EPFO பயனர்கள் கவனத்திற்கு – கொரோனா நிவாரணம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு? முழு விவரம் இதோ!

0
EPFO பயனர்கள் கவனத்திற்கு - கொரோனா நிவாரணம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு? முழு விவரம் இதோ!
EPFO பயனர்கள் கவனத்திற்கு - கொரோனா நிவாரணம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு? முழு விவரம் இதோ!
EPFO பயனர்கள் கவனத்திற்கு – கொரோனா நிவாரணம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு? முழு விவரம் இதோ!

தற்போது பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) நடத்தும் நிர்வாகக் குழுவின் கூட்டத்தில் கொரோனா நிவாரணத் திட்டத்தை நீட்டிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கொரோனா நிவாரணம்

நாடு முழுவதும் தற்போது நிலவி வரும் கொரோனா நோய்த்தொற்று சூழலுக்கு மத்தியில், ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட தகுதி நிபந்தனைகளுடன் கூடிய ESI கொரோனா நிவாரணத் திட்டம் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்படலாம் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இந்த முடிவானது குருகிராமில் நடைபெற உள்ள பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தின் நிர்வாகக் குழுவின் (ESIC) கூட்டத்தில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்போது இத்திட்டத்தின் கீழ் கொரோனாவால் இறந்த காப்பீடு செய்யப்பட்ட நபரின் சராசரி தினசரி ஊதியத்தில் 90 சதவீதம் தகுதியுள்ள நபர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது

மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – அகவிலைப்படி (DA) அரியர் தொகை பற்றிய முக்கிய தகவல்!

இத்திட்டத்தின் பலனைப் பெற, இறந்த தொழிலாளி கொரோனா தொற்று கண்டறியப்பட்ட தேதியில் வேலையில் இருந்திருக்க வேண்டும். அதே நேரத்தில், குறைந்தபட்சம் 35 நாட்களுக்கு அதிகபட்சமாக ஒரு வருட காலப்பகுதியில் பங்களிப்பை செலுத்தியிருக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. இப்போது ஜனவரி 18 ஆம் தேதி வரை ESIC மூலம் சுமார் 6,006 கொரோனா நிவாரணத் தொகைக்கான கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 4,750 கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட்டு, 11,253 பயனாளிகளுக்கு சுமார் ரூ.28.44 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – அகவிலைப்படி (DA) அரியர் தொகை பற்றிய முக்கிய தகவல்!

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு துரதிருஷ்டவசமாக உயிரிழக்கக்கூடிய ஊழியர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக, திருத்தப்பட்ட தகுதி நிபந்தனைகளுடன் கூடிய ESI கொரோனா நிவாரணத் திட்டத்தை மேலும் ஒரு வருடத்திற்கு, அதாவது 2023 மார்ச் 23 வரை நீட்டிக்க முன்மொழியப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 2021-22க்கான ESIC இன் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் 2022-23க்கான பட்ஜெட் மதிப்பீடுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!