Current Affairs – 23th September 2022

0
Current Affairs – 23th September 2022
Current Affairs – 23th September 2022
Current Affairs – 23th September 2022

தேசிய செய்திகள்

நாகாலாந்தின் முதலமைச்சரின் உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் (CMHIS) தொடங்கப்படவுள்ளது

 

• நாகாலாந்து தனது சொந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான “முதலமைச்சரின் உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் (CMHIS)” அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
• இந்தத் திட்டம், மாநிலத்தின் அனைத்து குடிமக்களுக்கும் மருத்துவமனை பராமரிப்புக்கான செலவினங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
• ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான இலவச மருத்துவக் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது.
o CMHIS- Chief Minister’s Health Insurance Scheme

 

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அரசியலமைப்பை திருத்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது

 

• இந்தியாவில் செயல்படும் ஒலிம்பிக் சங்கத்தை கலைக்கவும் வரும் டிசம்பருக்குள் தேர்தலை முடிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இல்லையென்றால் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு தடை விதிப்பதாக எச்சரித்திருந்தது.
• இதை தொடர்ந்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி L. நாகேஸ்வர ராவை நியமித்துள்ளது.
• லாவு நாகேஸ்வர ராவ் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார்.
• அவர் பட்டியில் இருந்து நேரடியாக உச்ச நீதிமன்றத்திற்கு உயர்த்தப்பட்ட 7வது நபர் ஆவார், மேலும் அவர் மே 13, 2016 அன்று பதவியேற்றார்.

இந்திய ஒலிம்பிக் சங்கம்
o நிறுவப்பட்டது ஆண்டு: 1927
o தலைமையகம்: புது தில்லி
o தலைவர்: அடில்லே சுமரிவாலா

 

சிறையில் உள்ள கைதிகளுக்கு காளான் வளர்ப்பு,மண்புழு உரம் ஆகியவற்றை தயாரிக்கப் பயிற்சி

 

• சத்தீஸ்கரில் உள்ள கைதிகளுக்கு சிறையில் காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
• பலோடா பஜார் மாவட்டத்தில் அடைக்கப்பட்ட கைதிகளுக்கு மாநில அரசு சார்பில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
• சிறையில் இருந்து விடுதலை ஆகும் கைதிகள் அதன் பிறகான தனது வாழ்வை சீரமைத்துக்கொள்ள இந்த பயிற்சி உதவும் என்று அந்த மாவட்டத்தின் ஆட்சியாளர் கூறியுள்ளார்.
• சிறையில் காளான் வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.அரசின் முதன்மை திட்டத்தின் கீழ் இது மேற்கொள்ளப்படுகிறது.

சப்தர்ஜங் மருத்துவமனையில் முதல்முறையாக ரோபோ உதவியால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை செய்யப்பட்டுள்ளது

 

• சப்தர்ஜங் மருத்துவமனை, டயாலிசிஸ் செய்து, பல ஆண்டுகளாக மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருந்த ஒரு நோயாளிக்கு ரோபோடிக் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளது.
• உத்தரபிரதேச மாநிலம் ஃபருகாபாத் பகுதியை சேர்ந்த 39 வயதுடையவருக்கு இந்த மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
• சிறுநீரகம், ரோபோடிக்ஸ் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை துறையின் துறைத் தலைவர் பேராசிரியர் (டாக்டர்) அனுப் குமார் தலைமையிலான மருத்துவர்கள் குழுவால் இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
• நாட்டிலேயே முதல்முறையாக மத்திய அரசு மருத்துவமனையில் இது போன்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சர்வேதேச செய்திகள்

விண்வெளிக்கு முதல் பெண் வீரரை அனுப்பும் சவுதி!!!

 

• அடுத்த ஆண்டு பெண் உட்பட விண்வெளி வீரர்களை அனுப்ப சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது
• விஷன் 2030 என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு நவீன திட்டங்களை சவுதி அரேபியா செயல் படுத்தி வருகிறது.
• முதல் பெண் தூதர், பெண்கள் மகிழுந்து ஓடுவது, கால்பந்து விளையாடுவது போன்ற பல மாற்றங்கள் இத்திட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ளது.
• தற்போது இத்திட்டத்தின் கீழ் முதல் பெண் விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்புவதாக சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது.

