வருங்கால மனைவியுடன் ‘குக் வித் கோமாளி புகழ்’ வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

0
வருங்கால மனைவியுடன் 'குக் வித் கோமாளி புகழ்' வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் உற்சாகம்!
வருங்கால மனைவியுடன் 'குக் வித் கோமாளி புகழ்' வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் உற்சாகம்!
வருங்கால மனைவியுடன் ‘குக் வித் கோமாளி புகழ்’ வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்றாகவும், மக்களால் அதிகளவில் பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி திகழ்கிறது. கோமாளிகள் அடிக்கும் லூட்டிகளை மக்கள் அதிக அளவில் விரும்பி பார்த்து வருகின்றனர். அதில் முக்கியமான இடத்தை பெற்று புகழின் உச்சியில் இருக்கும் புகழ் இணையத்தில் அவரது காதலியுடன் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி:

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒவ்வொரு வார இறுதியிலும் மக்களை சிரிக்க வைக்கும் வகையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி தொடங்கப்பட்டது. ஆரம்பத்திலேயே ரசிகர் பட்டாளத்தை குவித்த பெருமை இந்த நிகழ்ச்சிக்கு மட்டுமே சேரும். ஏனென்றால் ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு கிழமைகளில் எப்பேர்ப்பட்ட வேலையாக இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு டிவிக்கு முன் உட்கார்ந்திருக்கும் அளவுக்கு ரசித்து பார்க்கிறார்கள். இதில் பங்கு கொண்ட அனைத்து கோமாளிகளுக்கும் நல்ல ரீச் கிடைத்தாலும், புகழுக்கு அதிகளவில் கிடைத்தது என்றே சொல்லலாம்.

சஞ்சீவ் குறித்து ஆல்யா மானசா சொன்ன சூப்பர் தகவல் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

இவ்வாறு புகழ் தனது மீடியா வாழ்க்கையை 2016ல் ஒளிபரப்பான “சிரிப்புடா” என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் துவங்கினார். இதையடுத்து, ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் மூலம் கிடைத்த பேருக்கும், புகழுக்கும் அளவே இல்லை. அதாவது அவர் எங்கு சென்றாலும் ரசிகர் பட்டாளம் சூழ்ந்து கொண்டு கொண்டாடுவார்கள் அந்த அளவுக்கு பிரபலத்தை இந்நிகழ்ச்சி பெற்று கொடுத்தது. தல நடிப்பில் வெளியான ‘வலிமை’ மற்றும் ‘எதற்கும் துணிந்தவன்’ போன்ற படங்களில் சின்ன ரோல்களில் நடித்து வந்த புகழ் தற்போது ஹீரோவாகவும் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

அதை தொடர்ந்து, சமீபத்தில் தன்னுடைய நெருங்கிய நண்பர்களுடன் தனது காதலியின் பிறந்த நாள் விழாவை கிராண்டாக ஹோட்டலில் கொண்டாடியிருந்தார். அந்த கொண்டாட்ட வீடியோவை புகழ் அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இந்நிலையில், தற்போது தனது காதலியான வருங்கால மனைவியுடன் இணைந்து ரீல்ஸ் ஒன்றை செய்து அந்த ரொமான்டிக் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்ட்டார். இதனால் ரசிகர்கள் பலரும் பாராட்டு மழைகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!