ஏப்ரல் 30 நடப்பு நிகழ்வுகள்

0

ஏப்ரல் 30: சர்வதேச ஜாஸ் இசை நாள்  

  • ஜாஸ் என்பது இசையை விட மேன்மையானது. இத்தினத்தை ஐ.நா. சபை 2011 இல் அறிவித்தது.ஜாஸ் இசையானது தடைகளை உடைத்து, பரஸ்பரம் சகிப்புத்தன்மையை வளர்க்கிறது. கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம், ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துகிறது. ஜாஸ் பெண் சமத்துவத்தையும் வளர்க்கிறது. இளைஞர்களை சமூக மாற்றத்திற்கு உட்படுத்துகிறது.

மாநிலசெய்திகள்

தெலுங்கானா

ஹைதராபாத் காவல் துறை டிஜிட்டல் மயமாகிறது

  • நாட்டிலேயே முதன்முறையாக ஹைதராபாத் காவல்துறை காகித பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு முழுக்க கணினிமயமாக உள்ளது.

குஜராத்

ஏர்போர்ட் போல வசதிகள் உள்ள ரயில் நிலையங்களின் வரிசையில் சூரத்திற்கு 3வது இடம்

  • ஏர்போர்ட் போன்று வசதிகள் கொண்டு செயல்படும் ரயில் நிலையமாக குஜராத்தின் சூரத் உருவாக உள்ளது.இந்த ரயில் நிலையம் 2020 குள் அணைத்து வசதிகளுடன் கட்டிமுடிக்கப்படும்.
  • இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே மத்திய பிரதேசத்தின் ஹபீப்கஞ்ச் மற்றும் குஜராத்தின் காந்திநகர் ரயில்நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது

தேசியசெய்திகள்

இந்திய ராணுவம் மற்றும் மலேசிய ராணுவம் இடையிலான ராணுவ பயிற்சி

  • இந்திய ராணுவம் மற்றும் மலேசிய ராணுவம் இடையிலான ஹரிமாவ் சக்தி 2018 என்ற ராணுவப் பயிற்சி எளிமையான மற்றும் உற்சாகம் தரும் படைகள் பரிமாற்றத்துடன் ஏப்ரல் 30ம் தேதி கோலாலம்பூரில் உள்ள வார்டீபர்ன் முகாமில் தொடங்கியது.
  • இந்த ஹரிமூவ் சக்தி பயிற்சி என்பது இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவில் நேர்மறையான நடவடிக்கையாகும். இத்தகைய பயிற்சிகள் நடத்தப்படுவது பரஸ்பர திறன் விரிவாக்கம் மற்றும் இந்தியா மற்றும் மலேசியா இடையே நட்பு மற்றும் ஒத்துழைப்புக்கான வலிமையான நெருக்கத்தை உருவாக்க உதவும்.

கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் கோபர்தான் திட்டம் தொடக்கம்

  • மத்திய குடிநீர் மற்றும் நலவாழ்வுத் துறை அமைச்சர் செல்வி உமாபாரதி, கோபர்தான் திட்டத்தை தொடங்கிவைத்தார். கால்நடை மற்றும் இயற்கை கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரித்து கிராமங்களின் வளத்தைப் பெருக்குவதுடன், ஆக்கப்பூர்வமான சுகாதாரத் தாக்கத்தை ஏற்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
  • ஊரகப்பகுதியில் புதிய வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதும் விவசாயிகள் மற்றும் இதர ஊரக மக்களின் வருமானத்தைப் பெருக்குவதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

சர்வதேசசெய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் பங்கேற்கும் தீவிரவாதத்துக்கு எதிராக கூட்டு ராணுவ பயிற்சி

  • ரஷ்யாவில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பயங்கரவாத்துக்கு எதிராக பல்வேறு நாடுகள் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சியில் இந்தியாவும், பாகிஸ்தானும் பங்கேற்க உள்ளன. இந்த கூட்டுப் பயிற்சியில் சீனா உட்பட 8 நாடுகள் பங்கேற்க உள்ளன.
  • இந்த கூட்டுப் பயிற்சி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் நடைபெறுகிறது. பயிற்சி ரஷ்யாவிலுள்ள உரல் மலைப் பகுதியில் செப்டம்பர் தொடங்குகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான எட்டு (இந்தியா, பாகிஸ்தான் ரஷியா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான்)  நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.

உலகின் மிக ‘வயதான சிலந்திப் பூச்சி இறந்தது

  • உலகின் மிக வயதான என்று அறியப்பட்ட நம்பர் 16 என்ற சிலந்திப்பூச்சி தனது 43-வயதில் ஆஸ்திரேலியாவில் இறந்தது.இதற்கு மெக்சிகோ நாட்டில் உள்ள 28வயதான டிரான்டுலா எனும் சிலந்திப்பூச்சியே நீண்டநாட்கள் உயிரோடு வாழ்ந்தது என்ற சாதனையை படைத்திருந்தது. அதை இந்த நம்பர்16 என்று பெயரிடப்பட்ட இந்த சிலந்திப்பூச்சி முறியடித்துவிட்டது.

வணிகசெய்திகள்

சுபாஷ் சந்திர கார்க் :தொடர் சீர்திருத்தங்கள் காரணமாக இந்தியாவுக்கான தர மதிப்பீடு உயரும்

  • இந்தியாவுக்கான தரமதிப்பீட்டை பிட்ச் நிறுவனம் உயர்த்த மறுத்திருக்கிறது. தொடர்ந்து 12-வது ஆண்டாக தர மதிப்பீட்டை பிட்ச் நிறுவனம் உயர்த்த மறுத்திருக்கிறது. இந்த நிலையில் இந்தியா தரமதிப்பீட்டு உயர்வுக்கு தகுதியானது என பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்திருக்கிறார். தரமதிப்பீட்டு நிறுவனங்களுடன் அரசு தொடர்பில் இருக்கிறது. தரமதிப்பீட்டை உயர்த்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

2017-18 நிதியாண்டில் ஜெம் மற்றும் ஜூவல்லரி ஏற்றுமதி 8% சரிவு

  • அமெரிக்கா உள்ளிட்ட முன்னணி சந்தைகளில் தேவை குறைந்ததைத் தொடர்ந்து ஜெம் மற்றும் ஜுவல்லரி ஏற்றுமதி 8 சதவீதம் சரிந்துள்ளது. ஜெம் மற்றும் ஜூவல்லரி ஏற்றுமதி கவுன்சிலின் (ஜிஜெஇபிசி) தரவுகள் படி 2016-17 நிதியாண்டில் மொத்த ஜெம் மற்றும் ஜுவல்லரி ஏற்றுமதி 3,547 கோடி டாலர்கள் ஆகும். 2017-18 நிதியாண்டில் இது 3,272 கோடி டாலராக குறைந்துள்ளது.

விளையாட்டுசெய்திகள்

25-வது முறையாக லா லிகா சாம்பியன்: பார்சிலோனா

  • டெபோர்டிவோ அணிக்கெதிரான ஆட்டத்தில் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடிக்க 25-வது முறையாக பார்சிலோனா லா லிகா பட்டத்தை வென்றுள்ளது

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் : ரஃபேல் நடால் சாம்பியன்

  • பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டு வீரர் ரஃபேல் நடால் கிரீக் நாட்டை சேர்ந்த ஸ்டெபனோஸ் டிட்சிபாசை வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

சர்வதேச வாள்வீச்சு:தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு வெள்ளிப் பதக்கம்

  • ஐஸ்லாந்தில் நடந்த உலக கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சு பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த பவானிதேவி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

 PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!