பாடகி கிரேஸ்ஸிடம் கோமாளிகள் செய்த லூட்டிகள் – வைரலாகும் “குக் வித் கோமாளி சீசன் 3” ப்ரோமோ!

0
பாடகி கிரேஸ்ஸிடம் கோமாளிகள் செய்த லூட்டிகள் - வைரலாகும்
பாடகி கிரேஸ்ஸிடம் கோமாளிகள் செய்த லூட்டிகள் - வைரலாகும் "குக் வித் கோமாளி சீசன் 3" ப்ரோமோ!
பாடகி கிரேஸ்ஸிடம் கோமாளிகள் செய்த லூட்டிகள் – வைரலாகும் “குக் வித் கோமாளி சீசன் 3” ப்ரோமோ!

விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி இருக்கும் நடிகர் கருணாஸ் அவர்களின் மனைவி கிரேஸ் அவர்களை கோமாளிகள் கலாய்த்து இருக்கும் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

குக் வித் கோமாளி சீசன் 3 ப்ரோமோ:

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களின் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு நகைசுவை சமையல் நிகழ்ச்சி ஆகும். இதுவரை இரண்டு சீசன்கள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது சீசன் போன வாரம் தொடங்கப்பட்டது. அதில் கடந்த இரண்டு சீசன்களில் கலக்கிய புகழ் இல்லாத காரணத்தால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். ஆனால் அவருக்கு பதிலாக கடந்த சீசன்களில் கலக்கிய மணிமேகலை, சுனிதா, சிவாங்கி, பாலா, சக்தி ஆகியோர் கோமாளிகளாக இருக்கின்றனர்.

மேலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாரதி கண்ணம்மா ரோஷினி, நடிகை வித்யூலேகா, மனோ பாலா ஆகியோர் களமிறங்கி இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் தங்களது சமையல் திறமையை வெளிக்காட்ட இருக்கின்றனர். அவர்களில் ஒருவராக நடிகர் கருணாஸ் அவர்களின் மனைவி கிரேஸ் களமிறங்கி இருக்கிறார். அவரை கோமாளிகள் கலாய்த்து பாடாய் படுத்துவது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

மீண்டும் ‘ராஜா ராணி’ சீசன் 3ல் களமிறங்கும் ஆலியா மானஸா & சஞ்சீவ் ஜோடி? உற்சாகத்தில் ரசிகர்கள்!

அதில் கிரேஸ் அணிந்திருந்த ஆடையை கோமாளிகள் கிழித்ததையும் அதையொட்டி அவர் புலம்பியதையும் பார்க்க முடிந்தது. தொடர்ந்து அவர் தனது குக்கின் தமிழை கலாய்த்தது காட்டப்பட்டுள்ளது. அதன் படி கடந்த சீசன்களை போலவே இந்த சீசனும் காமெடிக்கு உத்தரவாதம் தரும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இன்றைய எபிசோட் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!