இன்று முதல் பேருந்து சேவைகள் நிறுத்தம் – மாநில அரசு அறிவிப்பு!!

0
இன்று முதல் பேருந்து சேவைகள் நிறுத்தம் - மாநில அரசு
இன்று முதல் பேருந்து சேவைகள் நிறுத்தம் - மாநில அரசு
இன்று முதல் பேருந்து சேவைகள் நிறுத்தம் – மாநில அரசு அறிவிப்பு!!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் புதன்கிழமை (மே 5) முதல் மதியம் 12 மணிக்கு பிறகு பொது அல்லது தனியார் போக்குவரத்து சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து சேவை நிறுத்தம்:

நாடு முழுவதும் வேகமெடுத்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி ஆந்திர மாநிலத்திலும் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, புதன்கிழமை அதாவது இன்று (மே 5) முதல் நண்பகல் 12 மணிக்குப் பிறகு எந்தவொரு பொது அல்லது தனியார் பேருந்து போக்குவரத்தும் இயங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று (மே 4) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையிலான பயணத்திற்கு ‘இது’ தேவையில்லை – மருத்துவ கவுன்சில் அறிவிப்பு!!

அதன்படி ஆந்திராவிலிருந்து அனைத்து மாநிலங்களுக்கு செல்லும் பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஆந்திர மாநில பஸ் டிப்போக்களில் பணிபுரிந்து வந்த ஊழியர்களின் எண்ணிக்கையை அம்மாநில போக்குவரத்து கழகம் குறைத்துள்ளது. இது பற்றி ஆந்திர மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.பி.தாகூர் தெரிவிக்கையில், ‘சாதாரண மக்களின் போக்குவரத்துத் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ஆனால் அதே நேரத்தில் பொருளாதார நிலையைப் பற்றியும் நாங்கள் சிந்திக்க வேண்டும்’ என கூறியுள்ளார். முன்னதாக ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு அரசு பேருந்துகளில் பயணிகள் விகிதம் 40% ஆக குறைக்கப்பட்டது. இதன் விளைவாக மக்கள் பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவதில்லை. இந்த சூழலில் தற்போது இயங்கும் ரயில்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளதால், போக்குவரத்து செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here