 

18 – 65 வயதுகுப்பட்ட ஆண்கள் ரஷ்யாவை விட்டு வெளியேற தடை

 

• 18 – 65 வயது வரை உள்ளவர்கள் விமானம் மற்றும் ரயில்களில் நாட்டைவிட்டு வெளியேற பயணச்சீட்டு அளிக்கக் கூடாது’ என, அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
• ரஷ்யப் படைகளுக்கு எதிராக, உக்ரைன் ராணுவம் கடும் எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது, இந்நிலையில், ‘டிவி’ வாயிலாக ரஷ்ய மக்களிடையே அதிபர் விளாடிமிர் புடின் நேற்று முன்தினம் ஆற்றிய உரையில், ‘ரஷ்ய ராணுவத்தில் மூன்று லட்சம் வீரர்கள் இருப்பில் வைக்கப்படுவர்’ என, தெரிவித்தார்.
• அனைவரும் கட்டாய ராணுவ சேவையில் ஈடுபடும் சட்டத்தை ரஷ்ய அரசு அமல்படுத்தக் கூடும் என்பதால், மக்கள் நாட்டை விட்டு வெளியேற துவங்கியுள்ளார்கள்.
• ராணுவத்தின் முறையான அனுமதி உள்ளவர்கள் மட்டுமே நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவர் என்றும் அதிபர் கூறியுள்ளார்.

மாநில செய்திகள்

தமிழ்நிலம் இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

 

• சில ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல் மேற்கொள்ளும் வசதியை அரசு கொண்டு வந்தது. எனினும் ஆவணங்களை தாலுகா அலுவலங்களுக்கு நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
• தற்போது ஆன்லைன் சேவை மூலம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் தமிழ்நிலம் இணையதளத்தை தொடங்கி வைத்தார்.
• இந்த போர்ட்டலில் எங்கிருந்தும் நில பரிமாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் வசதியும், ஆன்லைன் சேவை மூலம் நகர்ப்புற கள வரைபடங்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் வசதியும் உள்ளது.

 

கண்டுபிடிப்புகள்
நிலநடுக்கத்தின் போது மீட்புக்காக ரிமோட் கண்ட்ரோல் கரப்பான் பூச்சிகள் ஜப்பானில் கண்டுபிடிப்பு !!!

 

• ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் “சைபோர்க்” கரப்பான் பூச்சியை கண்டுபிடித்துள்ளனர்.
• ஜப்பானிய ஆராய்ச்சி நிறுவனமான ரிக்கனில் உள்ள தின்-ஃபிலிம் சாதன ஆய்வகத்தில் கென்ஜிரோ ஃபுகுடா மற்றும் அவரது குழுவினர் 4 மைக்ரான் தடிமன் கொண்ட, மனித முடியின் 1/25 அகலம் மற்றும் பூச்சியின் அடிவயிற்றில் பொருத்தக்கூடிய ஒரு நெகிழ்வான சூரிய மின்கலத் தகடு உருவாக்கினர்.
• 1997 இல் பூச்சிகளை தொலைவிலிருந்து கட்டுப்படுத்த முடியும் என்பதை விஞ்ஞானிகள் முதன்முதலில் உணர்ந்தனர்.
• ஒரு சிறிய சோலார் பேனல்-சார்ஜ் செய்யப்பட்ட பேக்பேக் பொருத்தப்பட்டுள்ளது, அது மீட்பு நடவடிக்கையின் போது பூச்சிகள் நீண்ட காலத்திற்கு மீட்பு நடவடிக்கையில் செயல் பட உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

 

 

பொருளாதார செய்திகள்

தமிழகத்தின் சொந்த வரி வருவாய் 55% மற்றும் வரி அல்லாத வருவாய் 75% அதிகரித்துள்ளது

 

• FY 23 இன் முதல் காலாண்டில், தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் 55% மற்றும் வரி அல்லாத வருவாய் 75% உயர்ந்துள்ளது.
• பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருந்தாலும் வருவாய் மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் குறைத்து வளர்ச்சியை எட்டியுள்ளதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் தெரிவித்துள்ளார்.
• நாட்டிலேயே தமிழகத்தில் உணவுப் பணவீக்கம் மிகக் குறைவாக உள்ளது.
• மேலும், GST வசூல் 37% உயர்ந்துள்ளதாகவும், நேரடி வரி வசூல் 23% அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

ரூபாயின் மதிப்பும் ஒன்பது காசுகள் சரிந்து 80 ரூபாயாக வர்த்தகமானது

 

