பிரபல வீடியோ காலிங் மற்றும் ஓடிடி செயலிகளுக்கு ஆபத்து – மத்திய அரசின் புதிய நிபந்தனை!

0
பிரபல வீடியோ காலிங் மற்றும் ஓடிடி செயலிகளுக்கு ஆபத்து - மத்திய அரசின் புதிய நிபந்தனை!
பிரபல வீடியோ காலிங் மற்றும் ஓடிடி செயலிகளுக்கு ஆபத்து - மத்திய அரசின் புதிய நிபந்தனை!
பிரபல வீடியோ காலிங் மற்றும் ஓடிடி செயலிகளுக்கு ஆபத்து – மத்திய அரசின் புதிய நிபந்தனை!

வாட்ஸ் அப், ஸ்கைப், ஸூம் மற்றும் கூகுள் டியோ போன்ற அனைத்து வகையான செயலிகளுக்கும் மத்திய அரசு புதிய நிபந்தனை ஒன்றை விதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிபந்தனை:

தற்போதைய நவீன உலகம் இணையத்தின் மூலம் தான் சுழன்று வருகிறது. அந்த அளவிற்கு இணையத்தின் பயன்பாடு அதிகரித்து விட்டது. இவை அதிக நன்மையான விஷயங்களுக்கு பயன்படுவது மட்டுமல்லாமல், முறைகேடான பலவற்றிற்கும் வழிகாட்டியாக உள்ளது. இதனால் நாட்டில் செயலில் உள்ள அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களையும் அரசு கண்காணித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு புதிய தொலைத்தொடர்பு வரைவு மசோதாவை வெளியிட்டுள்ளது.

மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணோவ் அவர்கள் இந்த சட்ட மசோதாவை அறிவித்துள்ளார். அதன்படி, தொலைத்தொடர்பு துறைக்கான அலைக்கற்றை ஏலம் முறையில், மத்திய அரசு நிர்வாக முறையில் ஏலம் இல்லாமல் அலைக்கற்றை விற்பனை ஒதுக்கலாம் என்றும், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரங்களில் சில மாற்றங்களையும் அதில் தெரிவித்துள்ளார். மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் ஓடிடி செயலிகளையும் தொலைத் தொடர்பு சேவையின் கீழ் மாற்றப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன?

Exams Daily Mobile App Download

தொலைத்தொடர்பு சேவையினை மக்களுக்கு அளிக்கும் நிறுவனங்களின் உரிமம் கட்டணம் மற்றும் நிலுவை தொகை போன்றவற்றை ரத்து செய்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த நிறுவனங்கள் தொலைத்தொடர்பு இணைப்புகளை அளிக்க உரிமம் பெற வேண்டியது கட்டாயமாக்கப்படும் என்றும், வாட்ஸ் அப், ஸ்கைப், ஸூம், கூகுள் டியோ போன்ற செயலிகள் அனைத்தும் அரசின் அதற்குரிய உரிமம் பெற்ற பின்பு தான் இந்தியாவில் இனி செயல்பட முடியும் போன்ற முக்கிய நிபந்தனையும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here