உங்கள் வங்கிக்கணக்கின் மொபைல் நம்பரை மாற்றுவதற்கான எளிய வழிமுறைகள்!

0
உங்கள் வங்கிக்கணக்கின் மொபைல் நம்பரை மாற்றுவதற்கான எளிய வழிமுறைகள்!
உங்கள் வங்கிக்கணக்கின் மொபைல் நம்பரை மாற்றுவதற்கான எளிய வழிமுறைகள்!
உங்கள் வங்கிக்கணக்கின் மொபைல் நம்பரை மாற்றுவதற்கான எளிய வழிமுறைகள்!

வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் தங்களது கணக்கில் உள்ள மொபைல் நம்பரை எவ்வாறு மாற்றுவது என்பதற்கான எளிய வழிமுறைகள் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு பயனர்கள் வங்கிகளுக்கு செல்ல அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிக்கணக்கு:

வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் அனைத்து பயனர்களும் தற்போது சில விஷயங்களை மாற்றுவதற்கு சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் அதில் ஒன்று தான் தனது வங்கிக்கணக்கில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை மாற்றுவது. தற்போது வரை இதனை பயனர்கள் மாற்ற விரும்பினால் தங்களது வங்கிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டும். தற்போது தங்களது வங்கிகளுக்கு பயனர்கள் நேரடியாக செல்லாமல் மொபைல் நம்பரை மாற்றுவதற்கான வழிமுறைகள் வெளியாகியுள்ளது.

வங்கி கடன் தவணை (EMI) செலுத்த கால அவகாசம் – அரசுக்கு வேண்டுகோள்!!

பயனர்கள் கணக்கில் முதலில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண் மற்றும் டெபிட் கார்டு இந்த சேவைக்கு அவசியமாக தேவைப்படும். பயனர்கள் மொத்தம் இரண்டு வழிகளில் இதனை மாற்றி கொள்ளலாம். ஒன்று ஆன்லைன் மூலம் மாற்ற இயலும் இல்லையெனில் ஏடிஎம் இயந்திரம் மூலம் இதனை மாற்ற இயலும். ஆன்லைன் மூலம் மாற்ற வேண்டும் எனில் பயனர்கள் தங்களது வங்கிக்கணக்கின் நெட் பேங்கிங் வசதியை முதலில் தொடங்க வேண்டும்.

சான்றாக பயனர்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருந்தால் நெட் பேங்கிங் வெப்சைட் www.onlinesbi.com என்பதில் உள் நுழைந்து, Personal Data என்பதில் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து ஓபன் செய்ய வேண்டும். அதில் பயனர்களின் மொபைல் நம்பர் மற்றும் இ-மெயில் ஐடி இருக்கும். அதனை மாற்றலாம். அல்லது பயனர்கள் தங்களது ஏடிஎம் மூலமாக மாற்ற நினைத்தால் ஏடிஎம் மிஷினில் உங்கள் PIN நம்பரை பதிவிட்டு உள்ளே நுழைய வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

அதன்பிறகு மொபைல் நம்பரை மாற்றுவதற்கான விருப்பத்தை தேர்ந்தெடுத்து ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு OTP வரும். அதை பயனர்கள் ஏடிஎம்மில் உள்ளிட வேண்டும். அதன் பிறகு பயனர்களிடம் புதிய மொபைல் எண் கேட்கும். புதிய மொபைல் நம்பரை பதிவிட்டு உறுதி செய்தால் நம்பர் மாறிவிடும். இந்த வழிமுறைகள் மூலம் பயனர்கள் தங்களது வங்கிக்கணக்கு மொபைல் நம்பரை எளிதாக மாற்ற இயலும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!