• நேற்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
• தொடர்ந்து இன்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஒன்பது காசுகள் சரிந்து 80 ரூபாய் மற்றும் 96 பைசாவாக உள்ளது.
• 40 ஆண்டுகள் இல்லாத அளவிற்க்கு அமெரிக்காவின் பணவீக்கம் சரிந்ததால் விலைவாசி அதிகமாக காணப்பட்டது.
• அதனால் அமெரிக்க கடன் வட்டி விகிதத்தை 0.75% ஆகா உயர்த்தியுள்ளது.
• இதனால் இந்தியா மற்றும் ஆசிய நாடுகளின் பணவீக்கமும் இதுவரை இல்லாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது

 

புவியியல் அடையாளங்கள்

சுடுமண்ணாலான முத்திரை, சங்கு வளையல்கள், செப்புக்காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது

 

• விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் நடைபெற்ற அகழாய்வில் சுடுமண்ணாலான முத்திரை, சங்கு வளையல்கள், செப்புக்காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
• இவ்வகழாய்வின் இயக்குனர் பாஸ்கர் பொன்னுசாமி, இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் வாணிபத் தொடர்பு வைத்திருந்ததாகவும் சங்குகளால் ஆன பொருள்களை பயன்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார.
• இதுவரை இந்த பகுதியில் 15 குழிகள் தோண்டப்பட்டு பல பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

புத்தக வெளியீடு

சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் என்ற புத்தகம் வெளியிட்டப்பட்டுள்ளது

 

• இன்று, ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்’ என்ற புத்தகத்தை, புதுதில்லியில் உள்ள ஆகாஷ்வானி பவனில் முன்னாள் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
• இப்புத்தகம் பிரதமர் நரேந்திர மோடியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளின் தொகுப்பாகும்.
• இந்த புத்தகம் மோடியின் அரசாங்கத்தின் யோசனைகள், உறுதிப்பாடு மற்றும் தீர்க்கமான தன்மையை பிரதிபலிக்கிறது.
• வரலாற்றாசிரியர்கள், அறிவுசார் மற்றும் மக்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் பற்றிய ஒரு பார்வையைப் பெற இந்த புத்தகம் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியுள்ளது.

முக்கிய தினங்கள்

சைகை மொழிகளின் சர்வதேச தினம்

 

• ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச சைகை மொழிகள் தினம் செப்டம்பர் 23 அன்று அனுசரிக்கப்படுகிறது.
• சர்வதேச காது கேளாதோர் வாரத்தின் ஒரு பகுதியாக 2018 ஆம் ஆண்டு முதல் சர்வதேச சைகை மொழிகள் தினம் அனுசரிக்கப்பட்டது.
• இந்த நாள் அனைத்து காது கேளாதோர் மற்றும் பிற சைகை மொழி பயனர்களின் மொழியியல் அடையாளம் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை ஆதரிக்கவும் பாதுகாக்கவும் ஒரு வாய்ப்பாகும்.
• காது கேளாதவர்களின் மனித உரிமைகளை உணர்ந்து கொள்வதில் சைகை மொழியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கருப்பொருள்

 

o இந்த ஆண்டு சைகை மொழிகளுக்கான சர்வதேச தினத்தின் கருப்பொருள் “சைகை மொழி எங்களை ஒன்றிணைக்கும்” என்பதாகும்.

இரண்டாம் காஷ்மீர் போர் முடிவுக்கு வந்த தினம்!!!

 

• 1965 இன் இந்திய-பாகிஸ்தான் போர் அல்லது இரண்டாவது காஷ்மீர் போர் என்பது ஏப்ரல் 1965 மற்றும் செப்டம்பர் 1965 க்கு இடையில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையே நடந்த மோதல்களின் உச்சக்கட்டமாகும்.
• பதினேழு நாள் யுத்தம் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது
• செப்டம்பர் 22 ஆம் நாள் ஐக்கிய நாடுகள் இரு நாடுகளையும் நிபந்தனையற்ற போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டது.
• அதனை அடுத்து சோவியத்தின் தாஷ்கெண்ட் நகரில் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் பாகிஸ்தான் தலைவர் அயூப் கானும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
• இதன்படி இருநாடுகளும் தங்கள் படையினரை தங்கள் எல்லைப் பகுதிக்குத் திரும்ப அழைக்க முடிவு செய்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!