தமிழகத்தில் பாதிப்புகள் அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஜூன் 21 வரை நீட்டிப்பு – அமைச்சர் அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக காணப்படும் 11 மாவட்டங்களில் திருக்கோயில்கள் மூலம் உணவு பொட்டலங்கள் வருகிற ஜூன் 21ம் தேதி வரை வழங்கப்படும் என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம்:
தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக சுமார் ஒரு மாத காலமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் கொரோனா நோயாளிகள், அவர்களது குடும்பங்கள், ஏழை எளிய மக்கள் தினசரி அன்றாட உணவிற்கு பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இவர்களை பாதுகாக்கும் பொருட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உணவு தேவைப்படும் நபர்களுக்கு கடந்த 12ஆம் தேதி அன்று திருக்கோயில்கள் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்படும் என்று அறிக்கை விடுத்தார்.
NCC மாணவர்களுக்கு CET நுழைவுத்தேர்வில் சலுகை – IMU அறிவிப்பு!
மேலும் இந்த திட்டம் ஜூன் 14ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 14ம் தேதி முதல் பாதிப்புகள் குறைவாக காணப்படும் 27 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்தது. ஆனால் பாதிப்பு அதிகமாக காணப்படும் கோவை, திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் குறைந்த அளவிலான தளர்வுகள் அமலில் இருந்து வருகிறது. இதனால் அங்கு ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட உணவுக்கு மீண்டும் போராடி வருகின்றனர்.
TN Job “FB
Group” Join Now
தற்போது அவர்களை பாதுகாக்கும் வகையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் ஓர் முக்கிய உத்தரவிட்டுள்ளார். அதன்படி வருகிற ஜூன் மாதம் 21ம் தேதி வரை பாதிப்புகள் அதிகமாக காணப்படும் 11 மாவட்டங்களில் திருக்கோயில்கள் மூலம் உணவு தேவைப்படும் நோயாளிகள் உள்ளிட்ட நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் இதற்கான போதிய நிதி இல்லாத திருக்கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பேணப்பட்டு வரும் அன்னதான மைய நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.