விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியை பிரியங்காவுக்கு பதிலாக தொகுத்து வழங்குவது இவர் தான்? ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியை பிரியங்காவுக்கு பதிலாக தொகுத்து வழங்குவது இவர் தான்? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியை பிரியங்காவுக்கு பதிலாக தொகுத்து வழங்குவது இவர் தான்? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியை பிரியங்காவுக்கு பதிலாக தொகுத்து வழங்குவது இவர் தான்? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியின் முன்னணி விஜேவான பிரியங்கா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருவதால், இவருக்கு பதிலாக ‘சூப்பர் சிங்கர்’ ஜூனியர் சீசன் 8 நிகழ்ச்சியை KPY தீனா தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூப்பர் சிங்கர்

பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் மூலம் மக்களின் மனம் கவர்ந்த விஜய் டிவியில் தற்போது புத்தம் புதியதொரு நிகழ்ச்சி ஒன்று லான்ச் செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 சீசன்களாக ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது ‘சூப்பர் சிங்கர்’ தான். இந்த நிகழ்ச்சி கடந்த 2006ம் ஆண்டு முதல் இன்று வரையும் சீனியர் மற்றும் ஜுனியர் சீசன்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

கனா காணும் காலங்கள் ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் – புதிய சீசன், புது கலாட்டா!

இதன் ஒவ்வொரு சீசனில் கலந்து கொள்ளும் பல போட்டியாளர்கள் இன்று தமிழ் சினிமாவின் பின்னணி பாடகர்களாக உயர்ந்துள்ளனர். இப்படிப்பட்ட பெருமைக்குரிய ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி இப்போது ஜுனியர்களுக்காக ஆரம்பிக்க உள்ளது. அந்த வகையில் கடந்த வாரத்துடன் முடிவு பெற்ற ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சிக்கு பதிலாக வருகின்ற வாரங்களில் ‘சூப்பர் சிங்கர்’ சீசன் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான கிராண்ட் லான்ச் நாளை 3 மணியில் இருந்து சிறப்பு எபிசோடாக வெளியாக உள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகியதற்கு இது தான் காரணம்? மனம் திறந்த அகிலன்!

இந்த ஜுனியர் சீசனிலும் பின்னணி பாடகர்கள் சித்ரா, சங்கர் மகாதேவன், கல்பனா, நகுல் ஆகியோர் நடுவர்களாக அமர உள்ளனர். இந்நிலையில், கடந்த சில சீசன்களாக ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜே பிரியங்கா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். அதனால் விஜே பிரியங்காவுக்கு பதிலாக ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியை ஷிவாங்கி தொகுத்து வழங்குவதாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ‘சூப்பர் சிங்கர்’ ஜுனியர் சீசன் 8 நிகழ்ச்சியை மாகாபா ஆனந்துடன் இணைந்து KPY தீனா தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!