‘குக் வித் கோமாளி’ பாலா, ஷிவாங்கி & புகழ் பற்றிய உண்மைகளை சொன்ன மனோபாலா – ரசிகர்கள் உற்சாகம்!

0
'குக் வித் கோமாளி' பாலா, ஷிவாங்கி & புகழ் பற்றிய உண்மைகளை சொன்ன மனோபாலா - ரசிகர்கள் உற்சாகம்!
'குக் வித் கோமாளி' பாலா, ஷிவாங்கி & புகழ் பற்றிய உண்மைகளை சொன்ன மனோபாலா - ரசிகர்கள் உற்சாகம்!
‘குக் வித் கோமாளி’ பாலா, ஷிவாங்கி & புகழ் பற்றிய உண்மைகளை சொன்ன மனோபாலா – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு வரும் நடிகர் மனோபாலா, புகழ், ஷிவாங்கி, பாலா மற்றும் விஜே ரக்ஷன் குறித்து பேசி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

நடிகை மனோபாலா

தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான மக்களின் கவனம் ஈர்த்து ஒரு முன்னணி ஷோவாக திகழ்ந்து வருவது ‘குக் வித் கோமாளி’. விஜய் டிவியில் கடந்த 2 சீசன்களாக ஒளிபரப்பாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்த இந்த ‘குக் வித் கோமாளி’ ஷோ தற்போது 3வது சீசனில் அடியடுத்து வைத்திருக்கிறது. இம்முறை இளைஞர்களை கவரும் வண்ணம் அம்மு அபிராமி, ரோஷினி, சந்தோஷ், தர்ஷன் என திரைப்பட்டாளங்களுடன், நகைச்சுவைக்கு மனோபாலா, கிரேஸ், அந்தோணி தாஸ் உட்பட 10 போட்டியாளர்கள் குக் ஆக இடம்பிடித்துள்ளனர்.

தனது கணவரை பிரிந்த “சரவணன் மீனாட்சி” சீரியல் நடிகை ரட்சிதா – வைரலாகும் தகவல்!

அதே போல இந்த சீசனில் கோமாளிகளிலும் மக்களின் பேவரைட் ஆன புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை ஆகியோருடன் குரேஷி, பரத் ஆகியோரும் கவனம் ஈர்த்து வருகின்றனர். இதில் குறிப்பாக புகழ் – ஷிவாங்கியின் அண்ணன் – தங்கை காம்போ, பாலாவின் பன்ச் வசனங்கள் என பல விஷயங்கள் இந்த சீசனிலும் இடம் பிடித்துள்ளது. தவிர கடந்த சீசனை போல இந்த சீசனிலும் பாலா, மனோபாலாவை அப்பாவாக தத்தெடுத்து கொள்ள அவரும் பாலாவுக்கு ஈடு கொடுத்து செய்யும் அட்டகாசங்கள் ரசிக்கும்படியாக அமைந்திருக்கிறது.

பாரதியுடன் சண்டையிடும் ஹேமா – வைரலாகும் ‘பாரதி கண்ணம்மா’ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

இந்நிலையில் நடிகர் மனோபாலா ‘குக் வித் கோமாளி’ ஷோ பற்றி பேசி வெளியிட்ட வீடியோ பதிவு ஒன்று தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. அதாவது, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக வரும் புகழ், ஷிவாங்கி, பாலா, விஜே ரக்ஷன் அனைவரும் ஷோவை நன்றாக எடுத்து செல்வதாகவும், இவர்களுடன் குரேஷி, பரத் ஆகியோரும் இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதாகவும் மனோபாலா குறிப்பிட்டுள்ளார். அதே போல செட் முழுவதும் கேமரா வைத்து அழகான முறையில் ஷோவை ஒளிபரப்பு செய்து வரும் குழுவினருக்கும் அந்த வீடியோவில் மனோபாலா நன்றி கூறி இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!