நடப்பு நிகழ்வுகள் – 19 அக்டோபர் 2022

0
நடப்பு நிகழ்வுகள் - 19 அக்டோபர் 2022
நடப்பு நிகழ்வுகள் - 19 அக்டோபர் 2022

நடப்பு நிகழ்வுகள் – 19 அக்டோபர் 2022

தேசிய செய்திகள்

எல்.ஐ.சி., சார்பில், ‘தன் வர்ஷா’ எனும் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்

  • இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக எல்.ஐ.சி, ‘தன் வர்ஷா’ எனும் புதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
  • இத்திட்டம், பாதுகாப்பு மற்றும் சேமிப்பு என, இரு அம்சங்களையும் சேர்த்து வழங்குகிறது. பாலிசி எடுத்தவர் எதிர்பாராமல் இறந்து விட்டால், நிதி உதவி கிடைக்கும்.
  • இந்த பாலிசியின் குறைந்தபட்ச காப்பீடு தொகை 1.25 லட்சம் ரூபாய்; அதிகபட்ச வரம்பு கிடையாது. பிரீமியம் செலுத்தும் காலம் 10 ஆண்டுகள் அல்லது 15 ஆண்டுகள் என இரு வகையாக உள்ளது. கடன் வசதியும் உண்டு,இந்த திட்டத்தில், அக்., 17 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31க்குள் இணையலாம்.

இன்டர்போல் 90வது பொதுக்குழு கூட்டம்

  • டெல்லியில் அக்டோபர் 18-21 தேதிகளுக்கு இடையே பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் இன்டர்போல் 90வது பொதுக்குழுவை முன்னிட்டு நினைவு தபால் தலைகள் மற்றும் ரூ.100 நாணயங்களை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
  • டெல்லியில் நடைபெறும் INTERPOL கூட்டத்தில் அமைச்சர்கள், நாடுகளின் போலீஸ் தலைவர்கள், தேசிய மத்திய பணியகங்களின் தலைவர்கள் மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகள் அடங்கிய 195 INTERPOL உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
  • INTERPOL உச்ச நிர்வாகக் குழுவான பொதுச் சபை அதன் செயல்பாடு தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க ஆண்டுக்கு ஒருமுறை கூடுகிறது.

சர்வதேச செய்திகள்

போதைப் பொருளான கஞ்சாவை ஹோம் டெலிவரி செய்ய – கனடாவில் சட்டப்பூர்வ அனுமதி

  • கனடாவில் பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான உபர் ஈட்ஸ் (Uber Eats) சட்டப்பூர்வமாக வீட்டிற்கே கஞ்சாவை டெலிவரி செய்து வருகிறது.
  • இதற்காகவே பிரத்யேகமாக, கஞ்சா விற்பனை இணையதளமான லீஃப்லி உடன் இணைந்து இதனை நடைமுறைப்படுத்தியிருக்கிறது.
  • மேலும், ஆன்லைன் மூலம் கஞ்சாவை ஆர்டர் செய்யும் நபர் 19 வயதைக் கடந்திருக்க வேண்டும். கஞ்சா டெலிவரி செய்யப்படும்போது அவரின் வயது சரிபார்க்கப்படும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளையும் அந்த நிறுவனம் விதித்திருக்கிறது.

5வது சர்வதேச சூரிய சக்தி கூட்டணி

  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சரான ஸ்ரீ ராஜ் குமார் சிங், புதுடெல்லியில் நடைபெற்ற சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் ஐந்தாவது சட்டசபையை தொடங்கி வைத்தார்.
  • இந்தியா ISA சட்டமன்றத்தின் தலைவர் பதவியை வகிக்கிறது, பிரான்ஸ் அரசாங்கம் இணைத் தலைவராக உள்ளது.
  • ISA-வின் ஐந்தாவது கூட்டம், ஆற்றல் அணுகல், ஆற்றல் பாதுகாப்பு மற்றும் ஆற்றல் மாற்றம் ஆகிய மூன்று முக்கியமான பிரச்சினைகளில் ISA இன் முக்கிய முயற்சிகள் குறித்து விவாதிக்கபடவுள்ளது.
    • ISA- International Solar Alliance

மாநில செய்திகள்

பிரதமர் மோடி டெஃப்எக்ஸ்போவை குஜராத் மாநிலத்தில்  தொடங்கி வைக்கிறார்

  • பிரதமர் நரேந்திர மோடி 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி காந்திநகரில் DefExpo 22 ஐத் தொடங்கி வைக்கிறார், மேலும் குஜராத்தில் ரூ 15,670 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். ‘பெருமைக்கான பாதை’ என்ற கருப்பொருளின் கீழ் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.
  • ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) வடிவமைத்த உள்நாட்டு பயிற்சி விமானமான HTT-40-ஐ பிரதமர் கண்காட்சியில் வெளியிடுகிறார்

ரேஷன் கடையில் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்கள் வினியோகம்

  • தமிழக ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறையில் உணவுப்பொருட்கள் பெறுவதில் சிரமம் இருப்பதை அடுத்து,’ஐரிஷ்’ என்ற கண் கருவிழி சரிபார்ப்பு கருவி சோதனை செய்து பெண்களுக்கு உணவு பொருட்களை வழங்கம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • மேலும் இந்தத்திட்டத்தை சோதனை அடிப்படையில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • கேரளா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களில் முழுமையாக கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது.

நியமனங்கள்

உச்ச நீதி மன்றத்தின் புதிய தலைமை நீதிபதி  நியமனம்

  • உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமிக்கப்படுவதாக மத்திய அரசு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. அவர் நாட்டின் 50-வது தலைமை நீதிபதி ஆவார்.
  • நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நவம்பர் 9-ந்தேதி, புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறார். அவர் 2024-ம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதிவரை பொறுப்பில் இருப்பார்.

