இந்தியாவின் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு – மத்திய சுகாதாரத்துறை!
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், 2 மாவட்டங்களில் மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய இணை சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் பரவல் கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கியது. ஆரம்பத்தில் மெல்ல ஆரம்பித்து பின்னர் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொற்று பாதிப்பு உச்சத்தை அடைந்தது. மத்திய மற்றும் மாநில அரசுகள் தொற்று பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு தேவையான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். அனைத்து மாநிலங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு – பாரதியார் பல்கலைக்கழகம்!
இதன் விளைவால் தற்போது சில வாரங்களாக நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கொரோனா பரவல் குறித்து தெரிவித்துள்ளனர். அதில், நாடு முழுவதும் பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், கடந்த நான்கு வாரங்களாக நாட்டின் 7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதில், கேரளத்தில் 7, மணிப்பூரில் 5, மேகாலாயாவில் 3 மாவட்டங்கள் உள்ளது.
TN Job “FB
Group” Join Now
மேலும், மொத்தம் 62 மாவட்டங்களில் மட்டுமே தினசரி பாதிப்பு 100 க்கும் அதிகமாக உள்ளது. பித்தொற்று பதிப்பில் இருந்து தினசரி குணமடைவோர் விகிதம் 97.4% ஆக உள்ளது. தொற்றின் வார பாதிப்பு விகிதம் குறைந்து வந்த போதிலும், கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது. தொடர்ந்து இது குறித்து மாநில அரசுகளுடன் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார். பாதிப்பு குறைந்து பள்ளிகள் மீண்டு திறக்க அரசு ஆலோசித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.