தமிழகத்தில் 10, 11 ஆம் வகுப்பு மாணவர் பட்டியல் திருத்தம் – தலைமை ஆசிரியர்களுக்கு அறிவிப்பு!!

1
தமிழகத்தில் 10, 11 ஆம் வகுப்பு மாணவர் பட்டியல் திருத்தம் - தலைமை ஆசிரியர்களுக்கு அறிவிப்பு!!
தமிழகத்தில் 10, 11 ஆம் வகுப்பு மாணவர் பட்டியல் திருத்தம் - தலைமை ஆசிரியர்களுக்கு அறிவிப்பு!!
தமிழகத்தில் 10, 11 ஆம் வகுப்பு மாணவர் பட்டியல் திருத்தம் – தலைமை ஆசிரியர்களுக்கு அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 2020-21 ஆம் ஆண்டு 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலை அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்டுள்ளது. பள்ளிகள் அதனை பதிவிறக்கம் செய்து திருத்தங்கள் செய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பட்டியல்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பேரிடர் காலத்தில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவது சிரமம் என்பதால் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வு நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் கார்டு பெறும் வழிமுறைகள்!

இந்நிலையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 2020-21 ஆம் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் 10 ஆம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பயின்ற மாணவ மாணவிகளின் பெயர் பட்டியல் அரசு தேர்வுகள் இயக்க இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

https://apply1.tndge.org/login என்ற இணையத்தளத்தில் 14.06.2021 முதல் 17.06.2021 வரை அனைத்து பள்ளிகளும் அந்த பட்டியலை தயார் செய்து அதில் திருத்தங்கள் இருந்தால் பள்ளி அளவில் வழங்கப்பட்டுள்ள கடவுச் சொல்லை பயன்படுத்தி திருத்தங்களை செய்யலாம் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் மாணவர் பட்டியலில் திருத்தங்கள் செய்ய இதுதான் கடைசி தேதி என்பதை கருத்தில் கொண்டு செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!