தமிழகத்தில் 9 சதவீத பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி – ஷாக் ரிப்போர்ட்!

0
தமிழகத்தில் 9 சதவீத பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி - ஷாக் ரிப்போர்ட்!
தமிழகத்தில் 9 சதவீத பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி - ஷாக் ரிப்போர்ட்!
தமிழகத்தில் 9 சதவீத பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி – ஷாக் ரிப்போர்ட்!

தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், இதுவரை 9 சதவிகிதம் பேருக்கு மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி:

நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 16 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை தடுக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி 24.6 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

உங்கள் வங்கிக்கணக்கின் மொபைல் நம்பரை மாற்றுவதற்கான எளிய வழிமுறைகள்!

அதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 9 சதவீதம் பேருக்கு மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மிகச்சிறந்த மருத்துவக் கட்டமைப்பு கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ள நிலையில் இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தமிழகத்தில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 4.57 லட்சம் பேருக்கும், மார்ச்சில் 2 லட்சம், மே மாதத்தில் 30 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணமே குறைவான எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தியதற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 22.5 சதவீதம் பேருக்கும், குஜராத்தில் 20.5 சதவீதம் பேருக்கும், தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது தடுப்பூசி இருப்பு இல்லாத காரணத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here