டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.77000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

0
டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.77000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.77000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.77000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (CSL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 261 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அறிவிப்பு:

படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு தொடர்ந்து அரசு வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (CSL) நிறுவனத்தில் காலியாக உள்ள 261 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சீனியர் ஷிப் டிராஃப்ட்ஸ்மேன், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அண்ணா பல்கலையில் மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய அறிவிப்பு – ஜூன் 22 முதல் விண்ணப்ப பதிவு!

இந்த பணியிடங்களுக்கான தகுதிகள், கடைசி தேதி ஆகியவை குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் CSLன் அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:
 • ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் – 4.
 • சீனியர் ஷிப் டிராஃப்ட்ஸ்மேன் – 6.
 • ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (ABAP) – 1.
 • ஆய்வக உதவியாளர் (மெக்கானிக்கல்) – 1.
 • ஆய்வக உதவியாளர் (கெமிக்கல்) – 1.
 • ஸ்டோர் கீப்பர் – 4.
 • ஜூனியர் கமர்ஷியல் அசிஸ்டென்ட் – 2.
 • உதவியாளர் – 7.
 • வெல்டர் கம் ஃபிட்டர் – 206.
 • ஃபிட்டர்- 16.
 • ஷிப்ரைட் வூட் – 3
கல்வித் தகுதி:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பத்தாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் டிகிரி அல்லது டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை பார்க்கலாம்.

வயது வரம்பு:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 06 ஜூன் 2022 இன் படி 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.400 செலுத்த வேண்டும். SC/ST பிரிவினர் மற்றும் பெஞ்ச்மார்க் குறைபாடுகள் உள்ள விண்ணப்பதாரர்கள் (PwBD) விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

Exams Daily Mobile App Download
சம்பளம்:

இந்த பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் சம்பளமாக ரூ. 22500 முதல் ரூ. 77000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:
 • முதலில் cochinsipyard.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறக்க வேண்டும்.
 • இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில், தொழில் பிரிவுக்குச் சென்று, பின்னர் தொடர்புடைய விளம்பரத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
 • இப்போது உங்களைப் பதிவு செய்து, “Cochin Shipyard Recruitment 2022” விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.

 • அனைத்து விவரங்களையும் நிரப்பிய பின் ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும். அதன் பின் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
 • அதன் பின் Cochin Shipyard Recruitment 2022 படிவத்தை பிழை இல்லாமல் நிரப்பி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here