CTET தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

0
CTET தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!
CTET தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!
CTET தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

CTET டிசம்பர் 2022-23 தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தற்போது அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் நியமிக்கப்பட்ட தேர்வு மையங்களில் சுமார் 32.5 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதி உள்ளனர்.

CTET தேர்வு முடிவுகள்:

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஆனது CTET டிசம்பர் 2022-23 தேர்வை 28 டிசம்பர் 2022 முதல் 7 பிப்ரவரி 2023 வரை நடத்தியது. இந்த தேர்வானது இந்தியா முழுவதும் உள்ள 74 நகரங்களில் 243 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 32.5 லட்சம் விண்ணப்பதாரர்கள் எழுதி உள்ளனர்.

CTET டிசம்பர் 2022-23 தேர்வின் தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஆனது இன்று (03.03.2023) அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ctet.nic.in/-ல் இன்று வெளியிட்டுள்ளது. இந்த தகுதி தேர்விற்கான முடிவை தெரிந்து கொள்ள விரும்பும் நபர்கள் தங்களது பதிவு எண்ணை பயன்படுத்தி பின்வரும் முறைகளின் மூலம் மிக எளிமையாக தங்களது மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.

CTET Result 2023: சரி பார்ப்பதற்கான வழிமுறைகள்:
  • ctet.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லவும்.
  • முகப்புப் பக்கத்தில், ‘CTET DEC22 Result’ இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • பிறகு, Enter Your Roll Number பகுதியில் தங்களது பதிவு எண்ணை சரியாக உள்ளிட்டு “Submit” பட்டனை கிளிக் செய்யவும்.
பின் மதிப்பெண் பட்டியல் திரையில் தோன்றும்.    

எதிர்கால பயன்பாட்டிற்காக CTET மதிப்பெண் அட்டையை பதிவிறக்கம் செய்து அச்சிடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!