5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் கார்டு பெறும் வழிமுறைகள்!

1
5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் கார்டு பெறும் வழிமுறைகள்!
5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் கார்டு பெறும் வழிமுறைகள்!
5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் கார்டு பெறும் வழிமுறைகள்!

5 வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஆதார் கார்டு பெற எப்படி ஆன்லைன் வாயிலாக பதிவு செய்து பெற வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

ஆதார் கார்டு:

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் எண் என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அனைத்து விவகாரங்களுக்கும் ஆதார் எண் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது பொதுவான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதே போல் பெரியவர்களுக்கு விண்ணப்பிக்கும் முறையில் தான் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கை ரேகை பதிவு செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் DA உயர்வு – விரைவில் அறிவிப்பு!

குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் போது குழந்தையின் பெற்றோர்கள் ஆதார் எண் வைத்திருத்தல் அவசியம். முதலில், ஆதார் கார்டு பெற அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். பின், குழந்தையின் புகைப்படம், சான்றிதழ்கள் ஆகியவற்றை எடுத்து கொண்டு ஆதார் மையத்திற்கு சென்று ஆதார் கார்டு பெற்றுக் கொள்ளலாம். 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆதார் “பால் ஆதார்” என்று அழைக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில், ஆதார் எண் பெற அதிகாரப்பூர்வமான uidai.gov.in என்ற இணையத்தளத்தில் செல்ல வேண்டும்.
  • பின், முகப்பு பக்கத்தில் உள்ள My Aadhaar என்ற பகுதிக்கு செல்ல வேண்டும். பின் அதில் Get Aadhaar என்பதனை கிளிக் செய்ய வேண்டும். அடுத்தகட்டமாக, Book an Appointment என்பதனை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின், அதில் மாவட்டம் மற்றும் வீட்டு முகவரியினை வழங்க வேண்டும். அதன் பிறகு உங்களது மொபைல் நம்பர் மற்றும் கேப்சா குறியீடு ஆகியவற்றை பதிய வேண்டும்.

  • இதற்கு பிறகு பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும். அதனை பதிவு செய்ய வேண்டும்.
  • பின்பு, பெற்றோரின் ஆதார் மற்றும் தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
  • பின்பு, ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டிய நேரம் மற்றும் தேதி கேட்கப்படும். அதில் உங்களுக்கு வசதியான தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.

இதற்கு பிறகு பதிவு செய்யப்பட்ட தேதியில் குழந்தையின் புகைப்படம் மற்றும் இதர சான்றிதழ்களை எடுத்து கொண்டு ஆதார் கார்டு மையத்திற்கு சென்று ஆதார் எண் பெற்றுக்கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!