புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

0
புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

புதுச்சேரியில் கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவி வருவதால் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்:

புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மே மாதம் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் புதுச்சேரியில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்குகிறது. இதனால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. மேலும் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு விதிமுறைகளில் கூடுதல் கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.

  • இது குறித்து அவர் கூறுகையில், ஏற்கனவே புதுச்சேரியில் அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இருக்கும். மேலும் கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடரும்.
  • மேலும் சில கட்டுப்பாடுகள் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஜூஸ் கடைகள் செயல்பட அனுமதி இல்லை.

TN Job “FB  Group” Join Now

  • மேலும் அத்தியாவசிய பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டும் இயங்க வேண்டும். மற்ற தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • மருந்து, மருத்துவம், சானிடைசர், ஆக்சிஜன், பாதுகாப்பு, விவசாயம், உரம் மற்றும் அவை தொடர்பான தொழிற்சாலைகள் செயல்படலாம்.
  • மேலும் இயங்கப்படும் தொழிற்சாலைகளில் தேவையான பேக்கேஜிங் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்,அவற்றுக்கான ஆட்டோ மொபைல் தொழிற்சாலைகள், ஏற்றுமதி தொழிற்சாலைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • தொழிற்சாலைகளிலேயே தங்கி வேலை செய்யும் வசதி உள்ள தொழிற்சாலைகளுக்கு ஊரடங்கில் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கு சொந்தமான வாகனங்களில் தான் ஊழியர்கள் பயணம் செய்ய வேண்டும்.
  • மேலும் அவ்வாறு வேலைக்கு செல்லும் போது அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். மற்றபடி தனியார் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்.
  • மளிகை, காய்கறி கடைகள் செல்லுவோர் தங்களது பகுதிகளில் உள்ள கடைகளில் வாங்க வேண்டும்.
  • மருத்துவம், இன்டர்வியூ, திருமணம் உள்ளிட்ட காரணங்களுக்காக வாகனங்களில் செல்லலாம், அவ்வாறு செல்லும் போது சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.
  • தொழிற்சாலைகளில் ஊழியர் யாருக்கேனும் கொரோனா தொற்று ஏற்பட்டால் அவரது பிரிவில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
  • தொழிற்சாலை முழுவதும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
  • மேலும் கொரோனா பரவல் காரணமாக உயிரிழந்தவர்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.
  • பலர் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்து இதய நோய் உள்ளிட்ட இணை நோய் ஏற்கனவே இருப்பதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என விளக்கம் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!