பாரதியுடன் சண்டையிடும் ஹேமா – வைரலாகும் ‘பாரதி கண்ணம்மா’ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

0
பாரதியுடன் சண்டையிடும் ஹேமா - வைரலாகும் 'பாரதி கண்ணம்மா' ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!
பாரதியுடன் சண்டையிடும் ஹேமா - வைரலாகும் 'பாரதி கண்ணம்மா' ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!
பாரதியுடன் சண்டையிடும் ஹேமா – வைரலாகும் ‘பாரதி கண்ணம்மா’ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்பில், பாரதியுடன் ஹேமா சண்டையிடுவது போலவும் அவர்களை லட்சுமி சமாதானம் செய்து வைப்பது போலவும் வெளியான கியூட்டான வீடியோ ஒன்று ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

பாரதி கண்ணம்மா

ஒவ்வொரு நாளும் எதிர்பாராத புத்தம் புதிய திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தற்போது லட்சுமி மற்றும் பாரதிக்கு இடையே நடைபெறும் அப்பா, மகள் பாசப்போராட்டங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இதுவரை லட்சுமிக்கு அவரது அப்பா யார் என்ற உண்மை தெரியாத பட்சத்தில், கண்ணம்மா தனது பிறந்த நாளன்று அந்த ரகசியத்தை சொல்வதாக கூறி இருக்கிறார். இதனால் லட்சுமி ஆர்வத்துடன் தனது அப்பாவை எதிர்பார்த்திருக்க, எங்கே கண்ணம்மா தன் பெயரை சொல்லிவிடுவாளோ என்று பாரதி பயத்தில் இருக்கிறார்.

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹிரி மரணம் – ரசிகர்கள், திரையுலகினர் இரங்கல்!

மறுபக்கத்தில் கண்ணம்மாவின் பிறந்தநாள் விழாவை தவிர்க்க நினைக்கும் பாரதி, வெளியூருக்கு செல்வதாக கூறிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கண்ணம்மாவின் பிறந்த நாளுக்கு பாரதி வருவாரா, லட்சுமியின் அப்பா பாரதி என்ற விஷயத்தை கண்ணம்மா சொல்வாரா என்ற எதிர்பார்பார்புடன் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கதைக்களம் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த கதைக்களம் நீண்ட நாட்களாக ஜவ்வாக இழுத்து கொண்டிருக்க, மறுபக்கத்தில் ஹேமா மற்றும் லட்சுமியின் ஸ்கூல் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினாவுக்கு கணவர் கொடுத்த ஷாக் – ரசிகர்கள் உற்சாகம்!

அந்த வகையில் தற்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்டு வரும் சில படப்பிடிப்பு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வரிசையில் தற்போது, நடிகர் அருணுடன் சண்டையிட்ட பேபி லிசா அவரை விட்டு விலகி உட்கார்ந்திருக்க, அங்கு வரும் ரக்ஷா அவர்கள் இருவருக்கும் சண்டை, பேச மாட்டார்கள் என்று கூறி விட்டு இருவரையும் அருகில் உட்கார வைக்கிறார். ஆனால், லிசா கோபித்து கொண்டு அங்கிருந்து செல்வது போல வெளியாகி இருக்கும் இந்த கியூட்டான வீடியோ ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!