நடப்பு நிகழ்வுகள் – 30 நவம்பர் 2022

0
நடப்பு நிகழ்வுகள் - 30 நவம்பர் 2022
நடப்பு நிகழ்வுகள் - 30 நவம்பர் 2022

நடப்பு நிகழ்வுகள் – 30 நவம்பர் 2022

தேசிய செய்திகள்

ஸ்ரீஹரிகோட்டாவில்  தனியார் நிறுவனத்தின் ராக்கெட் ஏவுதளம் திறப்பு

  • ஸ்ரீஹரிகோட்டாவில் விண்வெளி தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த அக்னிகுல் புத்தாக்க நிறுவனம் இந்தியாவின் முதல் தனியார் ஏவுதளத்தை இஸ்ரோ தலைவர் சோம்நாத் திறந்துவைத்தார்.
  • இந்த எவுதளத்தில் அக்னி குல் ஏவுதளம் மற்றம் அக்னிகுல் மிஷன் கட்டுப்பாட்டு மையம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன,மேலும் திரவநிலை எரிபொருளை மனதில் கொண்டு இந்த ஏவுதளம் பிரத்யேகமாக கட்டப்பட்டுள்ளது.

உலகளாவிய தொழில்நுட்பத்தின் ஏழாவது பதிப்பு

  • உலகளாவிய தொழில்நுட்ப உச்சிமாநாட்டின் ஏழாவது பதிப்பு 29 நவம்பர் 2022 முதல் டிசம்பர் 1, 2022 வரை புது தில்லியில் நடைபெறவுள்ளது, இந்த உச்சிமாநாடு என்பது புவி-தொழில்நுட்பம் குறித்து வெளியுறவு துறை அமைச்சகத்தால் இணைந்து நடத்தப்படுகிறது; உச்சிமாநாட்டின் கருப்பொருளாக  ‘தொழில்நுட்பத்தின் புவிசார் அரசியல்.
  • அமெரிக்கா, சிங்கப்பூர், ஜப்பான், நைஜீரியா, பிரேசில், பூட்டான், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் உச்சிமாநாட்டில் பங்கேற்கின்றனர்.

உலகின் முதல் இன்ட்ராநேசல் தடுப்பூசி iNCOVACC- DCGI இலிருந்து அனுமதி பெற்றது

  • உலகின் முதல் இன்ட்ராநேசல் தடுப்பூசி iNCOVACC, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI) யிடமிருந்து கோவிட் பூஸ்டர் டோஸ்களுக்கான ஒப்புதலைப் பெற்றுள்ளது.
  • iNCOVACC என்பது, முன் நிலைப்படுத்தப்பட்ட SARS-CoV-2 ஸ்பைக் புரதத்துடன் கூடிய மறுசீரமைப்பு பிரதி குறைபாடுள்ள அடினோவைரஸ் வெக்டார்டு தடுப்பூசி ஆகும். இந்த தடுப்பூசி வெற்றிகரமான முடிவுகளுடன் I, II மற்றும் III மருத்துவ பரிசோதனைகளில் மதிப்பீடு செய்யப்பட்டது.

இந்தியாவின் டாப் 100 கோடீசுவரர்கள் பெயர் பட்டியல் வெளியீடு

  • இந்தியாவின் டாப் 100 கோடீசுவரர்கள் அடங்கிய பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ளது.
  • இதன்படி, பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து கவுதம் அதானி நீடித்து வருகிறார். இதற்கு அடுத்து 2-வது இடத்தில் தொடர்ந்து முகேஷ் அம்பானி இடம் பெற்றுள்ளார். மேலும் இந்த பணக்காரர்களின் பட்டியலில் 9 பெண்களும் இடம் பெற்று உள்ளனர்.

