சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி பிளே ஆஃப்களுக்கு தகுதி பெற இன்னும் ஒரு வாய்ப்பு? நிகழுமா அதிசயம்!

0
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி பிளே ஆஃப்களுக்கு தகுதி பெற இன்னும் ஒரு வாய்ப்பு? நிகழுமா அதிசயம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி பிளே ஆஃப்களுக்கு தகுதி பெற இன்னும் ஒரு வாய்ப்பு? நிகழுமா அதிசயம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி பிளே ஆஃப்களுக்கு தகுதி பெற இன்னும் ஒரு வாய்ப்பு? நிகழுமா அதிசயம்!

ஐபிஎல் 2022 போட்டிகளின் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு இன்னும் மிகக் குறைந்த, ஒரேயொரு வாய்ப்பு மட்டுமே உள்ளது. அந்த அதிசயம் நடந்தால் CSK அணியை இறுதி போட்டியில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக்கின் சாம்பியன் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகள் நடப்பு சீசனில் இருந்து வெளியேறி இருக்கிறது. அந்த வகையில் கேப்டன் ரோஹித் ஷர்மா தலைமையிலான MI அணி இந்த சீசனில் 8 தோல்வி மற்றும் ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 10வது அதாவது கடைசி இடத்தை வகிக்கிறது. மாறாக நடப்பு சாம்பியனான CSK அணி 6 தோல்வி மற்றும் 3 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது. இப்போது, மும்பை இந்தியன்ஸ் அணி லீக் சுற்றில் இருந்து முழுமையாக வெளியேறி இருக்கிறது.

பெண்களுக்கான ரூ.25 லட்சம் வரை வழங்கும் கடனுதவி திட்டம்? உண்மையா? முழு விபரங்கள் இதோ!

மற்றபடி, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும் லீக் சுற்றில் இருந்து வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இந்த சீஸனின் ஆரம்பத்தில் ஜடேஜா தலைமையில் செயல்பட்ட CSK அணி 2 ஆட்டங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், SRHக்கு எதிராக ஆட்டத்தில் தோனி தலைமை பொறுப்பை ஏற்றதால் CSK அணி தனது 3வது வெற்றியை பதிவு செய்தது. அந்த ஆட்டத்தின் போது CSK அணி பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. இருந்தாலும் அவர்கள் அடுத்து வரும் அனைத்து ஆட்டங்களில் வெற்றியடைய வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருந்தனர்.

ஆனால், நேற்று (மே.4) நடைபெற்ற ஆட்டத்தில் CSK அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று அந்த கனவை உடைத்தது. அதனால், தற்போதைய சாம்பியன்கள் லீக் சுற்றில் இருந்து கிட்டத்தட்ட நாக் அவுட் ஆகியுள்ளனர். மறுபக்கத்தில் RCB அணி, 11 போட்டிகளில் 6ல் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்குத் திரும்பியது. மேலும், பிளேஆஃப் வாய்ப்பிற்கான வலுவான போட்டியை உருவாக்கி இருக்கிறது. இப்போது, பிளேஆஃப் பந்தயத்தில் CSK இன்னும் நிலைப்பதற்கான வாய்ப்பு ஒன்று இருக்கிறது.

அதாவது, மற்ற அணிகளின் முடிவுகள் CSK அணிக்கு ஒரு வாய்ப்பை வழங்கலாம். ஆனால் அது நடப்பதற்கு ஒரு அதிசயம் தேவைப்படும். தவிர CSK, 10 போட்டிகளில் 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது. மேலும் மீதமுள்ள 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் அதிகபட்சமாக 14 புள்ளிகளை எட்ட முடியும். மறுபக்கத்தில், CSK இதுவரை மோசமான சாதனையை கொண்டுள்ளது. இருந்தாலும் சில கணித வரிசைமாற்றங்கள் மற்றும் சேர்க்கைகள் அணியை பிளேஆஃப்களுக்கு கொண்டு செல்ல முடியும். இப்போது, குஜராத் மற்றும் லக்னோ ஆகிய இரு அணிகள் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளன.

Exams Daily Mobile App Download

மேலும், RR மற்றும் RCB தலா 12 புள்ளிகளுடன் இருக்கிறது. அதைத் தொடர்ந்து SRH மற்றும் PBKS தலா 10 புள்ளிகளுடன் இருக்கிறது. இந்த அணிகள் விளையாடுவதற்கு குறைந்தது மூன்று ஆட்டங்களாவது மீதமுள்ளது. இதற்கிடையில், சிஎஸ்கே மோசமான நிகர ரன் ரேட்டைக் கொண்டுள்ளது. இதனால் அவர்கள் அடுத்த 4 போட்டிகளிலும் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இதையும் தாண்டி நான்காவது இடத்தை அடைய மற்ற எல்லா அணிகளின் முடிவுகளும் ஒத்துழைக்க வேண்டும். இல்லையெனில், இந்த சீசனில் நாக் அவுட் செய்யப்பட்ட மும்பை அணியுடன் சென்னையும் இணைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here