நடப்பு நிகழ்வுகள் – 20 மே 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 20 மே 2023
நடப்பு நிகழ்வுகள் - 20 மே 2023

நடப்பு நிகழ்வுகள் – 20 மே 2023

தேசிய செய்திகள்
புதிய நாடாளுமன்ற கட்டிடமானது மே 28 அன்று திறக்கப்பட உள்ளது.
 • புது டெல்லியில் “புதியதாக கட்டப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தை” பிரதமர் நரேந்திர மோடி மே 28,2023 அன்று தொடங்கி வைக்க உள்ளார்.
 • நாடாளுமன்றத்தின் தற்போதைய கட்டிடத்தில், மக்களவையில் 543 உறுப்பினர்களும், ராஜ்யசபாவில் 250 உறுப்பினர்களும் அமரும் வகையில் உள்ள நிலையில் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, புதிதாக கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற கட்டிடத்தில், மக்களவையில் 888 உறுப்பினர்களும், ராஜ்யசபாவில் 300 உறுப்பினர்களும் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தொடர் “லோக்சபா சேம்பரில்” மட்டுமே நடைபெறும் பட்சத்தில், அங்கு 1280 எம்.பி.க்கள் வரை அமர முடியும் என்பது இந்த கட்டிடத்தின் சிறப்பாகும்.

ஆபரேஷன் கருணா
 • மியான்மரில் மோச்சா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக இந்தியா “ஆபரேஷன் கருணா”என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
 • இதன்படி நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய கடற்படையின் மூன்று கப்பல்களானது 18 மே அன்று  மியான்மரின் யாங்கூனை வந்தடைந்தன, மற்றும் 4வது கப்பல் மே-19 அன்று மியான்மரை அடையும் என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது .

நேபாளத்தில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா மற்றும் நேபாள அரசுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமானது கையெழுத்திடப்பட்டுள்ளது. 
 • இந்திய அரசின் மானிய உதவியின் கீழ் நேபாளத்தில் மொத்தம் 80.33 மில்லியன் மதிப்பிலான இரண்டு சமூக மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்தியா மற்றும் நேபாளமானது மே 18 அன்று கையெழுத்திட்டுள்ளன. 
 • நேபாள மக்களுக்கு சிறந்த சுகாதார மற்றும் கல்வி வசதிகளை வழங்குவதையும், நேபாளத்தில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும் இந்த இரண்டு திட்டங்களும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நாட்டின் முதல் “8 வழி உயர்மட்ட சாலையானது” புதுடில்லி மற்றும் ஹரியானா இடையே வர உள்ளது.
 • புதுடில்லியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த “துவாரகா எட்டு வழி உயர்மட்ட சாலையின் ” பணிகளானது 2024ஏப்ரலில் முடிவடையும்,” என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 • புது டெல்லி  மற்றும் ஹரியானாவின் குருகிராம் இடையிலான இந்த உயர்மட்ட விரைவுச் சாலையானது, புதுடில்லி, ஜெய்ப்பூர், ஆமதாபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு செல்லும் தங்க நாற்கரச் சாலையின் ஒரு பகுதியாக அமைகிறது.

விங்ஸ் இந்தியா(Wings India) 2024
 • ஆசியாவின் மிகப்பெரிய சிவில் விமானப் போக்குவரத்து நிகழ்வான “விங்ஸ் இந்தியா 2024” ஆனது, 2024 ஜனவரி 18 முதல் 21 வரை இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள “பேகம்பேட் விமான நிலையத்தில்” நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
 • “உலகத்தை இணைத்தல்: இந்தியாவுக்கான மேடையை 2047க்குள் அமைத்தல்(Connecting the World: Setting the Stage for India by 2047) என்பது இந்த நிகழ்வின் கருப்பொருளாகும்.

நிலையான விமான எரிபொருளைப் பயன்படுத்தி இந்தியாவின் முதல் வணிக பயணிகள் விமானம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
 • விமானப் போக்குவரத்துத் துறையை “கார்பன் குறைப்பு” செய்வதை நோக்கமாக கொண்டு, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட “நிலையான விமான எரிபொருளைப்(SAF)” பயன்படுத்தி நாட்டின் “முதல் வணிகப் பயணிகள் விமானமானது” மே 19 அன்று வெற்றிகரமாக பறந்து சோதனையில் வெற்றி பெற்றுள்ளது.
 • தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்கிய SAF என்ற கலப்பு எரிபொருளால் இயக்கப்பட்ட ஏர் ஆசியா விமானமானது புனேவில் இருந்து டெல்லிக்கு சென்றது
  • SAF-Sustainable Aviation Fuel


