ஏப்ரல் 28 மற்றும் 29 நடப்பு நிகழ்வுகள்

0

ஏப்ரல் 28: உலக தொழிலாளர் பணியிட பாதுகாப்பு மற்றும் உடல் நலனுக்கான தினம்

  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஏப்ரல் 28-ல் இந்த தினத்தை கொண்டாடுகிறது. இது பாதுகாப்பு மற்றும் உடல்நலம் குறித்த வருடாந்திர உலக தினம் உலகளாவிய தொழில்சார் விபத்துக்கள் மற்றும் நோய்களை தடுப்பதை ஊக்குவிக்கிறது.
  • 2018-ன் கருப்பொருள்: ஆக்குபேஷனல் சேப்டி ஹெல்த் வல்நெரபிலிட்டி ஆப் யங் ஒர்க்கர்ஸ்

ஏப்ரல் 29: உலக நடன தினம்

  • நடனக் கலைஞர்களின் சேவையை கௌரவிக்கும் பொருட்டு யுனேஸ்கோ,  சர்வதேச நடன கவுன்சிலுடன் இணைந்து உலக நடன தினத்தை ஏப்ரல் 29ம் தேதி கொண்டாடி வருகிறது. இது, நடனக் கலைஞர் ஜான் ஜார்ஜ் நூவர் என்பவரின் பிறந்த தினம் ஆகும். பிரெஞ்ச் நடனக்கலைஞரான இவர் பாலே நடனக் கலையில் சிறந்து விளங்கியவர்.

மாநிலசெய்திகள்

ஹிமாச்சல பிரதேசம்

ரூ .39.65 கோடி நீர் வழங்கல் திட்டம் தொடங்கப்பட்டது

  • இமாச்சலப் பிரதேசத்தின் மந்தி மாவட்டத்தில் நீர் வழங்கல் திட்டத்தை இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாகூர் துவக்கினார் . 39.65 கோடி ரூபாய் செலவில்  நீர் வழங்கல் திட்டம் உருவாக்கப்பட்டது என்று ஜெய் ராம் தாகூர் தெரிவித்தார். இந்த பகுதியில் 31,000 க்கும் அதிகமானோர் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியசெய்திகள்

தேஜாஸ் விமானத்தில் இருந்து ஏவுகணை செலுத்தி சோதனை

  • இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு கழகம் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானம் தொடர்ந்து பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக வானில் இருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணையை தேஜாஸ் போர் விமானத்தில் இருந்து செலுத்தும் சோதனை வெற்றிகரமாக நடந்ததாக டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டிலேயே அதிக நாள் முதல்வர் : சிக்கிம் முதல்வர்

  • நாட்டிலேயே அதிக நாள் முதல்-மந்திரியாக இருந்தவர் என்ற பெருமையை பெற்ற முதல்-மந்திரி ஜோதிபாசு சாதனையை சிக்கிம் முதல்-மந்திரி பவன்குமார் சாம்லிங்க் முறியடித்துள்ளார்.
  • சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் தலைவரான இவர் 12-12-1994-ம் ஆண்டு முதல்-மந்திரியாக பதவியேற்றார். தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று அவர் முதல்-மந்திரியாக நீடித்து வருகிறார்.

சர்வதேசசெய்திகள்

பாகிஸ்தானுக்கு புதிய நிதி மந்திரி: மிப்டா இஸ்மாயில்

  • பாகிஸ்தானின் புதிய நிதி மந்திரியாக மிப்டா இஸ்மாயில் நியமிக்கப்பட்டார். பாகிஸ்தானில் நிதி மந்திரியாக இருந்த இஷாக் தர் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து புதிய நிதி மந்திரியாக மிப்டா இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரியாவுக்கு ஏவுகணை வழங்கும் ரஷ்யா

  • சிரிய ராணுவத்தினருக்கு நன்றாக பயிற்சியளிக்கவும், குறிப்பாக புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் குறித்து அவர்களுக்கு நன்றாக விளக்கமளிக்க சக்திவாய்ந்த S-300 ரக ஏவுகணைகளை ரஷ்யா சிரியாவுக்கு விரைவில் வழங்கும் என தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் :மைக் போம்பியோ

  • அமெரிக்க வெளியுறவு அமைச்சராக சிஐஏ முன்னாள் இயக்குநர் மைக் போம்பியோ (54) நேற்று பதவியேற்றார்.அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்த ரெக்ஸ் டில்லர்சன் கடந்த மாத இறுதி யில் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். புதிய வெளியுறவு அமைச்சராக மைக் போம்பியோவை அதிபர் ட்ரம்ப் நியமித்தார்.

வணிகசெய்திகள்

8.55 சதவீத பிஎப் வட்டிக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல்

  • வருங்கால வைப்பு நிதிக்கு55 சதவீத வட்டி வழங்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் உள்ள பிஎப் தொகைக்கு 8.55 % வட்டி வழங்க இபிஎப்ஓ அறங்காவலர் குழு முடிவெடுத்தது. அறங்காவலர் குழு முடிவெடுத்தாலும் நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்த பிறகுதான் இந்த வட்டி தொகை சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். கடந்த ஐந்தாண்டுகளில் மிக குறைந்த பிஎப் விகிதம் இதுவாகும்.

விளையாட்டுசெய்திகள்

56-வது பெல்கிரேடு சர்வதேச குத்துச் சண்டை: இந்தியாவிற்கு மூன்று தங்கம்

  • செர்பியாவில் நடைபெற்ற 56-வது பெல்கிரேடு சர்வதேச குத்துச் சண்டை இறுதிப் போட்டியில் சுமித் சங்வான், நிகத் ஜரீன் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். இவர்களுடன் ஹிமான்ஷு ஷர்மாவும் தங்கம் வென்றார். இதனால் இந்தியா மூன்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.
  • பெண்கள் பிரிவிலா் ஜமுனா போரோ, லால்டே லால்ஃபேக்மெவிய் ஆகியோரும், ஆண்கள் பிரிவில் லால்டின்மாவியா, வரிந்தர் சிங், பவன் குமார் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்
  • .ராஜேஷ் நர்வால் (48 கிலோ), பிரியங்கா தாகூர் (60 கிலோ), ருமி கோகோய் (75 கிலோ ), நிர்மலாக ராவத் (81 கிலோ) ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர்.

உலகக்கோப்பை வில்வித்தைஅபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா வெண்கலம்

  • ஷாங்காய் நகரில் உலகக்கோப்பை வில்வித்தை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் முன்னணி வீரரான அபிஷேக் ஷர்மா, வீராங்கனை ஜோதி சுரேகா ஜோடி 154 – 448 என வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றது.

ஏடிபி சேலஞ்சர் லெவல் பட்டம்: பிரஜ்னேஷ்

  • தமிழகத்தைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான பிரஜ்னேஷ் குணேஸ்வரன் முதன்முறையாக ஏடிபி சேலஞ்சர் லெவன் பட்டத்தை வென்றுள்ளார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!