 

சர்வதேச செய்திகள்

உலகின் மிகப்பெரிய எரிமலை, கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக வெடித்தது

  • உலகின் மிகப்பெரிய எரிமலை, ஹவாயின் மௌனா லோவா, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில் முதல் முறையாக வெடிக்கிறது, மேலும் சமீபத்திய வெடிப்பு 27 நவம்பர் 2022 அன்று தொடங்கியது.
  • மௌனா லோவா கடைசியாக 1984 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரலில் வெடித்தது

 

மாநில செய்திகள்

KVIC தலைவர் நைனிடாலில் ரீஹாப் (Re-Hab) திட்டத்தை துவக்கி வைத்தார்

  • KVIC தலைவர் ஸ்ரீ மனோஜ் குமார், உத்தரகண்ட் மாநிலம், நைனிடால் மாவட்டம், ஹல்த்வானி, ஃபதேபூர், வனத் தொடரில் உள்ள சௌஸ்லா கிராமத்தில், ரீ-ஹாப் மறுவாழ்வுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டத்தின் கீழ் தேனீ வேலி அமைப்பதன் மூலம் காட்டு யானைகள், மனிதர்கள் மற்றும் விவசாயிகளின் பயிர்களைத் தாக்குவதைத் தடுக்கிறது.மேலும் ரீ-ஹாப்(Re-Hab) என்ற திட்டம் தற்போது கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் இயங்கி வருகிறது.
    • KVIC- Khadi & Village Industries Commission
    • Re-Hab – Reducing Human Attacks using Honey Bees

மொபைல் ஹெல்த் கிளினிக் – ‘டாக்டர் அப்கே துவார்துவக்கப்பட்டது

  • பிகாரின் போஜ்பூர் மாவட்டம் ஆராஹ், சதர் மருத்துவமனையில் பத்து மொபைல் ஹெல்த் கிளினிக்குகளை (MHC) மத்திய மின்துறை அமைச்சர் ஸ்ரீ ஆர்.கே.சிங் திறந்து வைத்தார். இத்திட்டம் ரூ. 12.68 கோடி செலவில் செயல் படுத்தப்பட்டுள்ளது.
  • மேலும் இத்திட்டத்தில் 10 நடமாடும் சுகாதார மையங்கள் செயல்படுத்தப்படுகின்றன அவற்றில் மூன்று பெண்களுக்காகவும் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள பின்தங்கிய மக்களுக்கு ஆரம்ப சுகாதார சேவையை அவரவர் இருப்பிடத்திற்கே சென்று வழங்குவதற்கு உதவியாக செயல்படும் வண்ணம் அமைக்கப்ட்டுள்ளது.

ஈரோட்டில் மக்காத குப்பைகளை எரியூட்டும் திட்டம் தொடக்கம்

  • தமிழகத்தில் முதல் முறையாக ஈரோடு மாநகராட்சியில் ரூ.1½ கோடி செலவில் மக்காத குப்பைகளை எரியூட்டும் திட்டத்தை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
  • தமிழகத்தில் பொதுமக்களிடம் இருந்து மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து தூய்மை பணியாளர்கள் சேகரிக்கிறார்கள்.மக்காத குப்பைகளை எரியூட்டி அழிக்கும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலுடன் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் அருகே எறையூரில் சிப்காட் தொழில் பூங்கா திறப்பு

  • பெரம்பலூர் மாவட்டம் எறையூரில்49 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  • மேலும் இதன் மூலம் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு அமைக்கப்படும் மற்றும் தைவான்நாட்டைச் சேர்ந்த 10 தொகுப்பு நிறுவனங்களுடன், ரூ.740 கோடி முதலீட்டில், 4,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது.

இந்திய ஜனாதிபதி ஹரியானாவில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்

  • இந்திய ஜனாதிபதி, ஸ்ரீமதி திரௌபதி முர்மு, நவம்பர் 29, 2022 அன்று ஹரியானாவின் குருக்ஷேத்ராவில் நடைபெற்ற சர்வதேச கீதை கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
  • அவர் ‘முக்யமந்திரி ஸ்வஸ்த்ய சர்வேக்ஷன் யோஜனா’வையும் தொடங்கினார்; மற்றும் ஹரியானா அனைத்து பொது சாலை போக்குவரத்து வசதிகளுக்கான இ-டிக்கெட் திட்டங்கள் மற்றும் சிர்சாவில் ஒரு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு காணொளி முறையில் அடிக்கல் நாட்டினார்.
    • முக்யமந்திரி ஸ்வஸ்த்யா சர்வே யோஜனா ஹரியானா அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், மாநிலத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதாரப் பரிசோதனை மற்றும் பல்வேறு வகையான பரிசோதனைகள் அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது.