சர்வதேச செய்திகள்

7வது நேபாள சேம்பர் எக்ஸ்போ 2023 – காத்மாண்டுவில் தொடக்கம்.
 • ஏழாவது நேபாள சேம்பர் எக்ஸ்போ 2023 ஆனது காத்மாண்டுவில் உள்ள “பிரிகுடிமண்டப்பில்” மே 18 அன்று துவங்கியுள்ளது.இது மே 22 வரை நடைப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • வெளிநாட்டு வர்த்தக சமூகத்துடன் இணைந்து உள்நாட்டு வணிக சமூகமானது சாத்தியமான போட்டித் திறன்களை ஆராய்வதை, இந்த கண்காட்சி ஊக்குவிக்கும் என்று நேபாள வர்த்தக சபை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிற்கு பொருளாதார தடையை இங்கிலாந்து  விதித்துள்ளது. 
 • ஜப்பானில் நடைப்பெற்ற G7 கூட்டத்திற்கு முன்னதாக ரஷ்யாவின் இராணுவ-தொழில்துறை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் உலோகங்கள் மற்றும் வைரங்கள் ஆகியவற்றை தடை செய்வதாக ஐக்கிய இராச்சியம்(UK) அறிவித்துள்ளது.
 • இந்த பொருளாதாரத் தடைகளின் தாக்கத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகளில் ஈடுப்படும் மற்றும் ரஷ்யாவிற்கு தீவிரமாக உதவி செய்பவர்களும் இந்த தடையில் அடங்குவர் என UK அரசாங்கம் தெரிவித்துள்ளது. G7 நாடுகளும் இதே போன்ற தடைகளை ரஷ்யா மீது விதிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மாநில செய்திகள்
இல்லம் தேடி பிரசாதம்; தமிழ்நாடு அரசு புதிய திட்டம்.
 • தமிழகத்தில் கோயில் பிரசாதங்களை “தபால் துறை” மூலம் பக்தர்களின் வீடுகளுக்கு அனுப்பப்படும் திட்டமானது மே 18 அன்று தொடங்கப்பட்டுள்ளது.
 • இத்திட்டத்தின் முதற்கட்டமாக “48 முதல்நிலை திருக்கோவில்களில்” பிரசாதங்களானது தபால் மூலம் வீடுகளுக்கே அனுப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நியமனங்கள்
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக கே.வி.விஸ்வநாதன், நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா நியமனம்.
 • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் மற்றும் நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக மே 19 அன்று பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். 
 • நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் நீதிபதி எம் ஆர் ஷா ஆகியோர் ஓய்வு பெற்றதையடுத்து, இவர்கள் இருவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
                                            தொல்லியல் ஆய்வுகள்
நாயக்கர் காலத்து கல்வெட்டுடன் கூடிய நடுகல் கண்டுபிடிப்பு.
 • திருமங்கலத்தை அடுத்த சாத்தங்குடி பகுதியில் நடத்தப்பட்ட அகழாய்வில் நாயக்கர் கால கல்வெட்டுடன் கூடிய நடுக்கல்லானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 • இந்த நடுகல்லானது 3 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டு செதுக்கப்பட்டுள்ளது என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

“பொருநை அகழ்வாராய்ச்சியின் கலைப்பொருட்களை” காட்சிப்படுத்தும் அருங்காட்சியகமானது அமைய உள்ளது.
 • திருநெல்வேலியில் “பொருநை அகழ்வாராய்ச்சியின் கலைப்பொருட்களை” காட்சிப்படுத்தும் அருங்காட்சியகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மே 18 அன்று அடிக்கல் நாட்டினார்.
 • இந்த அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூர், கொற்கை மற்றும் சிவகாலை ஆகிய இடங்களில் “தொல்லியல் துறை அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள்” காட்சிப்படுத்தப்படும் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

“நல்லமலா” என்னும்  வனப்பகுதியில் “விஜயநகர காலத்து கிணறு” ஆனது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 • ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டத்தில் உள்ள “நல்லமலா” என்னும்  வனப்பகுதியில் “விஜயநகர காலத்து பாழடைந்த கிணறு” ஆனது மே 18 அன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 • அந்த காலத்தில் “வீர்ல பாடுவ பாவி” என்று அழைக்கப்பட்ட இந்த கிணறானது, 16 ஆம் நூற்றாண்டில் சதாசிவ தேவராய பேரரசராக இருந்தபோது தோண்டப்பட்டது என அகழ்வாராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

புத்தக வெளியீடு

“தமிழ்நாட்டு பண்பாட்டு மரபுகள் – புதுக்கோட்டை வட்டாரம்” என்ற புத்தகம் வெளியீடு.
 • புதுக்கோட்டை வட்டாரத்தில் காணப்படும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் அமைந்த “தமிழ்நாட்டு பண்பாட்டு மரபுகள் – புதுக்கோட்டை வட்டாரம்” என்ற புத்தகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
 • பேராசிரியா் கா.ராஜன், முனைவா்கள் வி.ப.யதீஸ்குமார், முத்துக்குமார், பவுல்துறை ஆகியோர் இணைந்து, இரண்டு தொகுதிகளாக இந்த புத்தகத்தை எழுதியுள்ளனர்.

வங்கி செய்திகள்

இந்தியாவின் இரண்டாவது அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக SBI உருவெடுத்துள்ளது.
 • இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்கும் நிறுவனமான, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக SBI உருவெடுத்துள்ளது.
 • கடந்த மூன்று ஆண்டுகளில் எஸ்பிஐ – ஆனது வருவாயில் 41 சதவீத வளர்ச்சியைப் தாண்டியுள்ளதால், 2023-ஆம்  நிதியாண்டின் அதிக லாபம் ஈட்டும் இரண்டாவது நிறுவனமாக மாறியுள்ளது.

முக்கிய தினம்

உலக தேனீ தினம்
 • தேனீக்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், மகரந்தச் சேர்க்கையின் முக்கியத்துவம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு அவற்றின் பங்களிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று உலக தேனீ தினம் அனுசரிக்கப்படுகிறது.
 • 2023 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் :”Bee engaged in pollinator-friendly agricultural production”

Download PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!