NCC மாணவர்களுக்கு CET நுழைவுத்தேர்வில் சலுகை – IMU அறிவிப்பு!

0
NCC மாணவர்களுக்கு CET நுழைவுத்தேர்வில் சலுகை - IMU அறிவிப்பு!
NCC மாணவர்களுக்கு CET நுழைவுத்தேர்வில் சலுகை - IMU அறிவிப்பு!
NCC மாணவர்களுக்கு CET நுழைவுத்தேர்வில் சலுகை – IMU அறிவிப்பு!

சென்னையை மையமாக கொண்டு இயங்கும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் CET நுழைவுத்தேர்வில் NCC மற்றும் கடற்படை பிரிவு மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்குவதாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU) அறிவித்துள்ளது.

தேர்வில் சலுகை

மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் NEET, JEE போன்ற நுழைவுத்தேர்வுகளை போல கடற்படை போன்ற படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் CET என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையில், NCC பயின்றுள்ள மாணவர்களுக்கு, அவர்களின் நுழைவுத்தேர்வின் போது கூடுதல் சலுகைகளை அளிக்க இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU) முடிவெடுத்துள்ளது.

தமிழக மின் நுகர்வோர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்றே கடைசி நாள்!

இது குறித்து பல்கலைக்கழகம் அளித்துள்ள அறிவிப்பின் படி, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் இளநிலை மற்றும் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான CET நுழைவுத்தேர்வில், NCC பயின்று A, B, C உள்ளிட்ட மதிப்பீடுகளை பெற்றுள்ள மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவது குறித்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU) சார்பில், கடந்த மாதம் நடைபெற்ற 59 ஆவது செயற்குழு கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அதற்கு ஒப்புதல் கிடைத்ததன் அடிப்படையில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கையில், இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் கீழ்கண்டவாறு வழங்கப்படவுள்ளது. அதன் படி, NCC ல் C மதிப்பீடை பெற்ற மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வில் 5% மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது. அதே போல B மதிப்பீடு மாணவர்களுக்கு 3% மும், A மதிப்பீடுகளை பெறும் மாணவர்களுக்கு 2% மதிப்பெண்களும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!