நடப்பு நிகழ்வுகள் – 17 நவம்பர் 2022

0
நடப்பு நிகழ்வுகள் – 17 நவம்பர் 2022
நடப்பு நிகழ்வுகள் – 17 நவம்பர் 2022

நடப்பு நிகழ்வுகள் – 17 நவம்பர் 2022

தேசிய செய்திகள்

NCW பெண்களுக்கான டிஜிட்டல் சக்தியின் நான்காவது கட்டத்தை அறிமுகப்படுத்துகிறது

  • பெண்களுக்கான தேசிய ஆணையம் (NCW) டிஜிட்டல் சக்தி பிரச்சாரத்தின் நான்காவது கட்டத்தை அறிமுகப்படுத்தியது, இது சைபர்ஸ்பேஸில் பெண்கள் மற்றும் சிறுமிகளை டிஜிட்டல் முறையில் மேம்படுத்துதல் மற்றும் திறமையாக்குவதற்கான ஒரு பான்-இந்தியா திட்டமாகும்.
  • ஆன்லைனில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பாதுகாப்பான இடங்களை உருவாக்குவதற்கான அதன் உறுதிப்பாட்டிற்கு இணங்க, டிஜிட்டல் சக்தி0 பெண்களை டிஜிட்டல் திறன் கொண்டவர்களாக மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது.
  • சைபர்பீஸ் அறக்கட்டளை மற்றும் மெட்டாவுடன் இணைந்து NCW இதை அறிமுகப்படுத்தியது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • சர்வதேச நிதி சேவை மைய ஆணையமும், இந்திய ரிசர்வ் வங்கியும் தங்களது வரம்பிற்கு உட்பட்ட துறைகளில் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு பணிகளில் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டுள்ளன.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் அந்தந்த நிதி சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதோடு, வர்த்தக வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு உகந்த சூழல்களையும் பெரு வதற்கும் வழிவகை செய்கிறது.

 

சர்வதேச செய்திகள்

பருவநிலை பாதுகாப்பு பட்டியலில் 8வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்

  • பருவநிலையைபாதுகாப்பதில் ஐரோப்பிய யூனியன் மற்றும் 59 நாடுகளின் செயல்திறனை ஜெர்மன்வாட்ச், நியூ கிளைமேட் இன்ஸ்டிட்யூட், கிளைமேட் ஆக்ஷன் நெட்வொர்க் ஆகிய 3 அரசுசாரா அமைப்புகள் பின்தொடர்ந்து வருகின்றன.அந்த அமைப்புகள் 2023ஆம் ஆண்டுக்கான பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டு (சிசிபிஐ) தரவரிசையை வெளியிட்டுள்ளன.
  • இந்தத்தரவரிசையில், இந்தியா 2 இடங்கள் முன்னேறி 8ஆவது இடம் பிடித்துள்ளது. எந்தவொரு நாடும் அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பாக செயல்படுவதில்லை என்பதால், தரவரிசையின் முதல் 3 இடங்கள் காலியாக விடப்பட்டுள்ளது என்று அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
  • அதன்படி, 4-ஆவதுஇடத்தை டென்மார்க், 5-ஆவது இடத்தை ஸ்வீடன்,சீனா 51-ஆவது இடத்தையும், அமெரிக்கா 52-ஆவது இடத்தையும், ரஷியா 59-ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

 

நியமனங்கள்

NITI ஆயோக்கின் முழு நேர உறுப்பினராக அரவிந்த் விர்மணி நியமிக்கப்பட்டுள்ளார்

  • மத்திய அரசு மூத்த பொருளாதார நிபுணராக டாக்டர் அரவிந்த் விர்மணி NITI ஆயோக்கின் முழுநேர உறுப்பினராக நியமித்துள்ளது.
  • பொருளாதார வளர்ச்சி மற்றும் நலனுக்கான இலாப நோக்கற்ற பொதுக் கொள்கை அமைப்பின் நிறுவனர்-தலைவர் விர்மணி, 2007-09 வரை மன்மோகன் சிங் தலைமையிலான UPA அரசாங்கத்தின் போது நிதி அமைச்சகத்தில் தலைமைப் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார்.