 

பொருளாதார செய்திகள்

டிசம்பர் 1 முதல் 4 நகரங்களில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம்

  • இந்திய ரூபாய் நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாயும் சில்லறைப் பணப் பரிவர்த்தனைகளுக்காக 4 நகரங்களில் டிசம்பர் 1ஆம் தேதி வெளியிடப்படும் எனத் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
  • டிஜிட்டல் முறையில் e₹-R என்ற குறியீடு டிஜிட்டல் ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக எஸ்பிஐ, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் ஆகிய நான்கு வங்கிகளில் அறிமுகமாகிறது. மேலும் மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வர் நகரங்களில் அறிமுக படுத்தப்படவுள்ளது.
    • டிசம்பர் 1 முதல் ரூ. 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500, 2000 மதிப்பிலான டிஜிட்டல் கரன்சிகள் புழக்கத்திற்கு வரவுள்ளன.

 

நியமனங்கள்

BSEயின் புதிய நிர்வாக இயக்குநர் (MD)மற்றும் தலைமைச் செயல் அதிகாரி(CEO) நியமிக்கப்பட்டுள்ளார்

  • நவம்பர் 28, 2022 அன்று SEBI-யின் ஒப்புதலுக்குப் பிறகு சுந்தரராமன் ராமமூர்த்தி பம்பாய் பங்குச் சந்தையின் (BSE) புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக   நியமிக்கப்பட்டுள்ளார்.
  • BSE இன் முன்னாள் MD மற்றும் CEO ஆஷிஷ்குமார் சவுகானுக்குப் பிறகு ராமமூர்த்தி இப்போது பதவியேற்பார். சௌஹான் பதவியில் இருந்து ராஜினாமா செய்து நான்கு மாதங்களுக்கும் மேலாக, ஜூலை 25 முதல் புதிய நியமனம் தற்போது செய்யப்பட்டுள்ளது, ஆஷிஷ்குமார் ராஜினாமா செய்த பிறகு, தேசிய பங்குச் சந்தையின் (NSE) MD மற்றும் CEO ஆக ஆஷிஷ்குமார் நியமிக்கப்பட்டார்.

பிரீத்தி சுதன் யூ பி எஸ் சியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்

  • முன்னாள் சுகாதாரச் செயலர் ப்ரீத்தி சுதன், புதுதில்லியில் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
  • திருமதி சுதன் 1983 பிரிவில் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற இந்திய ஆட்சி பணி அதிகாரி ஆவர். உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளராகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையிலும், பாதுகாப்பு அமைச்சகத்திலும் பணியாற்றியுள்ளார்.

 

தொல்லியல் ஆய்வுகள்

புதிய கற்கால மக்கள் வாழ்ந்த தொல்லியல் தடயங்கள் கண்டெடுப்பு

  • துறையூரை அடுத்த பகளாவாடி மலைத்தொடரில் உப்பிலியபுரத்தை சேர்ந்த தனியார் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டதில் புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்துள்ள தொன்மைச் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன .
  • ஆய்வில் சிறிய அளவிலான சிவப்பு மண்பானைகள், முதுமக்கள் தாழியின் பாகங்கள், வழவழப்பான கைக்கோடாரி ஒன்று 3 சென்டிமீட்டர் அளவில் உடைந்த நிலையிலும் கிடைத்துள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

குரங்கு அம்மைக்கு எம்.அம்மை என்று புதிய பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

  • குரங்கு அம்மைக்கு ‘எம்-அம்மை ‘(M-POX) என்ற புதிய பெயரை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. மேலும், குரங்கு அம்மை என்ற பெயரின் பயன்பாடும் படிப்படியாக பழக்கத்தில் இருந்து குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
  • குரங்கு அம்மை, விலங்குகளிலிருந்து மனிதனுக்கு பரவும் ஒரு வகை வைரஸ் தொற்று ஆகும். இது முதன் முதலில் காங்கோ நாட்டில் 1970 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று உண்டாவது மிக அரிதான ஒன்றாக கருதப்படுகிறது.

 

முக்கிய தினம்

இரசாயனப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நினைவு தினம்

  • இரசாயனப் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30 அன்று சர்வதேச அளவில் அனுசரிக்கப்படுகிறது.
  • இரசாயனப் போரினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரவும், இரசாயன ஆயுதங்களைத் தடை செய்யும் அமைப்பின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தவும் ஐக்கிய நாடுகள் சபையால் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!