5 வருடத்திற்கு முன்னரே காதலில் விழுந்த ‘குக் வித் கோமாளி’ புகழ் – அவரே அளித்த தகவல்!

0
5 வருடத்திற்கு முன்னரே காதலில் விழுந்த 'குக் வித் கோமாளி' புகழ் - அவரே அளித்த தகவல்!
5 வருடத்திற்கு முன்னரே காதலில் விழுந்த 'குக் வித் கோமாளி' புகழ் - அவரே அளித்த தகவல்!
5 வருடத்திற்கு முன்னரே காதலில் விழுந்த ‘குக் வித் கோமாளி’ புகழ் – அவரே அளித்த தகவல்!

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் புகழ், தனது 5 வருட காதல் மற்றும் திருமணம் குறித்து பகிர்ந்து கொண்ட விஷயங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

கோமாளி புகழ்

தமிழ் சின்னத்திரையில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ‘அது இது எது’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுமானவர் புகழ். மக்களை மகிழ்விக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் பல முறைகள் பெண் வேடமிட்டு சிரிப்புடா, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த புகழுக்கு ஆரம்பத்தில் சரியான வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. என்றாலும் தனக்கான இடத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற விடா முயற்சியுடன் முயன்று வந்த புகழ், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் கோமாளியாக அறிமுகமானார்.

கோபியின் விவாகரத்து பாத்திரத்தில் கையெழுத்திட்ட பாக்கியா – சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட்!

இந்த நிகழ்ச்சியில் சமையல் எதுவும் தெரியாத கோமாளியாக, குக்குகளுடன் டூயட் பாடி, முகபாவனைகளால் மக்களை சிரிக்க வைத்து வந்த புகழுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உருவானார்கள். குறிப்பாக புகழுக்காகவே பலரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை ரசிக்க ஆரம்பித்தனர். அந்த வகையில் கடந்த 2 சீசன்களாக ‘குக் வித் கோமாளி’ ஷோவில் கோமாளியாக கலந்து கொண்டு வரும் புகழுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்க தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ஒரு சில வாரங்களுக்கு முன்னர் புகழ் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அவருடன் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடி இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வெளியாகி வைரலானது. அதனுடன் புகழ் தனது காதலியுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என அனைத்தும் வலைதளங்களில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ன் இன்றைய எபிசோடில் புகழ் தனது காதலி குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

“பாக்கியலட்சுமி” சீரியலில் நீதிமன்றம் வரை சென்ற கோபி, பாக்கியா விவாகரத்து வழக்கு – ப்ரோமோ ரிலீஸ்!

அதாவது, கேரளா மாநிலத்தை சேர்ந்த பென்ஸி என்ற பெண்ணை 5 வருடங்களாக காதலித்து வருகிறாராம் புகழ். குறிப்பாக சிரிப்புடா நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போது, கோயமுத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பென்ஸியை சந்தித்த புகழ் அப்போதே காதலில் விழுந்து விட்டாராம். சிரிப்புடா நிகழ்ச்சியில் புகழை பார்த்து பென்ஸி காதலில் விழுந்து விட்டதாகவும் கூறி இருக்கிறார் அவர். மேலும், இந்த வருடத்தில் புகழுக்கு திருமணமும் நடக்க இருக்கிறதாம். இந்த தகவலை ‘குக் வித் கோமாளி’ ஷோவில் புகழ் பகிர்ந்து கொள்ள அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!