நடப்பு நிகழ்வுகள் – 03 மே 2023
தேசிய செய்திகள்
ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி புதிய விமான அதிகாரியாக கமாண்டிங்–இன்–சீஃப் (AOC-in-C) ஆக பதவி ஏற்ப்பு
- ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி குஜராத்தின் காந்திநகரில் தென்மேற்கு ஏர் கமாண்ட் (SWAC) – இன் புதிய விமான அதிகாரியாக கமாண்டிங்–இன்–சீஃப் (AOC-in-C) ஆக பதவியேற்றார்.
- அவர் இலகுரக போர் விமானம் – TEJAS இன் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 30 அன்று ஏர் மார்ஷல் விக்ரம் சிங் ஓய்வு பெற்றதை தொடர்ந்து நர்மதேஷ்வர் திவாரி இந்த பதவியை ஏற்றார்.
டிஆர்டிஓ மற்றும் இந்திய கடற்படையானது கோவாவில் “காற்றில் ஏவக்கூடிய கொள்கலன்” -150 இன் முதல் சோதனையை நடத்தி வெற்றி கண்டது
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் இந்திய கடற்படை ஆகியவை இணைந்து கோவா கடற்கரையில் IL-38ST விமானத்தில் இருந்து ‘காற்றில் ஏவக்கூடிய கொள்கலன்-150 (ஏடிசி) (Air Droppable Container) சோதனையை வெற்றிகரமாக நடத்தின.
- ADC-150 என்பது கடலோரப் பகுதியில் இருந்து 2,000 கிமீ தொலைவில் உள்ள கப்பல்களுக்கு முக்கியமான தேவையை பூர்த்தி செய்ய மற்றும் விரைவான பதிலை வழங்குவதற்கு இது உதவும் என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் RITES உடன் “ஸ்வச்சதாவு திட்டத்திற்கான” தொழில்நுட்ப ஆதரவை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- திடக்கழிவு மற்றும் பயன்படுத்தப்பட்ட நீர் மேலாண்மையை விரைவுபடுத்துவதில் கவனம் செலுத்தி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (MoHUA) – RITES லிமிடெட் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது.
- நகர்ப்புற சுகாதாரத்தில் ஒரு முன்னுதாரண மாற்றத்திற்கு இந்த ஒப்பந்தமானது வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. SBM 2.0 இன் கீழ், குப்பை இல்லாத நகரங்களை உருவாக்கும் ஒட்டுமொத்த நிலப்பட்டை, நிலையான திடக்கழிவு மேலாண்மை மீதான உந்துதலை இந்த ஒப்பந்தம் வலுப்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
NITI ஆயோக்கானது சமூகத் துறையில் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடைமுறைகள் பற்றிய தொகுப்பை வெளியிட்டுள்ளது.
- ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்துடன் இணைந்து சமூகத் துறையில் சிறந்த நடைமுறைகள் – ஒரு தொகுப்பு 2023″ என்ற தலைப்பில் NITI ஆயோக் அறிக்கை வெளியிட்டது.
- இதன் மூலம், மாநிலங்களின் புதுமையான முயற்சிகளைப் பாராட்டவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும், மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவைக் கற்றுக்கொள்ளவும் இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச செய்திகள்
ஆசியான் – இந்தியா கடல்சார் பயிற்சியானது (AIME-2023) தொடக்கம்.
- ஆசியான் – இந்தியா கடல்சார் பயிற்சியானது(AIME-2023) 2023 மே 02 முதல் 08 வரை நடைப்பெற உள்ளது. பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய கடற்படைக் கப்பல்களான(INS) சாத்புரா மற்றும் INS தில்லி, ஃபிளாக் ஆபிஸர் கமாண்டிங் கிழக்கு கடற்படையுடன் மே 1, 2023 அன்று சிங்கப்பூர் வந்தடைந்தது.
- இந்தியாவின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட “ஏவுகணை அழிப்புக் கப்பலான ஐஎன்எஸ் டெல்லி” மற்றும் உள்நாட்டிலேயே கட்டப்பட்ட வழிகாட்டுதலுடன் ஏவுகணை அளிக்கும் திறன் கொண்ட போர்க்கப்பல் “ஐஎன்எஸ் சத்புரா“, விசாகப்பட்டினத்தில் உள்ள இந்தியக் கடற்படையின் கிழக்குக் கடற்படையின் ஒரு பகுதியாக உள்ள இந்த படையானது சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது இதில் சிறப்பாகும்.
