எனும் அந்தஸ்தை இந்தியா திரும்பப் பெற்றுள்ளது. புதுடில்லியில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவைக் குழு, CCS கூட்டத்தில் இந்த முடிவை எடுத்தது.

உத்தரப் பிரதேசம்

ஜான்சியில் பாதுகாப்பு வளாகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது

  • பிரதமர் நரேந்திர மோடி ஜான்சி நகரில் பாதுகாப்பு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டி திறந்து வைத்தார். ஜான்சி நகரம் உத்திரப்பிரதேச பாதுகாப்பு வளாகத்தில் உள்ள ஆறு முக்கிய மையங்களில் ஒன்றாகும் . 425 கிலோ மீட்டர் நீளமுள்ள ஜான்சி-மாணிக்பூர் மற்றும் பீம்சென்-கைரார் இரயில் பாதைகளின் இருவழிப்பாதைக்கான அடிக்கல்லை நாட்டினார். 297-கிலோமீட்டர் நீளம் கொண்ட மின்சாரமயமாக்கிய ஜான்சி-கைரார் பிரிவை அவர் திறந்துவைத்தார். அவர் பஹாரி அணை நவீனமயமாக்கல் திட்டத்தையும் துவக்கி வைத்தார்.

சர்வதேச செய்திகள்

நைஜீரியா அனைத்து நில எல்லைகளையும் மூட உத்தரவு

  • நைஜீரியா அரசு ஒரு சுமூகமான ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அனைத்து நில எல்லைகளையும் மூட உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தது

  • ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்ப்பதில் இந்தியாவுடன் துணை நிற்பதாக அனைத்து நாடுகளும் அறிவிப்பு.

வணிகம் & பொருளாதாரம்

கப்பல் துறையில் இந்தியர்களின் வேலைவாய்ப்பு விகிதம் இந்த ஆண்டு 35 சதவிகிதம் அதிகரிப்பு

  • இந்த ஆண்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கப்பல் துறையில் இந்தியர்களின் வேலைவாய்ப்பு விகிதம் 35 சதவிகிதம் வளர்ச்சி கண்டிருக்கிறது.

மத்திய அரசு சர்க்கரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை கிலோவுக்கு ரூ.2 அதிகரிக்கிறது

  • 2018-19 ஆம் ஆண்டுக்கான சர்க்கரையின் குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒரு கிலோவிற்கு ரூபாய் 2 அதிகரித்து 31 ரூபாயாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மாநாடுகள்

வர்த்தக சந்திப்பு வாரியம்

  • வர்த்தகம், கைத்தொழில் மற்றும் சிவில் விமானத்துறைக்கான அமைச்சர் சுரேஷ் பிரபு, விஞ்ஞான் பவனில் வர்த்தக சந்திப்பு வாரியத்தின் (பி.ஓ.டி) கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்த சந்தர்ப்பத்தில், வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் “எந்நேரமும்-எங்கும்” ஏற்றுமதி விழிப்புணர்வு பயிற்சி மூலம் கைத்தறி திறன்மிக்க ஏற்றுமதியாளர்களுக்கு சர்வதேச வர்த்தக ஏற்றுமதி வாய்ப்புகளை பெற உதவும் புதிய ஆன்லைன் பயிற்சியை துவக்கி வைத்தார். இந்த ஆன்லைன் பயிற்சி DGFT இன் ‘நிர்யத் பந்து’ திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்பட்டு, புது டெல்லியில் உள்ள இந்திய கல்வி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.

நியமனங்கள்

  • ஸ்ரீ சுஷில் சந்திரா – புதிய தேர்தல் ஆணையர்
  • வில்லியம் பார் – அமெரிக்க அட்டர்னி ஜெனரல்

திட்டங்கள்

ஸ்வச்ச்தா பக்வாடாவின் கொண்டாட்டம்

  • நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்திற்கான மத்திய அமைச்சர், ஸ்ரீ ராம் விலாஸ் பஸ்வான் தலைமையில், 2019 பிப்ரவரி 16ம் தேதி முதல் 28ம் தேதி வரை திட்டமிடப்பட்ட ஸ்வச்ச்தா பக்வாடா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புது தில்லியின் நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தூய்மைக்கான உறுதி ஏற்றனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

GeM மற்றும் GS1 இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்து

  • வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகத்தின் தரநிலை அமைப்பான GS1 இந்தியா, அரசாங்க மின்-அங்காடி (GeM) உடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. இது GeMல் வாங்குவோர் மற்றும் விற்பனையாளர்களுக்கு பல ஆயிரக்கணக்கான பிரிவுகளில் உள்ள பொருள்கள் தொடர்பாக துல்லியமான மற்றும் தரநிலைப்படுத்தப்பட்ட தகவலை அணுகுவதற்கு உதவுகிறது, மேலும் தகவலறிந்த முடிவுகளை எடுக்க அதிகாரம் அளிக்கிறது.

உலக வங்கியுடன் சட்ட ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்து

  • கடந்த சில ஆண்டுகளாக கடுமையான நீர் பற்றாக்குறை மற்றும் தண்ணீரால் பரவும் தொற்று நோயால் பாதித்த சிம்லா பகுதியின் குடிமக்களுக்கு சுத்தமான மற்றும் நம்பகமான குடிநீர் வழங்கி உதவுவதற்காக, 40 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் இந்திய, ஹிமாச்சலப் பிரதேச அரசு உலக வங்கியுடன் கையெழுத்திட்டுள்ளது.

விசாவை அரசாங்கம் தாராளமயமாக்குகிறது

  • 46 நாடுகளுடன் 2014 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட இ- சுற்றுலா விசா இப்போது 166 நாடுகளுக்கு பொருந்தும். சமீபத்தில், இ-விசா வழங்கும் முறையில் அரசாங்கம் தொடர்ச்சியான திருத்தங்களை செய்து, தாராளமயமாக்கி சுற்றுலாப்பயணிகளுக்கு இணக்கமாக்கியுள்ளது.

விருதுகள்

ஸ்போர்ட்ஸ்டார் ஏஸ் விருது வெற்றியாளர்கள்

 

இந்திய ஜனாதிபதி தாகூர் விருதை வழங்குகிறார்

  • கலாச்சார அமைதிக்கான 2014, 2015 & 2016 ஆண்டின் தாகூர் விருது ஸ்ரீ ராஜ்குமார் சிங்காஜித் சிங்; சையானட் (வங்கதேசத்தின் கலாச்சார நிறுவனம்); மற்றும் ஸ்ரீ ராம் சுடர் வஞ்சி அவர்களுக்கு, முறையே02.2019 அன்று பிரவசி பாரதிய கேந்திரா, புது தில்லியில் இந்தியாவின் ஜனாதிபதி வழங்குவார்.

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

LADIS – குறைந்தபட்ச ஆழம் பற்றிய தகவல் அமைப்பு

  • தேசிய நீர்வழிகளின் ஆழம் பற்றிய ரியல் டைம் தகவல் தொடர்பான LADIS – குறைந்த ஆழம் பற்றிய தகவல் அமைப்பு எனும் புதிய போரட்டலை இந்தியாவின் உள்நாட்டு நீர்வழி ஆணையம் அறிமுகப்படுத்துகிறது.
  • கப்பல்கள் இயக்கத்திற்கான சிறந்த திட்டமிடலை இந்த தகவல் உதவும்.

விளையாட்டு செய்திகள்

சீனியர் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்

  • குவஹாத்தியில் நடைபெறும் சீனியர் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப், பி.வி. சிந்து, வைஷ்ணவி பாலே, அஷ்மிதா சலிஹா, அரை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

PDF Download

ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!