துரோகம் செய்த கணவன், கையும் களவுமாக பிடித்த செல்லம்மா – விஜய் டிவி சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!

0
துரோகம் செய்த கணவன், கையும் களவுமாக பிடித்த செல்லம்மா - விஜய் டிவி சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!
துரோகம் செய்த கணவன், கையும் களவுமாக பிடித்த செல்லம்மா - விஜய் டிவி சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!
துரோகம் செய்த கணவன், கையும் களவுமாக பிடித்த செல்லம்மா – விஜய் டிவி சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!

TRPயில் போட்டி போடும் சேனல்கள் வரிசையில் இருக்கும் விஜய் டிவி, தற்போது தாய் பாசத்தை மையமாக வைத்து “செல்லம்மா” என்ற புதிய சீரியலை களமிறக்கி இருக்கிறது. இந்த சீரியலின் இரண்டாவது எபிசோட் குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.

செல்லம்மா சீரியல் ப்ரோமோ:

சின்னத்திரையில் பல சுவாரஸ்யமான கதையுடன் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என பல சேனல்கள் TRP அதிகரிக்க வேண்டும் என போட்டி போட்டுக் கொண்டு பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. ஆனால் அதில் விஜய் டிவி சீரியல்கள் தனித்தன்மையுடன் இருப்பதால் மக்கள் அதனை விரும்பி பார்க்கின்றனர். அந்த வகையில் காற்றுக்கென்ன வேலி, பாவம் கணேசன், நம்ம வீட்டு பொண்ணு, தென்றல் வந்து என்னை தொடும், முத்தழகு, ஈரமான ரோஜாவே சீசன் 2, நாம் இருவர் நமக்கு இருவர் 2, மௌனராகம் 2, தமிழும் சரஸ்வதியும், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 என ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

ராதிகா உடன் போன் பேச முடியாமல் தவிக்கும் கோபி, இன்னும் சிலரை அழைக்க திட்டமிடும் பாக்கியா – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

ஒவ்வொரு சீரியலும் தனி கதையுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த வரிசையில் தற்போது புது சீரியல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே முத்து படத்தின் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்த “வேலைக்காரன்” சீரியல் முடிவடைந்ததை அடுத்து தற்போது “செல்லம்மா” என்ற சீரியல் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வேலைக்காரன் சீரியல் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பானது. அதே போல செல்லம்மா சீரியலும் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரண்டாவது எபிசோடு என்பதால் அது குறித்த ப்ரோமோ வெளியானது. அதில் தன்னிடம் கிராமத்தில் தவறாக நடக்க முயற்சிக்கும் ஊர் பெரியவர் மற்றும் அவரது அடியாட்களிடமிருந்து பெண் குழந்தையுடன் தப்பித்து தனது கணவனை தேடி சென்னைக்கு வருகிறாள் செல்லம்மா. சரியான முகவரிக்கு வந்தும் அந்த வீட்டிலிருக்கும் பெண், செல்லம்மா கூறும் பெயரில் இங்கு யாரும் இல்லை என்று கூறுகிறாள். சோகத்துடன் திரும்ப செல்ல முயலும் போது வீட்டில் மாட்டி இருக்கும் போட்டோ ஒன்றை பார்த்து அதிர்ச்சியடைகிறாள். காரணம் அந்த போட்டோவில் தன்னிடம் பேசும் பெண்ணுடன் இருப்பது தன் கணவன் என பார்த்துவிடுகிறாள்.

Exams Daily Mobile App Download

உடனே மீண்டும் வீட்டிற்குள் நுழையும் செல்லம்மா அந்த பெண்ணிடம் உன் கணவன் விநாயகத்தை கூப்பிடு என்று கோபமாக சொல்கிறாள். ஆனால் அந்த பெண்ணுக்கும் ஒன்றும் புரியவில்லை, காரணம் செல்லம்மாவின் கணவன் மாணிக்கம் இந்த பெண்ணிடம் பெயரை மாற்றி போலி பெயரில் வாழ்ந்து வருகிறாள். பின்னர் ரூமை விட்டு வெளியே வரும் விநாயகம் என்கிற மாணிக்கம், தன் முதல் மனைவி செல்லம்மாவை கண்டு அதிர்ச்சி அடைகிறான். இத்துடன் ப்ரோமோ முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!