‘குக் வித் கோமாளி’ ஸ்ருதிகா அர்ஜூனுக்கு நடந்தது குழந்தை திருமணம் – ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்!

0
'குக் வித் கோமாளி' ஸ்ருதிகா அர்ஜூனுக்கு நடந்தது குழந்தை திருமணம் - ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்!
'குக் வித் கோமாளி' ஸ்ருதிகா அர்ஜூனுக்கு நடந்தது குழந்தை திருமணம் - ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்!
‘குக் வித் கோமாளி’ ஸ்ருதிகா அர்ஜூனுக்கு நடந்தது குழந்தை திருமணம் – ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்!

சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டு வருகிற குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோவில் உள்ள போட்டியாளர்களுக்கென தனி ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் தனது சிரிப்பால் மக்களை கவர்ந்த நடிகை ஸ்ருதிகா அர்ஜூன், அவரது திருமணத்தை குறித்து ரசிகர்களிடம் ஷேர் செய்த வீடியோ வைரல் ஆகியுள்ளது.

ஸ்ருதிகா அர்ஜூன்:

ஆரம்ப கட்டத்தில் இருந்தே அதிக ரசிகர்களை ஈர்த்த ரியாலிட்டி ஷோ என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். சமையல் செய்து சுவை செய்யும் ஷோவையே நகைச்சுவையோடு கலந்து புதுவிதமாக உருவாகிய ஷோ தான் குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி மக்களிடையே அதிக ஆதரவை பெற்று இன்று வரை வெற்றிகரமாக உலகமெங்கும் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் உள்ளார்களோ அந்த அளவுக்கு இதில் பங்கு பெரும் போட்டியாளர்களுக்கும் தனி தனி ரசிகர் கூட்டங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

துரோகம் செய்த கணவன், கையும் களவுமாக பிடித்த செல்லம்மா – விஜய் டிவி சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!

அந்த வகையில் சீசன் 3ல் கலந்து கொண்ட ஸ்ருதிகா அர்ஜூன் அவரது சிரிப்பாலும், குழந்தை தனமான வெகுளி பேச்சாலும் அதிகளவு ரசிகர்களை ஈர்த்தவர். இவ்வாறு சமூக வலைத்தளங்களில் அதிகளவு ஆக்டிவ் ஆக இருக்கும் ஒரு நபர் இவர். அவரை குறித்த வீடியோ, புகைப்படங்கள் என ரசிகர்களுக்காக தொடர்ந்து இன்ஸ்டாகிராம் வழியாக ஷேர் செய்து லைக்குகளை குவித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது அவர் திருமணம் குறித்து பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது அவரது பள்ளி பருவத்திலே திரை துறைக்கு வந்த ஸ்ருதிகா, அவரது 17 வயதில் தித்திக்குதே படம் மூலம் மக்களிடத்தில் அறிமுகமானார்.

Exams Daily Mobile App Download

அதன் பிறகு சினிமாத்துறைக்கு முடக்கு போட்டு விட்டு படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். படிப்பை முடித்த கையோடு திருமணமும் செய்து கொண்டார். அதாவது 23 வயதில் அவரது திருமண வாழ்க்கை ஆரம்பமாகியது. என்னுடைய திருமணம், இந்த ஜென்ரேஷன் பெண்களுக்கு குழந்தை திருமணம். ஆனால் எனக்கு அப்படியில்லை. ஏனென்றால் இன்று ஒரு குழந்தைக்கு தாயாகவும், நல்ல மனைவியாகவும், பெண் தொழிலதிபராகவும் நான் கலக்கி கொண்டிருக்கிறேன் என்றும் ஸ்ருதிகா தெரிவித்துள்ளார். இது போன்ற ஸ்ருதிகாவின் காதல் மற்றும் திருமணம் குறித்து பேசிய பேட்டி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here