நடப்பு நிகழ்வுகள் – 16 மார்ச் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 16 மார்ச் 2023
நடப்பு நிகழ்வுகள் - 16 மார்ச் 2023

நடப்பு நிகழ்வுகள் – 16 மார்ச் 2023

தேசிய செய்திகள்

இந்தியாவும் உலக வங்கியும்  கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

  • இந்தியாவும் உலக வங்கியும் இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பசுமை தேசிய நெடுஞ்சாலைத் தாழ்வாரத் திட்டத்தை அமைப்பதற்கான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • 500 மில்லியன் டாலர் கடன் உதவியுடன், இந்த மாநிலங்களில் 781 கிலோமீட்டர்கள் நெடுஞ்சாலைத் தாழ்வாரம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அடிப்படை கால்நடை பராமரிப்புப் புள்ளி விவரங்கள்-2022 வெளியிடப்பட்டுள்ளது

  • மத்திய அமைச்சர் ஸ்ரீ பர்ஷோத்தம் ரூபாலா திணைக்களத்தின் ஆண்டு வெளியீடான ‘அடிப்படை கால்நடைப் புள்ளி விவரங்கள் 2022’ ஐ வெளியிட்டார்.
  • இந்த வெளியீட்டில் கால்நடைகளின் எண்ணிக்கை, கால்நடை உற்பத்தி மற்றும் விலங்கு நோய்கள், உள்கட்டமைப்பு போன்ற பிற தகவல்களைப் பற்றிய முக்கியமான கால்நடை புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கால்நடை பராமரிப்புத் துறையின் மேலோட்டத்தை சுருக்கமாக வழங்குகிறது.
    • 2021-22 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த பால் உற்பத்தி 221.06 மில்லியன் டன்களாக உள்ளது.
    • நடப்பு 2021-22 ஆம் ஆண்டில், பால் உற்பத்தி 5.29% ஆண்டு வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது.

 

சர்வதேச செய்திகள்

உலகின் அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியல் வெளியீடு

  • ஆசியாவின் அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் உள்ள 12 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐக்ஃயூஏர் ஆய்வு நிறுவனம் உலகின் மிகவும் மாசடைந்த நகரங்கள் குறித்த ஆய்வினை  மேற்கொண்டது.
  • அந்த ஆய்வின் முடிவில் மிகவும் மாசடைந்த முன்னணி 15 நகரங்களில் 12 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என்னும் தகவல் வெளிவந்துள்ளது. இதன் விளைவாக உலகின் அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது.

 

மாநில செய்திகள்

அங்கக வேளாண்மை கொள்கை- தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார்

  • வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் ‘தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை 2023’-ஐ (TamilNadu Organic Farming Policy) முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். ஏற்றுமதியை ஊக்குவித்து, விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பது இதன் நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அங்கக வேளாண்மை கொள்கை மூலம் மண் வளம் காத்தல், பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவை வழங்குதல் போன்ற நடைமுறைகளை மேற்கொள்ளப்படுகிறது.

மெகாஉணவுப் பூங்கா 16 குளிர்பதனக் கிடங்குகளுக்கு ஒப்பந்தம்

  • தமிழ்நாட்டில் ஒரு மெகா உணவுப் பூங்கா 16 குளிர்பதனக் கிடங்குகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உணவு துறை இணையமைச்சர் பிரஹலாத் சிங் படேல் தெரிவித்தார்.
  • அதில், 16 ஒருங்கிணைந்த குளிர்பதன கிடங்கு வசதி, 11 வேளாண் பதனத் தொகுப்பு, 32 வேளாண் உணவுப்பதன அலகுகள், 9 வேளாண் பொருட்களுக்கான உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்புகள், 2 காய்கறி விற்பனை சந்தைகள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் பெங்களூரில் “AgriUnifest” ஐத் தொடங்கி வைத்தார்.

  • பெங்களூரு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்துடன் (ICAR) இணைந்து ஏற்பாடு செய்திருந்த “AgriUnifest” என்ற கலாச்சார நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு.ஸ்ரீ நரேந்தர் சிங் தோமர் தோமர் தொடங்கி வைத்தார்.
  • 60 மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிகர பல்கலைக்கழகங்ககளில் இருந்து 2500க்கும் மேற்பட்ட திறமையான மாணவர்கள் பங்கேற்றனர்.இந்திய கலாச்சாரங்களை இணைப்பதன் மூலம் இந்திய விவசாயத்தை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் அகில இந்திய வேளாண் பல்கலைக்கழக இளைஞர் விழாவானது ICAR ஆல் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

 

நியமனங்கள்

உயர் நீதிமன்ற துணை சொலிசிட்டர் ஜெனரல் நியமனம்

  • வழக்கறிஞர் கே. கோவிந்தராஜன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக ஜனாதிபதி அவர்களால் நியமனம் செய்யப்படுகிறார். இவர் மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார்
  • கோவிந்தராஜன் கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர். வழக்கறிஞராக 28 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்.1999 முதல் சென்னை உயர்நீதிமன்றத்திலும் மற்றும் 2004 முதல் உயர்நீதிமன்றக் கிளைகளிலும் பணிபுரிந்து வந்தார்.

 

தொல்லியல் ஆய்வுகள்

400 ஆண்டுகள் பழமையான லிங்க முத்திரை கல் கண்டெடுப்பு

  • அசோகா பூங்கா உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாப்புரா தாலுகா பஸ்ரூர் கிராமத்தில் உள்ளது. இந்த பூங்காவை சீரமைக்கும் பணியின்போது, அங்கு பழங்கால கல் இருப்பது தெரியவந்தது.
  • அந்த கல் 400 ஆண்டுகள் பழமையான லிங்க முத்திரை கல் என்பது தெரியவந்தது.அந்த கல்லில் சூரியன், சந்திரன், சிவலிங்க முத்திரை, நந்தி உள்ளிட்ட பல வடிவங்கள் இருந்தன.

 

விளையாட்டு செய்திகள்

உலகின் பணக்கார கிரிக்கெட்டர்கள் பட்டியல்

  • உலகின் பணக்கார கிரிக்கெட் பிரபலங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. உலகிலேயே மிகவும் பணக்கார கிரிக்கெட் வாரியமாக பிசிசிஐ இருக்கிறது. இதில் விராட் கோலி, தோனி உள்ளிட்ட இந்திய கிரிக்கெட்டர்கள் பட்டியலில் முன்னணியில் இருப்பார்கள்.
  • இந்த முறை ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில் கிறிஸ்ட் முதலிடத்தில் இருக்கிறார். கில் கிறிஸ்ட் சுமார் 3120 கோடி சொத்துமதிப்புடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

முக்கிய தினம்

தேசிய தடுப்பூசி தினம்

  • தேசிய தடுப்பூசி தினம் ஆண்டுத்தோறும் மார்ச் 16ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வைன் ஏற்படுத்தவும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும் ,போலியோ நோயை ஒழிப்பதை நோக்கமாகவும் கொண்டு கொண்டாடப்படுகிறது.

Download PDF

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!