நடப்பு நிகழ்வுகள் – 25 நவம்பர் 2022

0
நடப்பு நிகழ்வுகள் - 25 நவம்பர் 2022
நடப்பு நிகழ்வுகள் - 25 நவம்பர் 2022

நடப்பு நிகழ்வுகள் – 25 நவம்பர் 2022

தேசிய செய்திகள்

இந்தியா அக்னி -3 இடைநிலை ஏவுகணை பயிற்சி நடைபெற்றது

  • 23 நவம்பர் 2022 அன்று ஒடிசாவில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து அக்னி-3 என்ற இடைநிலை ஏவுகணையை பயிற்சியில் இந்தியா வெற்றிகரமாக ஏவியது.
  • பாதுகாப்பு அமைச்சகம் முன்னரே தீர்மானிக்கப்பட்ட வரம்பிற்கு ஏவப்பட்டது மற்றும் அமைப்பின் அனைத்து செயல்பாட்டு அளவுருக்களையும் சரிபார்க்கப்பட்ட பின்னர் அக்னி ஏவுகணை பயிற்சி நடைபெற்றது.

ஃபெர்ரி கிராஃப்ட்மஞ்சுளா’ (யார்டு 786)

  • ஸ்ரீ பினோத் குமார், ஐஏஎஸ், போக்குவரத்து முதன்மைச் செயலாளர், மேற்கு வங்காளம் கொல்கத்தாவில் உள்ள M/s ஷாலிமார் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஃபெரி கிராஃப்ட் ‘மஞ்சுளா’ (யார்டு 786)-ஐ   23 நவம்பர் 2022 அன்று தொடங்கிவைத்தார்.
  • முன்னதாக ஆறு படகுகளை போர்ட் பிளேயர், விசாகப்பட்டினம் மற்றும் மும்பையில் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இந்த ஃபெர்ரி கிராஃப்ட் 25 வருட சேவை கொண்ட வாழ்க்கையுடன் கட்டப்பட்டுள்ளது. இந்திய கடற்படையின் செயல்பாட்டு மற்றும் தளவாடத் தேவைகளுக்கு பயன்படும் வகையில் இந்த  படகுக் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொழில்முனைவோர் பிரிவு மற்றும் புதுமை மையம் (COI)

  • மத்திய அமைச்சர் ஸ்ரீ அஷ்வினி வைஷ்ணவ், இந்திய அரசின் டெலிகாம் ஆர் & டி மையமான டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையத்தின் (சி-டாட்) தொழில்முனைவோர் பிரிவு மற்றும் புத்தாக்க மையத்தை (COI) டெல்லி வளாகத்தில் நவம்பர் 23, 2022 அன்று திறந்து வைத்தார்.
  • COI ஆனது IoT/M2M, AI/ML, 5G போன்ற தொலைத்தொடர்புகளின் பல்வேறு களங்களில் உள்நாட்டு கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த தொழில்நுட்ப கட்டமைப்பை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க உள்ளூர் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக நிறுவப்பட்டுள்ளது.

கூட்டு HADR பயிற்சி சமன்வே – 2022

  • இந்திய விமானப்படையானது ஆக்ரா விமானப்படை நிலையத்தில் 28 நவம்பர் 2022 முதல் 30 நவம்பர் 2022 வரை வருடாந்திர கூட்டு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) பயிற்சி ‘சமன்வே 2022’ நடைபெறுகிறது.
  • சமன்வே 2022, சிவில் நிர்வாகம், ஆயுதப்படைகள் உட்பட பேரிடர் மேலாண்மையில் ஈடுபட்டுள்ள பல்வேறு தேசிய மற்றும் பிராந்திய பங்குதாரர்களால் HADR க்கான ஒருங்கிணைந்த பயிற்சி நடத்தப்படுகிறது.

 

சர்வதேச செய்திகள்

போதை பொருள் வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை இலங்கை அரசு உத்தரவு

  • அக்டோபர் 19 ஆம் தேதி திகதி,நச்சுப்பொருள், அபின், அபாயகர தடை சட்ட மசோதா இலங்கை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
  • மேலும் தற்போது 5 கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருந்தாலோ அல்லது விற்பனையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் திருத்தம் செய்யப்பட்டு இலங்கை அரசு தெரிவித்துள்ளது. 24 நவம்பர் 2022  முதல் இலங்கையில் இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

100மாடிகள் கொண்ட ஹைபர்டவர்துபாய்

  • துபாயில் 100 மாடிகள் கொண்ட ‘ஹைப்பர் டவர்’ கட்டுவதற்கான திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
  • இது உலகின் மிக உயரமான குடியிருப்பு கட்டிடமாக இருக்கும் என்று டெவலப்பர்கள் கூறுகின்றனர்.
  • ‘புர்ஜ் பிங்காட்டி ஜேக்கப் & கோ ரெசிடென்சஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஹைபர்டவர் மேல் பகுதியில் கிரீடத்தைப் போன்று வைர வடிவ கோபுரங்கள் இருக்கும்.

