ஆகஸ்ட் 28ம் தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு – குஜராத் அரசு உத்தரவு!

0
ஆகஸ்ட் 28ம் தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு - குஜராத் அரசு உத்தரவு!
ஆகஸ்ட் 28ம் தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு - குஜராத் அரசு உத்தரவு!
ஆகஸ்ட் 28ம் தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு – குஜராத் அரசு உத்தரவு!

குஜராத் மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக வரும் ஆகஸ்ட் 28ம் தேதி வரை இரவு ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக அதிகாரபூர்வ உத்தரவில் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இரவு ஊரடங்கு நீட்டிப்பு:

குஜராத் மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்பு அதிக அளவில் இருந்ததால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அனைத்தும் தீவிர முறையில் கண்காணிக்கப்பட்டது. முன்னதாக கொரோனா பாதிப்பு மாநிலம் முழுவதும் மெல்ல குறைந்து வந்தது. எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. தளர்வுகளை மக்கள் முறையாக பயன்படுத்ததால் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – அரசு உத்தரவு!

குஜராத் அரசு கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையின் படி, மாநிலத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,25,166 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மாநிலத்தில் மொத்தம் 6.18 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், பாவ்நகர், ஜாம்நகர், காந்திநகர் மற்றும் ஜுனாகத் ஆகிய இடங்களில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு ஆகஸ்ட் 28 வரை அமலில் இருக்கும் என்று உத்தரவிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும், ஜூலை 29ம் தேதி அன்று இறுதியாக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் ஆகஸ்ட் 28 வரை தொடர்ந்து அமலில் இருக்கும். மேலும், உணவகங்கள் இரவு 10 மணி வரை செயல்படலாம் மற்றும் பொது விழாக்களில் மக்கள் அதிகபட்சம் 400 பேர் வரை கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஜூலை 29ம் தேதி அன்று விநாயகர் உற்சவ விழா காரணமாக அதிகபட்சம் ஒன்பது அடி வரையில் சிலை வைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!