மீண்டும் ஒன்று கூடிய ‘குக் வித் கோமாளி’ நட்சத்திரங்கள் – புதிய ஷோ தொடக்கம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சி முடிந்து சில மாதங்கள் ஆன நிலையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 கொண்டாட்டம் நிகழ்ச்சியில் அனைத்து குக் மற்றும் கோமாளிகளும் மீண்டும் இணைந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குக் வித் கோமாளி:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி . மக்களிடம் அதிகம் வரவேற்பை இந்த ஷோ பெற்றதால் அடுத்தடுத்து இரண்டு சீசன்கள் தொடங்கப்பட்டன. இரண்டாவது சீசன் தற்போது முடிவடைந்த நிலையில், மூன்றாவது சீசனுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் சேர்ந்து கோமாளிகள் செய்யும் சேட்டைக்கு சிரித்து சிரித்து உங்கள் வயிறு புண்ணாகும். அந்த அளவுக்கு சுவாரஸ்யத்தையும், நகைச்சுவையும் தரக்கூடியது இந்த நிகழ்ச்சி.
மறு உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க தடை – மாநில அரசு அறிவிப்பு!
குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட புகழ் மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பெற்றார். அவரது ரசிகர் பட்டாளம் உயர்ந்தது. மேலும் அவருக்கு பட வாய்ப்புகளும் அதிகரித்தன. அது மட்டுமில்லாமல் ஷிவாங்கி, அஸ்வின், மணிமேகலை என பலருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. வழக்கமாக ஒரு பிரபலமான ரியாலிட்டி ஷோ முடிந்த பின்னர் விஜய் டிவி சார்பில் கொண்டாட்டம் நடத்தப்படும்.
TN Job “FB Group” Join Now
கடந்த வாரம் கனா காணும் காலங்கள் கொண்டாட்டம் ஒளிபரப்பானது. ஏற்கனவே பிக் பாஸ் கொண்டாட்டம் நடத்தப்பட்டது. அந்த வரிசையில் தற்போது குக் வித் கோமாளி கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது . இந்த நிகழ்ச்சிக்காக குக் வித் கோமாளி நட்சத்திரங்கள் ஒன்று கூடி உள்ளனர். இந்த கொண்டாட்டம் நிகழ்ச்சியையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.