 

மாநில செய்திகள்

பிவானிஹன்சி சாலைப் பிரிவின் 4-வழிப்பாதை அமைப்பு

  • மத்திய அமைச்சர் ஸ்ரீ நிதின் கட்கரி, ஹரியானாவின் பிவானி மற்றும் ஹிசார் மாவட்டங்களில் பாரத்மாலா பரியோஜனாவின் திட்டத்தின் கீழ் NH-148B இன் பிவானி-ஹன்சி சாலைப் பிரிவின் 4-வழிப்பாதைக்கு ரூ.1322.13 கோடி பட்ஜெட்டில் ஒப்புதல் அளித்தார்.
  • இந்தப் பிரிவின் வளர்ச்சியானது நீண்ட பாதை போக்குவரத்து மற்றும் சரக்கு இயக்கத்தின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்தும், இது சீரான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தமிழ்நாட்டின் கோவை மாவட்டம் உருவான நாள்

  • ஆங்கிலேயர்களின் நிர்வாக வசதிக்காக 1804 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி கோவையைத் தலைநகராகக் கொண்டு கோவை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • தற்போது கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மான்செஸ்டராகவும், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகவும், தொழில் வளர்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களின் அடிப்படையில் முன்னேறிய நகரமாகவும் மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

நியமனங்கள்

பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதி நியமனம்

  • இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ISI) ஏஜென்சியின் முன்னாள் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக  24 நவம்பர் 2022 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மேலும் பாகிஸ்தான் ராணுவத்தின் புதிய தலைவரை பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் நியமிக்கப்பட்டார், மேலும் இதற்கு முன்னாள் பதவியில் இருந்த ஜெனரல் கமர் பஜ்வாவை தொடர்ந்து  இவர்  பதவி ஏற்கவுள்ளார்.

மலேசிய பிரதமராக அன்வர் இப்ராகிம் தேர்வு

  • மலேசியாவில் 222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான 15- வது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நவம்பர் 19,2022 அன்று நடைபெற்றது.
  • பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் மலேசிய மன்னர் அப்துல்லா மலேசியாவின் 10-வது பிரதமராக அன்வர் இப்ராஹிம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என அறிவிப்பு வெளியானது மற்றும் இந்திய நேரபப்டி 24-ம் தேதி நவம்பர் மாலை 5 மணிக்கு அவர் பிரதமராக பொறுப்பேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

மயோசைட்டிஸ்  குறிப்பு

  • மயோசைட்டிஸ் என்பது தசைகளின் ஏற்படும் வீக்கம்,மேலும் தசைகளில் ஏற்படும் இந்த வீக்கம் பல காரணங்களால் வரலாம். சிலருக்கு சில வகையான இன்ஃபெக்‌ஷனால் வரலாம். ஃப்ளூ பாதிப்பு, ஹெச்.ஐ.வி தொற்று போன்றவற்றாலும் வரலாம். ஆட்டோ இம்யூன் குறைபாடு காரணமாகவும் வரலாம்.
  • இந்நோய்க்கான அறிகுறிகள் தசைகளில் பலவீனம், சோர்வு மற்றும் தசைவலி.

 

விருதுகள்

தேசிய கோபால் ரத்னா விருதுகள் 2022

  • தேசிய கோபால் ரத்னா விருதானது தேசிய விருதுகளில் கால்நடை மற்றும் பால் துறையில் மிக உயர்ந்த விருதுகளில்  ஒன்றாகும்.
  • உள்நாட்டு விலங்குகளை வளர்க்கும் விவசாயிகள்,செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பால் கூட்டுறவு சங்கங்கள் / பால் உற்பத்தியாளர் நிறுவனம் / பால் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் போன்ற அனைத்து நபர்களையும் அங்கீகரித்து ஊக்குவிப்பதே இந்த விருது வழங்குவதன் முக்கிய நோக்கமாகும்.
வ.எண் வகை விருது வென்றவர்கள் தரவரிசை
1 நாட்டு மாடு/எருமை இனங்களை வளர்க்கும் சிறந்த பால் பண்ணையாளர்  ஜிதேந்திர சிங், ஃபதேஹாபாத், ஹரியானா. 1st
ரவிசங்கர் ஷஷிகாந்த் சஹஸ்ரபுதே, புனே, மகாராஷ்டிரா. 2nd
கோயல் சோனல்பென் நரன், கச், குஜராத். 3rd
2 சிறந்த செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர் (AIT) கோபால் ராணா, பலங்கிர், ஒடிசா 1st
ஹரி சிங், கங்காநகர், ராஜஸ்தான் 2nd
மாச்சேபள்ளி பசவையா, பிரகாசம், ஆந்திரா 3rd
3 சிறந்த பால் கூட்டுறவு சங்கம்/பால் உற்பத்தியாளர் நிறுவனம்/ பால் பண்ணை உற்பத்தியாளர் அமைப்பு மானந்தவாடி க்ஷீரோல்படக சககரனா சங்கம் லிமிடெட், வயநாடு, கேரளா. 1st
அரகெரே பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், மாண்டியா, கர்நாடகா. 2nd
மன்னார்குடி எம்.பி.சி.எஸ், திருவாரூர், தமிழ்நாடு 3rd

 

எழுத்தாளர் இமையத்துக்கு கன்னட தேசிய விருது

  • மறைந்த கவிஞர் குவெம்பு நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘கன்னட தேசிய கவி குவேம்பு ராஷ்டிரிய புரஸ்கார்’ விருது தமிழ் மொழிக்காக எழுத்தாளர் இமையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • எளிய நடைமுறையில் எழுத்தின் முக்கிய படைப்பாளியாக கருதப்படுபவர் எழுத்தாளர் இமையம். இவர் எழுத்தில் இதுவரை 11 நாவல்கள், 2 சிறுகதை தொகுப்புகள் வெளிவந்துள்ளன. மேலும் இவ்விருதுடன் பரிசாக வெள்ளிப்பதக்கமும் ரூ.5 லட்சமும் வழங்கப்படவுள்ளது.

 

முக்கிய தினம்

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்

  • குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை மற்றும் பாகுபாடு, அதிகார வன்முறை, கருச்சிதைவு, பால்ய விவாகம் என பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களைத் தடுக்கும் முயற்சியாகக் கொண்டு வரப்பட்டதே ‘சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்’. இது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 25-ந் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
  • பெண்ணுரிமை காப்பது, பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பது மற்றும் கண்டிப்பது, பெண்களின் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவற்றை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!