நடப்பு நிகழ்வுகள் – 26 ஏப்ரல் 2023

0
நடப்பு நிகழ்வுகள் – 26 ஏப்ரல் 2023
நடப்பு நிகழ்வுகள் – 26 ஏப்ரல் 2023
நடப்பு நிகழ்வுகள் – 26 ஏப்ரல் 2023

தேசிய செய்திகள்

அட்வான்டேஜ் ஹெல்த்கேர் இந்தியா 2023 நிகழ்வின் 6வது பதிப்பு புது தில்லியில் தொடங்குகிறது.

  • அட்வான்டேஜ் ஹெல்த்கேர் இந்தியா 2023 நிகழ்வின் ஆறாவது பதிப்பு ஏப்ரல் 26 முதல் இரண்டு நாள் நிகழ்வாக புது தில்லியில் தொடங்குகிறது. இந்நிகழ்ச்சியை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
  • மருத்துவம் மற்றும் சுகாதாரப் பொருட்களை உலகச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான இந்திய நிறுவனங்களின் திறனை இது வெளிப்படுத்தும். இந்த உச்சி மாநாட்டில் 70 நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள்.

தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூவில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

  • பிரதமர் நரேந்திர மோடி தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி , டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசத்தில் 4 ஆயிரத்து 800 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
  • சில்வாசாவில் உள்ள நமோ மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். டாமனில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில்’தேவ்கா ப்ரோமனேட் மற்றும் சீஃப்ரண்ட்’ என்ற இரண்டு அதிநவீன உள்கட்டமைப்பு திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

சூடானில் இருந்து 3,000 இந்தியர்களை வெளியேற்ற “ஆபரேஷன் காவேரி” தொடங்கப்பட்டுள்ளது.

  • சூடானில் போர் நிகழும் சூழலில் அங்கு சிக்கி தவிக்கும் 3000க்கும் மேற்பட்ட இந்தியர்களை காப்பாற்ற இந்தியா அரசால் “ஆபரேஷன் காவேரி” தொடங்கப்பட்டுள்ளது.
  • சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை காப்பாற்ற Super Hercules C-130J என்ற அதிக பளு தூக்கும் விமானங்களை ஜெட்டா விமானநிலையத்தில்(சவூதி அரேபியா) இந்திய அரசாங்கம் நிலைநிறுத்தியுள்ளது.
  • Indian citizens stranded in Sudan arrive at Port Sudan for their evacuation | Twitter/SJaishankar

மான்கிபாட்@100 தேசிய மாநாட்டை I&B அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

  • தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 26 ஏப்ரல் அன்று புது தில்லியில் மன் கி பாத்தில் ஒரு நாள் தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. 100 கோடியைத் தாண்டிய பிரதமரின் மாதாந்திர வானொலி ஒலிபரப்பின் வெற்றியைக் குறிக்கும் வகையில் அமைச்சர் ஸ்ரீ அனுராக் தாக்குர் முன்னிலையில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர் இந்த மாநாடு தொடங்கி வைக்கிறார்.
  • “மன் கி பாத்” நிகழ்ச்சியின் பல்வேறு அத்தியாயங்களில் பிரதமரால் குறிப்பிடப்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 100 மதிப்பிற்குரிய குடிமக்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள்.

மாநில செய்திகள்

  • கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.இந்த ரயில் சேவையானது திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை செயல்பட உள்ளது.
  • இது கேரளாவில் உள்ள 11 மாவட்டங்களை கடந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
    குறிப்பு: பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் இந்தியாவின் முதல் நீர்வழி மெட்ரோவை கொச்சினில்தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார செய்திகள்

ஐ.டி.சி நிறுவனமானது இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகளை பின்னுக்கு தள்ளி நாட்டின் 6-வது நிறுவனமாக மாறியுள்ளது.

  • சமீபத்தில் வர்த்தகத்தில் ஹெச்டிஎஃப்சி லிமிடெட்டை முந்திய பிறகு, இன்ஃபோசிஸின் சந்தை மூலதனத்தை ஐடிசி கடந்தது. பங்குகளின் மதிப்பு 412-ஐத் தாண்டியதால், ஐடிசி அதன் மார்க்கெட் கேப் தரவரிசையை மூன்றே மூன்று
    அமர்வுகளில் இரண்டு புள்ளிகள் உயர்த்தியுள்ளது.
  • கடந்த ஆண்டில், ஐடிசி 61% வருமானத்தை அளித்துள்ளது மற்றும் கடந்த மூன்று ஆண்டுகளில் 129%வருமானத்தையும் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

சமீபத்தில் 900அடி ஆழமுள்ள நீல ஆழ்துளை மெக்ஸிகோவில் கண்டுபிடிப்பு

  • உலகின் இரண்டாவது ஆழமான நீல ஆழ்துளை மெக்சிகோவின் யுகடன் தீபகற்பத்தின் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஆழ்துளை சேதுமால் விரிகுடாவில் நீருக்கடியில், சுமார் 900 அடி (274 மீட்டர்) ஆழம் மற்றும் 147,000 சதுர அடி (13,660 சதுர மீட்டர்) பரப்பளவைக் கொண்டு அமைந்துள்ளது.

நியமனம்

வங்கதேசத்தின் புதிய அதிபராக “முகமது சஹாபுதீன்” பதவி ஏற்பு

  • வங்கதேசத்தின் புதிய அதிபராக முகமது சஹாபுதீன்(வயது 73) பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
  • வங்கதேச மக்கள் குடியரசின் 22வது அதிபராக இன்று பதவியேற்றார்.
    முகமது அப்துல் ஹமீது வங்க தேசத்தின் 21-வது அதிபராக இருந்ததை அடுத்து முகமது சஹாபுதீன் புதிய அதிபராக (22வதாக) பதவி ஏற்றார்.
    குறிப்பு: இவர் முன்னாள் நீதிபதியாவார்.

தொல்லியல் ஆய்வுகள்

திருச்சுழி அருகே 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டெடுப்பு

  • விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி அருகே பரளச்சியில் இருந்து பெருநாழி செல்லும் சாலையில் பாம்பு கடித்து இறந்த வீரன் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த நடுகல்லில் வீரனின் உருவம் ஆபரணங்களுடனும் காலில் வீர கழலையுடனும் வணங்கியபடிவடிவமைக்கப்பட்டுள்ளது. வீரனின் தலைக்கு வலது புறம் ஒரு பாம்பு சீறியவாறு உள்ளது. எனவே இதனை பாம்பு கொத்தி பட்டான் கல் என்பர். இது18ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால சிற்பமாக இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய தினம்

உலக பென்குயின்கள் (பனிப்பாடி) தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 ஆம் தேதி உலக பென்குயின்கள் தினம் கொண்டாடப்படுகிறது . பென்குயின்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை
    இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பெரும்பாலான பென்குயின்கள் (பனிப்பாடி) தெற்கு அரைக்கோளத்தில் மட்டுமே வாழும். வடக்கு அரைக்கோளத்திற்கு செல்லாது.

உலக மலேரியா தினம்
  • மலேரியாவைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகளை அனுசரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 அன்று உலக மலேரியா தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான உலக மலேரியா தினத்தின் கருப்பொருள் :“Time to deliver zero malaria: invest, innovate, implement.”

Download PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!