3 நாட்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – நியூசிலாந்தில் 6 மாதங்களுக்கு பின் கொரோனா தொற்று!
நியூசிலாந்து நாட்டில் 6 மாதங்களுக்கு பின்னர் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு:
நியூசிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக பரவி வந்ததால் கடந்த ஆண்டு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் நாட்டில் முற்றிலுமாக கொரோனா பாதிப்பு இல்லாததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது 6 மாதங்களுக்கு பின்னர் நியூசிலாந்தில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக தொழிற்பயிற்சி மையங்களில் புதிய பாடப்பிரிவுகள் – அமைச்சர் உத்தரவு!
இது தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், கோவிட் -19 ன் உருமாறிய டெல்டா வகை தொற்று நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் செவ்வாய்க்கிழமையான இன்று முதல் நாட்டில் 3 நாட்கள் முழுமையாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதாக தெரிவித்தார். மேலும், 6 மாதங்களாக எந்த தொற்று பரவலும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது உருமாறிய டெல்டா வகை தொற்று பாதிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்கவில்லையென்றால் என்ன பாதிப்புகள் மேலும் ஏற்படும் என்பதை நாங்கள் முன்னதாகே அறிந்துள்ளோம்.
TN Job “FB
Group” Join Now
ஆக்லாந்தை சேர்ந்த 58 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில், 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்து நாட்டில் வெறும் 26 இறப்புகள் மட்டுமே கொரோனா தொற்றினால் பதிவாகியுள்ளது. நாட்டில், தீவிர கட்டுப்பாடுகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஆக்லாந்து மற்றும் அருகிலுள்ள கோரமண்டல் பகுதி முழுவதும் ஒரு வாரம் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.