இதுவரை உலகம் முழுவதும் 6,535,980 பேரை காவு வாங்கிய கொரோனா – வெளியான அதிர்ச்சி தகவல்!

0
இதுவரை உலகம் முழுவதும் 6,535,980 பேரை காவு வாங்கிய கொரோனா - வெளியான அதிர்ச்சி தகவல்!
இதுவரை உலகம் முழுவதும் 6,535,980 பேரை காவு வாங்கிய கொரோனா - வெளியான அதிர்ச்சி தகவல்!
இதுவரை உலகம் முழுவதும் 6,535,980 பேரை காவு வாங்கிய கொரோனா – வெளியான அதிர்ச்சி தகவல்!

உலக நாடுகள் முழுவதும் கொரோனா பெருந்தொற்று மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உலக நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விவரம், பாதிக்கப்பட்டவர்களின் விவரம் குறித்து விரிவாக பார்ப்போம்.

கொரோனா பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்பு உலக நாடுகள் முழுவதிலும் தீவிரமாக பரவி பெருந்தொற்றாக மாறியது. இதனை தொடர்ந்து கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த வகையில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க பல்வேறு வகையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அத்துடன் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி அனைத்து மக்களும் தடுப்பூசி மருந்துகளை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டார்கள். ஆனாலும் கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து முன்பை விட பன்மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டதாக மாறியது. அந்த வகையில் டெல்டா, ஓமைக்ரான், பிஏ4 மற்றும் பிஏ5 உள்ளிட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுவரை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 228 நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இதுவரை உலக நாடுகள் முழுவதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 618,970,064 ஆக உயர்ந்துள்ளது.

பிரபல வீடியோ காலிங் மற்றும் ஓடிடி செயலிகளுக்கு ஆபத்து – மத்திய அரசின் புதிய நிபந்தனை!

Exams Daily Mobile App Download

மேலும் இதே போன்று கொரோனா வைரஸால் பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,535,980 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 598,918,451 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 40,221 பேர் கொரோனா தொற்றிக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு எதிரான ஒரே ஆயுதம் தடுப்பூசி என்பதால் இதனை அனைவரும் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்துடன் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை பின்பற்றுவது, கை கழுவுவது உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!