இந்திய கிரிக்கெட் வாரிய புதிய தலைவர் நியமனம்

  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) 91-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நடக்கிறது, இந்திய கிரிக்கெட் வாரிய புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் வீரரும், கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகியுமான 67 வயது ரோஜர் பின்னி அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்க இருக்கிறார்.
  • இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக ஜெய் ஷா மீண்டும் தேர்வாகிறார்.

இங்கிலாந்து அதிபர் ஜெர்மி ஹன்ட்-ன் புதிய பொருளாதார ஆலோசனைக் குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம் 

  • இங்கிலாந்து அதிபர் ஜெர்மி ஹன்ட் புதிய பொருளாதார ஆலோசனைக் குழுவிற்கு நியமிக்கப்பட்ட நான்கு நிதி நிபுணர்களில் இந்திய வம்சாவளி முதலீட்டு நிபுணரான சுஷில் வாத்வானியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர் பாங்க் ஆஃப் இங்கிலாந்தின் சுயாதீன நாணயக் கொள்கைக் குழுவின் (MPC) முன்னாள் உறுப்பினராக இருந்துள்ளார்.
  • MPC- Monetary Policy Committee

விருதுகள்

சர் சையத் எக்ஸலன்ஸ் சர்வதேச விருது-2022

  • அமெரிக்க வரலாற்றாசிரியரும், தெற்காசிய வரலாறு மற்றும் இஸ்லாம் பற்றிய சர்வதேசப் புகழ்பெற்ற அறிஞருமான பார்பரா டி மெட்கால்ஃப் 2022 ஆம் ஆண்டிற்கான சர் சையத் எக்ஸலன்ஸ் சர்வதேச விருதைப் பெற்றார்.
  • அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் அதன் நிறுவனர் சர் சையத் அகமது கானின் பிறந்தநாளில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.

2022-க்கான புக்கர் பரிசை  வென்றார் இலங்கை எழுத்தாளர்

  • இலங்கையை சேர்ந்த எழுத்தாளரான சேகன் கருணாதிலக ஆண்டுதோறும் சிறந்த நாவல் படைப்புக்காக வழங்கப்படும் புக்கர் பரிசை வென்றார்.
  • ‘The Seven Moons of Maali Almeida’ என்ற நாவல் படைப்புக்காக அவர் புக்கர் பரிசை வென்றுள்ளார்.மேலும் அவருக்கு 50 ஆயிரம் பவுண்டுகள் பரிசு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

கால்பந்து போட்டியின் உயரிய விருதை வென்றார் பிரான்ஸ் வீரர் கரிம் பென்சிமா

  • ஒவ்வொரு ஆண்டும் கால்பந்தாட்ட போட்டியில் உலகில் சிறந்து விளங்கும் வீரருக்கு பாலன் டி ஓர் விருது வழங்கப்டுகிறது.2021-க்கான விருதை மெஸ்ஸி வென்றார்.
  • இந்த நிலையில்2022-ம் ஆண்டுக்கான பாலன் டி ஓர் விருதை பிரான்ஸ் நாட்டு கால்பந்தாட்ட வீரர் கரிம் பென்சிமா வென்றுள்ளார்.

விளையாட்டு செய்திகள்

ஏய்ம்செஸ் ரேபிட் ஆன்லைன் சாம்பியன்ஷிப்

  • ஏய்ம்செஸ் ரேபிட் ஆன்லைன் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நவம்பர் வரை 9 சுற்றுகளாக நடத்தப்பட்டுவருகிறது.
  • ஒன்பதாவது சுற்று ஆட்டத்தில் 16 வயதான தமிழக வீரர் குகேஷ் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார், இந்த ஆட்டத்தில் 26வது நகர்த்தலில் கார்ல்சனை வீழ்த்தி குகேஷ் சாதனை படைத்துள்ளார்.
  • ஏற்கனவே இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி ஏழாவது சுற்று ஆட்டத்தில் கார்ல்சனை வீழ்த்தி இருந்த நிலையில் தற்போது தமிழக வீரர் குகேஷ் 9 வது சுற்றில் கார்ல்சனை வீழ்த்தி இருக்கிறார்.

சான் டியாகோ ஓபன் டென்னிஸ் 2022:

  • சான் டியாகோ ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக் குரோஷியவின் டோனா வேகிக்கை வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
  • இதன் மூலம் இந்த ஆண்டின் எட்டாவது டபிள்யூ.டி.ஏ பட்டத்தை இகா ஸ்வியாடெக் வென்று உள்ளார்.

டென்னிஸ் தரவரிசை பட்டியல்

  • டென்னிஸ் போட்டியில் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு (டபிள்யூ.டி.ஏ.) வெளியிட்டு வருகிறது.
  • இந்த தரவரிசை பட்டியலில் இகா ஸ்வியாடெக் முதல் இடத்திலும், ஆன்ஸ் ஜேபியர் 2-வது இடத்திலும், ஆனெட் கொன்டாவிட் 3-வது இடத்திலும், ஆரைனா சபலென்கா 4-வது இடத்திலும், ஜெஸ்சிகா பெகுலா 5-வது இடத்திலும் உள்ளனர்.

முக்கிய நாள்

உலகளாவிய கண்ணிய தினம்

  • உலகளாவிய கண்ணியம் தினம் என்பது இளைஞர்களுக்கு கல்வி கற்பிப்பதற்கும், ஊக்கமளிப்பதற்கும் அவர்களின் சுய மதிப்பு மற்றும் குறிக்கோள்களைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுவதற்கும் ஒரு முன்முயற்சியாகும்.
  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மூன்றாவது புதன்கிழமை உலகளாவிய கண்ணிய தினத்தை அங்கீகரிக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!