கோவையில் கொரோனா 3வது அலை துவக்கம்? சிறுவன் உயிரிழப்பால் அச்சம்!
தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டத்தில் 13 வயது சிறுவன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதனால் மக்கள் கொரோனாவின் மூன்றாவது அலை தொடங்கி விட்டது என அச்சத்தில் மூழ்கி உள்ளனர்.
சிறுவன் உயிரிழப்பு:
தமிழகத்தில் கொரோனா என்ற கொடிய வைரஸால் கடந்த வருடம் உயிரிழப்புகள் அதிகம் இல்லை. தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது. இது உருமாறிய கொரோனா வைரஸ் என்பதால் அதிக வீரியத்துடன் உள்ளது எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். தமிழகம் முழுவதும் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகளும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதை தடுக்க அரசு தடுப்பு பணிகளை விரைந்து செய்து வருகிறது.
TN Job “FB
Group” Join Now
ஆனாலும் வைரஸ் பரவல் கட்டுக்குள் அடங்காமல் பரவுகிறது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த தாக்குதல்களாக பூஞ்சை நோய்களும் பரவி வருகிறது. கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு இது பரவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவின் 3ம் அலை வரும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா இரண்டாம் அலை குழந்தைகளுக்கும் வெகுவாக பரவுகிறது. கோவையில் 13 வயது சிறுவன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழகத்தில் முடிவுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? முதல்வர் ஸ்டாலின் சூசகம்!!
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் இன்று உயிரிழந்தார். மூன்றாவது அலை பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் என்று ஏற்கனவே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் கோவையில் சிறுவனின் இறப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து மூன்றாவது அலை தொடங்கி விட்டதோ என்ற அச்சம் மாவட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இறந்த சிறுவனின் மருத்துவ அறிக்கை ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் மூன்றாவது அலை பரவி வருவதாக வெளிவந்திருக்கும் செய்தியில் உண்மையில்லை என்றும் மாவட்ட சுகாதார நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.