குக் வித் கோமாளி’ சிவாங்கி கையை பிடித்த ரசிகர்கள், அடுத்து நடந்த சம்பவம் – வைரலாகும் வீடியோ!

0
குக் வித் கோமாளி' சிவாங்கி கையை பிடித்த ரசிகர்கள், அடுத்து நடந்த சம்பவம் - வைரலாகும் வீடியோ!
குக் வித் கோமாளி' சிவாங்கி கையை பிடித்த ரசிகர்கள், அடுத்து நடந்த சம்பவம் - வைரலாகும் வீடியோ!
குக் வித் கோமாளி’ சிவாங்கி கையை பிடித்த ரசிகர்கள், அடுத்து நடந்த சம்பவம் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட சிவாங்கி தற்போது தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அளிக்கப்பட்ட வரவேற்பு வீடியோ வெளியாகியுள்ளது.

சிவாங்கி வருகை:

விஜய் டிவியில் பல சீசன்களை கடந்து வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் திரை உலகிற்கு பல திறமையான பாடகர்கள் கிடைத்துள்ளனர். மேலும் குழந்தைகளுக்கு என்று தனியாக ஒரு போட்டி நடத்தப்படும். 10 வருடங்களுக்கு மேலாக சென்று கொண்டிருக்கும் இந்த சூப்பர் ஹிட் நிகழ்ச்சியில் தமிழ் திரை உலகின் முன்னணி பாடகர்கள் பலரும் நடுவராகவும், சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்வார்கள். தமிழக மக்களின் விருப்பமான நிகழ்ச்சியாகவும் இது இருந்து வருகிறது.

விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியை பிரியங்காவுக்கு பதிலாக தொகுத்து வழங்குவது இவர் தான்? ரசிகர்கள் ஷாக்!

அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக அறிமுகம் ஆனவர் பாடகி சிவாங்கி. கேரளத்தை பூர்வீகமாக கொண்ட இவரின் அம்மா, அப்பா இருவருமே பாடகர்கள் தான். இனிமையான குரல் வளத்தை கொண்டிருக்கும் சிவாங்கியின் செயல்கள் அனைத்தும் ஒரு சிறு குழந்தையை போல் கள்ளம், கபடம் இல்லாமல் இருக்கும். இவரின் குழந்தைத் தனமான பேச்சால் மக்கள் இவரை அதிகம் ரசித்து வருகின்றனர். இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி மூலம் சிவாங்கிக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கிடைத்தனர்.

கனா காணும் காலங்கள் ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் – புதிய சீசன், புது கலாட்டா!

தற்போது சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் மாலில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சிவாங்கிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்ஸ்டாகிராம் அலுவலகத்தில் இருந்து நேரடியாக இளைஞர்களுக்கான திறமையை வெளிப்படுத்தும் மேடை என்று நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த சிவாங்கிக்கு அங்கு கூடி இருந்த கூட்டம் முழுவதும் ஆரவாரமாக வரவேற்பு கொடுத்தனர். அவரிடம் கை கொடுப்பதற்காக பலரும் முண்டியடித்துக் கொண்டு வந்தனர். இதனால் சிவாங்கி யாருக்கும் அடிபட்டு விடப்போகிறது, வராதீர்கள் என்று தடுக்கிறார். அதையும் மீறி ரசிகர்கள் கோரிக்கை வைக்க தானே முன் வந்து ரசிகர்களுக்கு கை கொடுத்து செல்ஃபி எடுத்துக் கொண்டார். இதனை எதிர்பார்க்காத ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here