மாநில செய்திகள்
OBC கணக்கெடுப்பைத் தொடங்கிய இரண்டாவது மாநிலமாக ஒடிசா மாறியுள்ளது.
- OBC கணக்கெடுப்பை கடந்த திங்ககிழமை அன்று ஒடிஷா மாநிலமானது நடத்தியது.இந்த கணக்கெடுப்பானது மே 01 முதல் மே 27 வரை நடைபெறும் என ஒடிஷா மாநிலம் அறிவித்துள்ளது.
- சமூக பொருளாதார முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது என ஒடிஷா மாநிலம் அறிவித்துள்ளது. கடந்த மாதத்தில்(ஏப்ரல் 2023) பீகார் ஆனது இந்த கணக்கெடுப்பை நடத்திய முதல் மாநிலம் என்ற அந்தஸ்த்தை பெறுகிறது.
பொருளாதார செய்திகள்
ஏப்ரல் 2023க்கான ஜிஎஸ்டி வருவாயானது, வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.87 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
- ஏப்ரல் 2023 இல் மொத்த ஜிஎஸ்டி வசூலானது இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து. ஏப்ரல் 2023 மாத வருவாயானது கடந்த ஆண்டு ஏப்ரல்2022 இதே மாதத்தின் ஜிஎஸ்டி வருவாயை விட 12% அதிகமாக உள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
- முதல் முறையாக மொத்த ஜிஎஸ்டி வசூல் ₹1.75 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது என்பது இதில் குறிப்பிடத்தக்கதாகும். மார்ச் 2023 இல் உருவாக்கப்பட்ட இ–வே பில்களின் மொத்த எண்ணிக்கையானது 9.0 கோடி ஆகும், இது பிப்ரவரி 2023 இல் உருவாக்கப்பட்ட 8.1 கோடி இ–வே பில்களை விட 11% அதிகம் என தனது அறிக்கையில் அரசாங்கம் அறிவித்துள்ளது.
நியமனங்கள்
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி டி.எஸ்.சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.
- மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் உள்ள நீதித்துறையானது இந்த நியமனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு முன் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, மார்ச் 30-ம் தேதி பதவி விலகியதால் உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைப்பானது இவரை பரிந்துரைத்தது அதன்படி இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- நீதிபதி சிவஞானம் முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு செய்திகள்
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் துப்பாக்கி சுடும் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு தங்கம்.
- எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் துப்பாக்கி சுடும் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கான சார்பில் மைராஜ் அகமது கான் மற்றும் கனேமத் செகோன் ஆகியோர் தங்கம் வென்றனர்.
- போட்டியின் நான்காம் நாளில் நடந்த “ஸ்கீட் கலப்பு அணி” நிகழ்வின் இறுதி ஆட்டத்தில் இந்தியவின் சார்பில் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி 6-0 என்ற கணக்கில் லூயிஸ் ரால் கல்லார்டோ மற்றும் கேப்ரியலா ரோட்ரிக்ஸ் ஜோடியை தோற்கடித்து வெற்றி கண்டது
எம்விஏ தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம்.
- ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் சூலா விஸ்டா நகரில் நடைபெற்ற MVA தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
- அமெரிக்காவின் போட்டியில் முரளி ஸ்ரீசங்கரின் சிறந்த வேகமானது 8.29 மீ ஆகும் இது அவரின் தனிப்பட்ட சிறந்த 8.36 மீட்டருக்கு 0.07 மீ. மட்டுமே குறைவாக இருந்தது.இது இந்தியாவில் ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் தேசிய சாதனையாக இருந்தது.
முக்கிய தினம்
உலக ஆஸ்துமா தினம் 2023
- . உலக ஆஸ்துமா தினமானது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் செவ்வாய் கிழமை(02 மே 2023) கடைபிடிக்கப்படுகிறது.குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவரையும் பாதிக்கும் ஒரு தொற்றாத நோயாக உள்ள ஆஸ்துமா நோயினை (NCD) பற்றிய விழிப்புணர்வை உலகம் முழுவதற்கும் ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- “அனைவருக்கும் ஆஸ்துமா பராமரிப்பு” என்பது இந்த ஆண்டிற்க்கான கருப்பொருளாகும்.