ஐஐஎம்அகமதாபாத் வாரியத்தின் புதிய தலைவர் நியமனம்

  • இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அகமதாபாத் (IIM-A) ஐஐஎம்-ஏ கவர்னர்கள் குழுவின் புதிய தலைவராக பங்கஜ் ஆர் படேலை நியமிக்கப்பட்டுள்ளார்.
  • குமார் மங்கலம் பிர்லா நவம்பர் 15, 2022 இல் தனது நான்கு ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்ததை தொடர்ந்து படேல் நியமிக்கப்பட்டுள்ளார்,மேலும் இவர் IIM-A இன் 14வது தலைவர் ஆவர்.

 

விருதுகள்

தமிழக அரசின் . .சி விருது

  • சென்னை காமராஜர்,காட்டுப்பள்ளி உள்பட பல்வேறு துறைமுகங்களை மேம்படுத்தியதற்காக திருவாரூர் எண்ணரசு கருநேசனுக்கு தமிழக அரசின் வ.உ.சி.விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இவர் 33 ஆண்டுகளாக துறைமுகம் மற்றும் சரக்கு பெட்டக தொழிலில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்தியுள்ளார் மேலும் மும்பை,முந்த்ரா,காட்டுப்பள்ளி போன்ற துறைமுகங்களில் ஏற்றுமதி,இறக்குமதி யை உலக தரத்திற்கு உயர்த்தியுள்ளார்.

நியூ சவுத் வேல்ஸ் ஆஸ்திரேலியன் விருது

  • 41 வயதான இந்திய வம்சாவளி சீக்கிய தன்னார்வலர் அமர் சிங், மேலும் மூவருடன் 2023 ஆம் ஆண்டின் நியூ சவுத் வேல்ஸ் ஆஸ்திரேலியன் விருது பெற்றுள்ளனர்.
  • வெள்ளம், காட்டுத்தீ, வறட்சி மற்றும் தொற்றுநோய்களின் போது சமூகத்திற்கு ஆதரவளித்ததற்காக அவர் இந்த விருதைப் பெற்றுள்ளார்.

 

விளையாட்டு செய்திகள்

ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்

  • ஆண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் போட்டியில் ஷிவா நர்வால் தங்கம் வென்றார், அதே சமயம் ஜூனியர் ஆடவர் பிரிவில் சாகர் டாங்கி தங்கம் வென்றார்.
  • ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் யூத் பிரிவில் சந்தீப் பிஷ்னோய், சாஹில் மற்றும் அமித் ஷர்மா மூவரும் கொரிய அணியை 16-8 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றனர், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இளைஞர் போட்டியில் கனிஷ்கா தாகர், யஷ்சவி ஜோஷி மற்றும் ஹர்னவ்தீப் கவுர் ஆகியோர் இறுதிப் போட்டியில் மற்றொரு கொரிய அணியை 16-10 என்ற கணக்கில் தோற்கடித்தனர்.
  • கொரியாவில் டேகுவில் நடைபெற்ற ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்பில் இந்தியா இதுவரை 17 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

 

முக்கிய தினம்

தேசிய பத்திரிகை தினம்

  • சுதந்திரமான மற்றும் பொறுப்பான பத்திரிக்கையை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 ஆம் தேதி தேசிய பத்திரிகை தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 1996 முதல் இந்திய தேசிய பத்திரிகை கவுன்சிலால்,தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடப்படுகிறது. ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்கும் பராமரிப்பதற்கும் முக்கிய பங்கு வகிக்கும் ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளின் பணியை கௌரவிக்கும் வகையில் தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச மாணவர் தினம்

  • சர்வதேச மாணவர் தினம் ஆண்டுதோறும் – நவம்பர் 17, அனுசரிக்கப்படுகிறது
  • 1939 நாஜி ஆக்கிரமிக்கப்பட்ட செக் குடியரசில், செக்கோஸ்லோவாக் அரசு உருவானதன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்காக 1,200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்,பின்னர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1942 இல், லண்டனில், சர்வதேச மாணவர் கூட்டம் நாசிசத்திற்கு எதிராக போராடியவர், இறந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும் நவம்பர் 17 அன்று அனுசரிக்கப்படுகிறது.

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!