தமிழகத்தில் 17 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள்? விரைவில் அறிவிப்பு!!
தமிழகத்தில் ஜூன் 7 ஆம் தேதியுடன் தளர்வில்லா பொது முடக்கம் முடியவுள்ள நிலையில், கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் ஊரடங்கை மேலும் நீட்டிக்கவும் மற்ற பகுதிகளில் தளர்வுகள் அளிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்
கொரோனா பரவல் தாக்கமானது தமிழகத்தில் குறைந்து வரும் நிலையில், மாவட்டங்கள் தோறும் சில தளர்வுகளை அளிக்க அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளாக மே மாதம் 10 ஆம் தேதியிலிருந்து நடைமுறையில் உள்ள பொது முடக்கமானது, ஜூன் 7 வரை நீட்டிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் தளர்வுகளை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
மேலும் அம்மாவட்டங்களில் முழுமையான தளர்வுகளை அறிவிக்காமல், படிப்படியாக தளர்வுகள் கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. அதன் படி எந்தெந்த மாவட்டங்களில் எத்தகைய செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படலாம் என தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, திருப்பத்தூர், தேனி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, ராமநாதபுரம், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில் கொரோனா 3வது அலை துவக்கம்? சிறுவன் உயிரிழப்பால் அச்சம்!
இந்த மாவட்டங்களில் தினசரி 600க்கும் குறைவாக பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒருவேளை இந்த மாவட்டங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டால், அத்தியாவசிய கடைகளுக்கு அனுமதி கொடுக்கப்படும். 50 சதவீத பணியாளர்களுடன் அலுவலகங்கள் திறக்கப்படலாம். தவிர பொது போக்குவரத்துக்கு அனுமதி கொடுக்கப்படாது என தெரிகிறது. இது தவிர மதுரை, கன்னியாகுமரி, திருவாரூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், சேலம், நீலகிரி, தஞ்சாவூர், நாமக்கல், நாகப்பட்டினம், கடலூர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் 100 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டால், அதில் 40 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. அதனால் இந்த பகுதிகளில் தளர்வுகள் அளிக்கப்படாது என கூறப்படுகிறது.